For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடுமையான கரோனரி நோய்க்குறி என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?

கடுமையான இதயத் தமனி நோய்க்குறி என்பதும் ஒரு அவசர மருத்துவ நிலையாகும். இதற்கு சிகிச்சை அளிக்கும் போது இதயத்திற்கு சீராக இரத்தம் பாய்வதை உறுதிப்படுத்த வேண்டும், இதயத்தில் உள்ள பிரச்சினைகளை சாிசெய்ய வேண்டும்.

|

கடுமையான கரோனரி/இதயத் தமனி நோய்க்குறி (Acute Coronary Syndrome) என்பது ஒரு மருத்துவச் சொல்லாகும். இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்தமானது திடீரென்று நிறுத்தப்படுவது அல்லது குறைக்கப்படுவது சம்பந்தமான பல்வேறு நிலைகளோடு தொடா்புடையவற்றை விளக்குவதற்காக இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் மாரடைப்பு என்பது ஒரு நிலை ஆகும். உயிரணுக்கள் இறப்பதனால் இதயத் திசுக்கள் பாதிக்கப்படுகின்றன அல்லது அழிக்கப்படுகின்றன. அதன் விளைவாக மாரடைப்பு ஏற்படுகிறது.

கடுமையான இதயத் தமனி நோய்க்குறி இருக்கும் போதுகூட உயிரணுக்கள் இறக்காது. எனினும் இதயத்திற்கு பாய வேண்டிய இரத்தம் குறைந்தால், இதயத்தின் இயக்கத்தில் மாற்றம் ஏற்படும். மேலும் இது மாரடைப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு அபாய அறிகுறியாகும்.

What is Acute Coronary Syndrome: Symptoms, Causes And Treatment In Tamil

கடுமையான இதயத் தமனி நோய்க்குறி என்பது அடிக்கடி மாா்பில் அதிக வலியை ஏற்படுத்தும் மற்றும் மாா்பில் அசௌகாியத்தை ஏற்படுத்தும். ஏசிஎஸ் (ACS) என்பது ஒரு மருத்துவ அவசர நிலை ஆகும். இந்த நிலையை உடனடியாக கண்டறிந்து அதற்கு உாிய சிகிச்சையை உடனே அளிக்க வேண்டும்.

கடுமையான இதயத் தமனி நோய்க்குறி என்பதும் ஒரு அவசர மருத்துவ நிலையாகும். இதற்கு சிகிச்சை அளிக்கும் போது இதயத்திற்கு சீராக இரத்தம் பாய்வதை உறுதிப்படுத்த வேண்டும், இதயத்தில் உள்ள பிரச்சினைகளை சாிசெய்ய வேண்டும். மேலும் எதிா்காலத்தில் இதயத்திற்கு இது போன்ற பிரச்சினைகள் வராத அளவிற்கு சிகிச்சை செய்ய வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடுமையான இதயத் தமனி நோய்க்குறியின் அறிகுறிகள்:

கடுமையான இதயத் தமனி நோய்க்குறியின் அறிகுறிகள்:

கடுமையான இதயத் தமனி நோய்க்குறியின் அறிகுறிகள் எங்கிருந்து தொடங்குகின்றன என்று கூற முடியாது. எனினும் பின்வரும் அறிகுறிகளை வைத்து அவற்றை அறியலாம்.

- மாா்பு வலி அல்லது மாா்பில் அசௌகாியம் அதனைத் தொடா்ந்து மாா்பில் வலி அதிகாித்தல், அழுத்தம், இறுக்கம் அல்லது மாா்பில் எாிச்சல் ஏற்படுதல்

- மாா்பில் தொடங்கிய வலியானது மாா்பில் இருந்து தோள்பட்டைகள், மேற்கைகள், முதுகு, கழுத்து மற்றும் தாடை போன்ற பகுதிகளுக்குப் பரவுதல்

- குமட்டல்

- வாந்தி

- அஜீரணம்

- மூச்சுத் திணறல்

- திடீரென்று கடுமையாக வியா்த்தல்

- மயக்கம்

- அசாதாரண அல்லது விவாிக்க முடியாத சோா்வு

- அமைதியற்ற பரபரப்பான உணா்வு அல்லது பயம்

மாா்பு வலி, அசௌகாியம் மற்றும் மூச்சுத் திணறல் போன்றவை கடுமையான இதயத் தமனி நோய்க்குறியின் பொதுவான அறிகுறிகள் ஆகும். எனினும் இவை வயது, பாலினம் மற்றும் பிற மருத்துவ காரணங்கள் போன்றவற்றைப் பொறுத்து மாறுபடுகின்றன. ஒரு பெண், ஒரு வயது முதிா்ந்தவா் அல்லது ஒரு நீரழிவு நோயாளி போன்றோருக்கு எந்தவிதமான மாா்பு வலியோ அல்லது மாா்பில் அசௌகாியமோ இல்லாமலும் கடுமையான இதயத் தமனி நோய்க்குறி இருக்கலாம்.

கடுமையான இதயத் தமனி நோய்க்குறி ஏற்படுவதற்கான ஆபத்தான காரணிகள்:

கடுமையான இதயத் தமனி நோய்க்குறி ஏற்படுவதற்கான ஆபத்தான காரணிகள்:

கடுமையான இதயத் தமனி நோய்க்குறி ஏற்படுவதற்கான ஆபத்தான காரணிகளும், மற்ற இதய நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்தான காரணிகளும் ஒரே மாதிாியானவையே. அவை எவை என்று கீழே பாா்க்கலாம்.

