For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் ஒரு கப் கறிவேப்பிலை டீ குடிப்பதால் உடலில் நிகழும் அற்புதங்கள் குறித்து தெரியுமா?

கறிவேப்பிலை பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பழங்காலம் முதலா பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரியுமா? முந்தைய காலத்தில் சில உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க கறிவேப்பிலையைக் கொண்டு டீ தயாரித்துக் குடிப்பார்களாம்.

|

தென்னிந்தியாவில் அன்றாட சமையலில் தாளிக்கும் போது பயன்படுத்தும் ஒர் பொதுவான பொருள் தான் கறிவேப்பிலை. இந்த கறிவேப்பிலை உணவிற்கு நல்ல மணத்தையும், சுவையையும் கொடுக்கும். இத்தகைய கறிவேப்பிலை ஆரோக்கியமானது என்பதை அனைவருமே அறிவோம். இருப்பினும், அதை மென்று சாப்பிட பிடிக்காது. எனவே சமையலில் சேர்க்கும் இந்த கறிவேப்பிலையை பெரும்பாலானோர் தூக்கி எறிவதுண்டு.

What Happens When You Drink Curry Leaf Tea Daily In Empty Stomach In Tamil

கறிவேப்பிலை உடலில் பல மாயங்களை செய்யக்கூடியது. நமக்கு தெரிந்தது எல்லாம் கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்பது மட்டுமே. ஆனால் கறிவேப்பிலை உடலில் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பழங்காலம் முதலா பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரியுமா? ஆம், முந்தைய காலத்தில் சில உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க கறிவேப்பிலையைக் கொண்டு டீ தயாரித்துக் குடிப்பார்களாம். உங்களுக்கு அந்த கறிவேப்பிலை டீயை எப்படி தயாரிப்பது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கறிவேப்பிலை டீயின் செய்முறை மற்றும் கறிவேப்பிலை டீ குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கறிவேப்பிலை டீ தயாரிப்பது எப்படி?

கறிவேப்பிலை டீ தயாரிப்பது எப்படி?

* முதலில் ஒரு கையளவு கறிவேப்பிலையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் கறிவேப்பிலையை போட்டு, அரை மணிநேரம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.

* பின் அதை வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

முக்கியமாக கறிவேப்பிலை டீயின் முழு பலனைப் பெற வேண்டுமானால், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்போது கறிவேப்பிலை டீ குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து காண்போம்.

புற்றுநோய் அபாயம் குறையும்

புற்றுநோய் அபாயம் குறையும்

உடலில் ப்ரீ-ராடிக்கல்கள் அதிகம் இருந்தால், அது புற்றுநோய் போன்ற பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். கறிவேப்பிலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. எனவே கறிவேப்பிலை டீயைக் குடிக்கும் போது, அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ப்ரீ-ராடிக்கல்களால் உடல் செல்கள் சேதமடைமடைவதைத் தடுக்கின்றன.

சர்க்கரை நோய் கட்டுப்படும்

சர்க்கரை நோய் கட்டுப்படும்

கறிவேப்பிலை டீயைக் குடிப்பதன் மூலம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். கறிவேப்பிலையினது இன்சுலினை உற்பத்தி செய்யும் செல்களைத் தூண்டிவிட்டு, சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. எனவே உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், மருத்துவரின் அனுமதியைப் பெற்று கறிவேப்பிலை டீயைக் குடிக்கலாம்.

மலச்சிக்கல் நீங்கி, செரிமானம் மேம்படும்

மலச்சிக்கல் நீங்கி, செரிமானம் மேம்படும்

கறிவேப்பிலை செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க உதவுகிறது. கறிவேப்பிலையில் உள்ள செரிமான நொதிகள், செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் கறிவேப்பிலையில் மலமிளக்கி பண்புகள் உள்ளதால், இது குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலைப் போக்கும். மேலும் இந்த டீயைக் குடிப்பதன் மூலம் வாய்வுத் தொல்லை பிரச்சனை நீங்கும்.

காலை சோர்வு

காலை சோர்வு

கர்ப்ப காலத்தில் பெண்கள் பொதுவாக சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் காலைச் சோர்வு அல்லது காலை சுகவீனம். ஆனால் கறிவேப்பிலை டீயைக் குடிப்பதன் மூலம், கர்ப்பிணிகள் வாந்தி, குமட்டல் மற்றும் காலைச் சோர்வு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். ஆனால் இந்த டீயைக் குடிக்கும் முன் மருத்துவரின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

தலைமுடி பிரச்சனைகள்

தலைமுடி பிரச்சனைகள்

கறிவேப்பிலையில் பீட்டா கரோட்டீன் மற்றும் புரோட்டீன் உள்ளது. இவை இரண்டுமே தலைமுடிக்கு மிகவும் இன்றியமையாத சத்துக்களாகும். எனவே கறிவேப்பிலை டீயைக் குடிப்பதன் மூலம், இது பொடுகுத் தொல்லை, தலைமுடி உதிர்வு, முடி ஒல்லியாவது போன்ற பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவுகிறது.

கொழுப்புக்களைக் குறைக்கும்

கொழுப்புக்களைக் குறைக்கும்

கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை எரிக்க பெரிதும் உதவுகிறது. மேலும் இது உடலின் மூலை முடுக்குகளில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை அகற்ற உதவுகிறது. எனவே கறிவேப்பிலை டீயை தினமும் குடித்து வருவதன் மூலம், உடல் சுத்தமாக இருப்பதோடு, தொப்பையும் குறைவதைக் காணலாம்.

மன அழுத்தத்தைக் குறைக்கும்

மன அழுத்தத்தைக் குறைக்கும்

கறிவேப்பிலையின் மணம் ஒரு நல்ல மன அழுத்த நிவாரணியாக செயல்படுகிறது. தற்போது மன அழுத்தம் தான் மக்கள் அனுபவிக்கும் பல பிரச்சனைகளுக்கு மூலக்காரணமாக உள்ளது. ஆகவே கறிவேப்பிலை டீயை தினசரி குடிப்பதன் மூலம், மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Happens When You Drink Curry Leaf Tea Daily In Empty Stomach In Tamil

In this article, we shared about the health benefits of drinking curry leaves tea. Read on to know more...
Story first published: Friday, September 30, 2022, 11:27 [IST]
Desktop Bottom Promotion