For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆயுர்வேதத்தின்படி 'இந்த' டீ உங்க செரிமானத்தை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுதாம்...!

நீங்கள் எப்பொழுதும் புதிய எடை இழப்பு பானங்களைத் தேடுகிறீர்களானால், உங்கள் பானத்தில் அக்னி டீயைச் சேர்க்கவும். இது ஒரு அற்புதமான கொழுப்பை குறைக்கும் தேநீர். இது உங்களுக்கு திருப்தி உணர்வை அளிக்கிறது மற்றும் பசி உணர்வை தடு

|

நீங்கள் தேநீர் பிரியராக இருந்தால், அக்னி டீ அல்லது ஃபயர் டீ மற்றும் அது அளிக்கும் பல நன்மைகளைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். சில மூலிகை தேநீர் உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகின்றன. ஒவ்வொரு தேநீரும் உங்களுக்கு ஒவ்வொரு நன்மைகளை வழங்கிறது. அக்னி டீ முக்கியமாக செரிமான அமைப்புக்கு நன்மை பயக்கும் மற்றும் சுறுசுறுப்பாகவும் நச்சுகள் இல்லாமல் வைத்திருக்கவும் கூறப்படுகிறது. இந்த தேநீர் செய்முறையில் கெய்ன் மிளகு அடங்கும். ஆம், நீங்கள் படித்தது சரிதான். ஃபயர் டீ உண்மையில் கெய்ன் மிளகு வடிவில் மசாலா தொடுதலைக் கொண்டுள்ளது.

What is Ayurvedic Agani Tea and how it helps increase metabolism in tamil

இது தேநீரில் குறிப்பாக குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சேர்க்கப்படுகிறது. அக்னி டீயை எப்படி தயாரிப்பது மற்றும் அது தரும் நன்மைகளை அறிய இக்கட்டுரையை தொடர்ந்து படிக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆயுர்வேதத்தின்படி கூறுவது

ஆயுர்வேதத்தின்படி கூறுவது

ஆயுர்வேதத்தின் படி, உங்கள் உடல் ஐந்து கூறுகளால் ஆனது. நெருப்பு, நிலம், நீர், காற்று மற்றும் ஆகாயம். நெருப்பு என்பது நமது உடலின் செரிமான நெருப்பைக் குறிக்கிறது, இது செரிமானம் போன்ற செயல்பாடுகளைச் செய்கிறது. உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களைப் பிரித்தெடுத்து உணவை ஆற்றலாக மாற்றுகிறது. ஒரு வலுவான செரிமான நெருப்பு குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் பலவீனமான செரிமான நெருப்பு மோசமான குடல் ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் மற்றும் நச்சு குவிப்புக்கு வழிவகுக்கும். உங்கள் செரிமான நெருப்பை எரிய வைக்க, இந்த தேநீரை உங்கள் உணவில் சேர்த்து, அதன் அற்புதமான பயன்களை பெறுங்கள்.

MOST READ: சர்க்கரை நோயாளிகளே! உங்க குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த 'இந்த' ஒரு பொருள் போதுமாம்...!

சிறந்த வளர்சிதை மாற்றம்

சிறந்த வளர்சிதை மாற்றம்

வளர்சிதை மாற்றம் என்பது நீங்கள் உண்ணும் உணவு ஆற்றலாக மாற்றப்படும் விகிதமாகும். உங்கள் வளர்சிதை மாற்றம் வேகமானதாக இருந்தால், நீங்கள் எப்போதும் அதிக ஆற்றலுடன் இருப்பீர்கள், மேலும் அரிதாகவே எடை அதிகரிப்பீர்கள். ஏனென்றால், உங்கள் உடல் உங்களைப் பொருத்தமாக வைத்திருக்க கலோரிகளை திறமையாக எரிக்கிறது. இஞ்சி, கருப்பு உப்பு மற்றும் தேனுடன் வேகவைத்த கெய்ன் மிளகு உங்கள் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்றத்திற்கு ஊக்கத்தை அளிக்கிறது.

எடை இழப்பு

எடை இழப்பு

நீங்கள் எப்பொழுதும் புதிய எடை இழப்பு பானங்களைத் தேடுகிறீர்களானால், உங்கள் பானத்தில் அக்னி டீயைச் சேர்க்கவும். இது ஒரு அற்புதமான கொழுப்பை குறைக்கும் தேநீர். இது உங்களுக்கு திருப்தி உணர்வை அளிக்கிறது மற்றும் பசி உணர்வை தடுக்கும். அக்னி தேநீர் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுவதால், அது நச்சுத்தன்மையை விளைவிக்கும்.

வைட்டமின் சி-யின் ஆதாரம்

வைட்டமின் சி-யின் ஆதாரம்

கெய்ன் மிளகு வைட்டமின் சி-யின் வளமான ஆதாரமாக உள்ளது மற்றும் எலுமிச்சை சாறுடன் இணைந்தால், இந்த கலவையானது வைட்டமின் சி-யின் சக்தி நிரம்பிய டோஸை வழங்குகிறது.

MOST READ: டெய்லி 'இந்த' ஆறு உணவை நீங்க சாப்பிட்டீங்கனா? உங்க உடல் எடை ரொம்ப வேகமா குறையுமாம்...!

அக்னி தேநீர் செய்ய தேவையான பொருட்கள்

அக்னி தேநீர் செய்ய தேவையான பொருட்கள்

1 லிட்டர் தண்ணீர்

ஒரு சிட்டிகை கெய்ன் மிளகு

1 அங்குலம் இஞ்சி துண்டு

2 தேக்கரண்டி தேன்

1-2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு

சுவைக்கேற்ப கருப்பு உப்பு

செய்முறை

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதிக தீயில் வைக்கவும். அதில் ஒரு சிட்டிகை கெய்ன் மிளகு, தேன் மற்றும் கருப்பு உப்பு சேர்க்கவும். பின்னர், இஞ்சியை அரைத்து அதில் சேர்க்கவும். அது ஒரு கொதி நிலைக்கு வர வேண்டும். பின்னர் வெப்பத்தை நடுத்தரமாக மாற்றி, தேநீரை குறைந்தது 15 நிமிடங்கள் கொதிக்க விடவும். முடிந்ததும், தேநீரை சிறிது குளிர்வித்து, அதில் எலுமிச்சை சாற்றை கலக்கவும். இப்போது தேநீரை கோப்பைகலில் வடிகட்டி சூடாக குடிக்கவும்.

குறிப்பு- கெய்ன் மிளகு கிடைக்கவில்லை என்றால் நீங்கள் சிவப்பு மிளகாய் பொடியைப் பயன்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What is Ayurvedic Agani Tea and how it helps increase metabolism in tamil

Here we are explain to What is Ayurvedic Agani Tea and how it helps increase metabolism in tamil
Story first published: Thursday, September 16, 2021, 18:39 [IST]
Desktop Bottom Promotion