For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெய்லி நீங்க பாதாம் சாப்பிடுவதால் உங்க உடலில் ஏற்படும் அதிசயம் என்ன தெரியுமா?

பெரும்பாலான மக்கள் தங்கள் உயர் கொழுப்பின் அளவைப் பற்றி அறிந்துகொள்வது, அளவு சற்று அதிகமாகிவிட்ட பின்னரே செய்கிறார்கள். பாதாமில் உள்ள கொழுப்பு உள்ளடக்கம் உடலில் உள்ள நல்ல மற்றும் கெட்ட கொழுப்பை சமப்படுத்த உதவுகிறது.

|

சிற்றுண்டி என்பது ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவின் ஒரு பகுதியாகும். ஆனால் தவறான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது சிற்றுண்டி யோசனையையும், அதன் நன்மைகளையும் இழக்க செய்யும். பெரும்பாலான மக்கள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட ஸ்நாக்ஸை விரும்புகிறார்கள். அது உடலுக்கு பல்வேறு சுகாதார பிரச்சனைகளை ஏற்படுத்தும். பழங்கள், நட்ஸ் மற்றும் சால்ட் போன்ற ஆரோக்கியமான சிற்றுண்டிகளை எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லது.

What happens to your body when you eat almonds

மேலும், சிற்றுண்டிக்கு சரியான உணவுகளைப் பற்றிப் பேசினால், பாதாம் என்பது உங்களை முழுதாக உணர வைப்பதோடு மட்டுமல்லாமல் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. நீங்கள் தினமும் பாதாம் சாப்பிடும்போது உங்களுக்கு என்ன ஆகும் என்று யோசித்து இருக்கிறீர்களா? இல்லையெனில், இக்கட்டுரையில், அவற்றை உண்ண சரியான நேரம் மற்றும் அவற்றை சாப்பிடுவதால் உங்கள் உடலில் என்ன நடக்கும் என்பதையும் இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இது உங்கள் மனநிலையை மேம்படுத்துகிறது

இது உங்கள் மனநிலையை மேம்படுத்துகிறது

பாதாமில் இருக்கும் டிரிப்டோபான் எனப்படும் அமினோ அமிலம் உங்கள் மனநிலையை அதிகரிக்கும். வைட்டமின் பி 6 (வாழைப்பழம், ஓட்ஸ்) உடன் ஜோடியாக இருக்கும்போது, டிரிப்டோபன் உடலில் செரோடோனின் ஆக மாறுகிறது. செரோடோனின் ஒரு ஆற்றல் ஊக்கியாக செயல்படுகிறது, உங்கள் மனநிலையை மேம்படுத்துகிறது மற்றும் பதட்டத்தை குறைக்கிறது. உங்கள் ஓட்மீலில் சிறிது பாதாம் சேர்க்கவும் அல்லது வாழைப்பழத்துடன் சேர்த்து ஆரோக்கியமான மற்றும் எளிதான சிற்றுண்டியை தயாரிக்கவும்.

MOST READ: உங்க உடல் எடையை குறைக்க இந்த நான்கு பழங்களே போதுமாம்...!

உங்கள் நோய்களின் அபாயத்தை குறைக்கிறது

உங்கள் நோய்களின் அபாயத்தை குறைக்கிறது

பாதாமில் வைட்டமின் ஈ நிரம்பியுள்ளது. இது உங்கள் தினசரி மதிப்பில் வைட்டமின் ஈவின் 48 சதவீதத்தைக் கொண்டுள்ளது. வைட்டமின் ஈ நுகர்வு அல்சைமர் நோய், புற்றுநோய்கள் மற்றும் இருதய பிரச்சினைகள் ஆகியவற்றின் அபாயத்தையும் குறைக்கிறது.

உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும்

உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும்

ஆய்வுகள் படி, ஒரு சில பாதாம் உங்களை கால்சியம், மெக்னீசியம், மாங்கனீசு, வைட்டமின் கே, புரதம், துத்தநாகம் மற்றும் தாமிரம் ஆகியவற்றைக் கொண்டு பொதி செய்கிறது, இவை அனைத்தும் உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கொழுப்பைக் குறைக்கிறது

கொழுப்பைக் குறைக்கிறது

பெரும்பாலான மக்கள் தங்கள் உயர் கொழுப்பின் அளவைப் பற்றி அறிந்துகொள்வது, அளவு சற்று அதிகமாகிவிட்ட பின்னரே செய்கிறார்கள். பாதாமில் உள்ள கொழுப்பு உள்ளடக்கம் உடலில் உள்ள நல்ல மற்றும் கெட்ட கொழுப்பை சமப்படுத்த உதவுகிறது.

MOST READ: படுக்கைக்கு செல்வதற்கு முன்பு இதை நீங்க குடித்து வந்தால் இதய நோய் பாதிப்பு ஏற்படாதாம்...!

இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது

இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது

70 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்தியா உலகின் நீரிழிவு தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் குறைந்த அளவு மெக்னீசியத்தால் பாதிக்கப்படுகின்றனர். ஒரு ஆய்வில், டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு நாளும் 60 கிராம் பாதாம் பருப்பை 12 நாட்களுக்கு உட்கொள்ளும்போது, அவர்களின் இரத்த சர்க்கரையை கணிசமாகக் குறைவதாக கூறுகிறார்கள்.

உடல் எடையை குறைக்க உதவுகிறது

உடல் எடையை குறைக்க உதவுகிறது

எடை இழப்பு அனைவரின் மனதிலும் உள்ளது. உங்கள் உணவில் பாதாம் இருக்க வேண்டும் என்பதற்கு உடல் எடை குறைப்பும் மற்றொரு காரணம். பாதாம் நார்ச்சத்து, புரதத்தால் நிரம்பியுள்ளது, இது உங்களை அதிக நேரம் முழுமையாக வைத்திருக்கிறது மற்றும் அதிக உணவை உட்கொள்வதைத் தடுக்கிறது. இது பலரின் எடை அதிகரிப்பதற்கான முக்கிய காரணம். ஒவ்வொரு நாளும் ஒன்றுக்கு மேற்பட்ட பாதாம் சாப்பிடுவதால் பசியைக் குறைத்து எடை குறைப்பதை ஊக்குவிப்பதாக ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.

பாதாம் சாப்பிட சரியான நேரம்

பாதாம் சாப்பிட சரியான நேரம்

பாதாம் பருப்பிலிருந்து அதிகபட்ச நன்மைகளைப் பெற, அவற்றை காலையில் உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் காலை உணவோடு நட்ஸ்களை உட்கொள்வது இரத்த சர்க்கரையை சீராக்க உதவுகிறது. மேலும் உங்களை திருப்திப்படுத்துகிறது மற்றும் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What happens to your body when you eat almonds

What happens to your body when you eat almonds.
Desktop Bottom Promotion