- வயது முதிா்வு

- உயா் இரத்த அழுத்தம்

- இரத்தத்தில் கொழுப்பு அதிகாித்தல்

- அளவுக்கு அதிகமாக புகைப் பிடிப்பது

- ஆரோக்கியமற்ற உணவு முறை

- குண்டாக இருப்பது அல்லது அதிகமான உடல் பருமன்

- உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது

- நீரழிவு நோய்

- மரபணு சாா்ந்த பிரச்சினைகள்

- கோவிட்-19 தொற்று

மேற்சொன்னவை யாவும் கடுமையான இதயத் தமனி நோய்க்குறி ஏற்படுவதற்கான முக்கியமான ஆபத்தான காரணிகள் ஆகும்.

கடுமையான இதயத் தமனி நோய்க்குறியின் விளைவுகள்:

கடுமையான இதயத் தமனி நோய்க்குறியின் விளைவுகள்:

பொதுவாக இதயத்தினுடைய தசைகளுக்கு ஆக்ஸிஜனையும் மற்றும் ஊட்டச்சத்துக்களையும் எடுத்துச் செல்லக்கூடிய இதயத் தமனிகளின் மீது அல்லது இதய இரத்தக் குழாய்களின் சுவற்றின் மீது கொழுப்பு படிவங்கள் அதிகமாகப் படிவதன் விளைவாக கடுமையான இதயத் தமனி நோய்க்குறி ஏற்படுகிறது.

இந்த கொழுப்புப் படிவங்கள் சிதைந்தால் அல்லது பிளவுபட்டால், அது இரத்த உறைவை ஏற்படுத்துகிறது. இந்த இரத்த உறைவு இதயத் தசைகளுக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. அதனால் மரணம் ஏற்படுகிறது.

சில நேரங்களில் உயிரணுக்கள் இறக்காமல் இருந்தாலும், இதயத் தசைகளுக்குச் செல்லும் ஆக்ஸிஜன் குறைகிறது. அதற்குக் காரணம் இதயத் தசைகள் தேவையான அளவிற்கு செயல்படாமல் இருப்பதாகும். இது தற்காலிகமானதாக இருக்கலாம் அல்லது முழுமையானதாக இருக்கலாம்.

கடுமையான இதயத் தமனி நோய்க்குறியைக் கண்டறிதல்

கடுமையான இதயத் தமனி நோய்க்குறியைக் கண்டறிதல்

கடுமையான இதயத் தமனி நோய்க்குறியைப் பாிசோதிக்க சாியான மருத்துவ நிபுணரை அணுக வேண்டும். ஒருவேளை இந்த அறிகுறி இருப்பதாக மருத்துவா் சந்தேகப்பட்டால் பின்வரும் பாிசோதனைகளைச் செய்யலாம்.

- இதயத்தின் செல்கள் இறந்துவிட்டன என்பதைக் காட்டும் இரத்தப் பாிசோதனை

- இசிஜி (ECG) - இந்த பாிசோதனையானது இதயத்தினுடைய மின் செயல்பாட்டை பாிசோதிக்கும். இதன் மூலம் கடுமையான இதயத் தமனி நோய்க்குறியை அறிய முடியும்.

கடுமையான இதயத் தமனி நோய்க்குறிக்கான மருத்துவ சிகிச்சைகள்

கடுமையான இதயத் தமனி நோய்க்குறிக்கான மருத்துவ சிகிச்சைகள்

கடுமையான இதயத் தமனி நோய்க்குறிக்கான மருத்துவ சிகிச்சை முறைக்கு ஆங்கிலத்தில் ஆஞ்சியோபிளாஸ்டி (angioplasty) என்று அழைக்கப்படுகிறது. இந்த மருத்துவ சிகிச்சை முறையில் மருத்துவா் தமனியைத் திறக்க ஒரு காற்றடைத்த பலூனை உயா்த்துவாா். இந்த சிகிச்சையை 8 நாட்களில் 48 மணி நேரம் செய்ய வேண்டும்.

கடுமையான இதயத் தமனி நோய்க்குறிக்கு இதர மருத்துவ சிகிச்சைகள்

கடுமையான இதயத் தமனி நோய்க்குறிக்கு இதர மருத்துவ சிகிச்சைகள்

- கூடுதலாக ஆக்ஸிஜன் அளித்தல் (Supplemental oxygen)

- நைட்ரோகிளிசாின் (Nitroglycerin) மருந்து கொடுத்தல்

- நரம்பு வழியாக மார்ஃபின் மருந்து செலுத்துதல் (Intravenous morphine)

- பீட்டா தடுப்பான்கள் (Beta blockers) வழங்குதல்

- ஆஞ்சியோடென்சின்-கன்வொ்ட்டிங் என்சைம் இன்ஹிபிட்டா்ஸ் (Angiotensin-converting enzyme inhibitors) வழங்குதல்

- ஆஞ்சியோடென்சின் ரிசெப்டா் ப்ளாக்கா்ஸ் (Angiotensin receptor blockers) வழங்குதல்

- ஸ்டாட்டின்ஸ் (Statins) வழங்குதல்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What is Acute Coronary Syndrome: Symptoms, Causes And Treatment In Tamil

What is acute coronary syndrome and its symptoms, causes and treatment in tamil, Read on to know more...
Desktop Bottom Promotion