For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் ஒரு துண்டு பூண்டு சாப்பிட்டால் உடலினுள் நிகழும் அற்புதங்கள் என்னென்ன தெரியுமா?

தினமும் பூண்டு பற்களை சாப்பிட்டு வந்தால், அதனால் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, உடல் பல்வேறு நோய்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கும்.

|

பல நூற்றாண்டுகளாக உணவில் சேர்க்கப்பட்டு வரும் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட ஒரு பொருள் தான் பூண்டு. இந்த பூண்டு உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உணவிற்கு நல்ல மணத்தையும் தரக்கூடியது. சமையலறையில் உள்ள முக்கியமான பொருளான பூண்டு, சில பொதுவான நோய்களுக்கு சிகிச்சையளிக்கக்கூடியது. இதற்கு காரணம் பூண்டில் உள்ள சல்பர் கலவைக் கொண்ட அல்லிசின் என்னும் பொருள் தான்.

What Happens If You Eat A Piece Of Garlic Everyday

தினமும் பூண்டு பற்களை சாப்பிட்டு வந்தால், அதனால் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, உடல் பல்வேறு நோய்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கும். எனவே தான் நம் பாட்டி மற்றும் தாய்மார்கள் உணவில் சேர்க்கும் பூண்டை தூக்கி எறியாமல் சாப்பிட சொல்கிறார்கள். கீழே தினமும் பூண்டு சாப்பிடுவதால் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மிகவும் கவர்ச்சியாக மாறுவீர்கள்

மிகவும் கவர்ச்சியாக மாறுவீர்கள்

ஆண்கள் தினமும் பூண்டு சாப்பிட்டால், அது அவர்களின் கவர்ச்சியை அதிகரிக்கும். இருப்பினும் பூண்டு சாப்பிட்டால், அதன் வாசனை பேசும் போது ஒருவித மோசமான நாற்றத்தை உண்டாக்கும் என்ற ஒரு கருத்து மக்களிடையே உள்ளது. ஆனால் சமீபத்திய ஆய்வில் அது தவறு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளன. பெண்ணைக் கவர ஒரு ஆண் 2 பல் பூண்டு சாப்பிட்டால் போதும். அதுவும் அந்த ஆண் ஒரு பெண்ணுடன் டேட்டிங் செல்வதற்கு 12 மணி நேரத்திற்கு முன்பு சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்தால், ஆணின் உடல் வாசனை பெண்களை அதிகம் கவரும். இருந்தாலும், இந்த நிகழ்வை விஞ்ஞானிகள் விளக்குவது சற்று கடினம். ஒருவேளை இதற்கு காரணம் அதில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள், வியர்வையால் ஏற்படும் நாற்றத்தைக் கட்டுப்படுத்துவதாக இருக்கலாம்.

நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்

நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்

பூண்டு பல்வேறு கிருமிகளில் இருந்து பாதுகாப்பளிக்கும். நம் பாட்டிமார்கள் சளி பிடித்திருக்கும் போது கூட பூண்டு சாப்பிட கூறுவதைக் கேட்டிருப்போம். ஆனால் தினமும் பூண்டு சாப்பிட்டு வந்தால், அது குளிர்காலத்தில் சந்திக்கும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கலாம். ஏனெனல் இதில் ஏராளமான அளவிலான வைட்டமின்கள், நன்மை பயக்கும் எண்ணெய்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. மேலும் இதில் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளை அழிக்கும் அல்லிசின் என்னும் ஆர்கானிக் கலவை உள்ளது. ஆகவே தினமும் பூண்டு சாப்பிடுவது ஒருவரது நோயெர்ப்பு சக்தியை வலுவாக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் கொள்ளத் தேவையில்லை.

இரத்த அழுத்தம் கட்டுப்படும்

இரத்த அழுத்தம் கட்டுப்படும்

உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் அன்றாட உணவில் பூண்டு சேர்த்து வாருங்கள். இது இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, தமனி சார்ந்த அழுத்தத்தைக் குறைக்கும். எனவே உயர் இரத்த அழுத்தத்தை குணப்படுத்த, தினமும் 4 பல் பூண்டு சாப்பிட வேண்டும். மேலும் பூண்டு இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை 10-15% குறைக்கிறது. ஒருவரது இரத்த அழுத்தம் குறைந்தால், அது இதய நோய் அல்லது பக்கவாதம் வருவதற்கான ஆபத்தை இருமடங்காக குறைக்கும். இருப்பினும் உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சை அளிக்க பூண்டு சாப்பிடுவதற்கு முன் உங்கள் மருத்துவரைக் கேட்டுக் கொள்ளுங்கள்.

நினைவாற்றல் மேம்படும்

நினைவாற்றல் மேம்படும்

ஒரு கோட்பாட்டின் படி, மனித உடல் மற்றும் மூளை வயதாகும் போது வேதியியல் ஆக்ஸிஜனேற்ற எதிர்வினை காரணமாக நாம் உண்ணும் உணவு மற்றும் ஆக்ஸிஜனை உட்கொண்டு, ஆற்றலை உற்பத்தி செய்கிறோம். ஆனால் இந்த செயல்முறை செல்களை அழிக்கிறது மற்றும் காலப்போக்கில் தோலை சுருங்கச் செய்து, மூளை கூர்மையாக இருப்பதை நிறுத்துகிறது. பூண்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், அதிகப்படியான ஆக்ஸிஜனேற்றத்திற்கு எதிராக போராடுகின்றன மற்றும் இளமையைப் பராமரிக்க உதவுகின்றன. மொத்தத்தில் பூண்டு வயதான காலத்தில் ஞாபக மறதியின் அபாயத்தைக் குறைக்கும். மேலும் தினமும் பூண்டு சாப்பிடுவது, நினைவாற்றலை மேம்படுத்தி, மூளையின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும். எனவே உங்கள் மூளை சிறப்பாக செயல்பட பூண்டு உதவி புரியும்.

ஸ்டாமினா அதிகரிக்கும்

ஸ்டாமினா அதிகரிக்கும்

பூண்டு இதயம் மற்றும் தசைகளை திறம்பட செயல்பட வைக்கிறது. நீங்கள் விளையாட்டு வீரராக இருந்தால், தினமும் பூண்டு சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். பண்டைய கிரேக்கத்தில், ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கு பூண்டு வழங்கப்பட்டது. ஏனெனில் இது அவர்களை போட்டியாளர்களை விட சிறப்பாக செயல்பட வைத்தது. எனவே தினமும் பூண்டு சாப்பிடுவது உடலின் ஸ்டாமினாவை அதிகரிக்கும்

சருமம் மற்றும் தலைமுடி மேம்டும்

சருமம் மற்றும் தலைமுடி மேம்டும்

பூண்டு தலைமுடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தியை மேம்படுத்துகிறது. வழுக்கைத் தலை உள்ளவர்கள், பூண்டு பற்களை அரைத்து தலையில் தடவி பின், குளிர்ந்த நீரால் தலைமுடியை அலசவும். வேண்டுமானால் பூண்டு எண்ணெயைப் பயன்படுத்தலாம். மேலும் தினமும் பூண்டு சாப்பிடுவது சருமத்தில் கொலாஜன் அளவு மற்றும் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும்.

பல் வலி குறையும்

பல் வலி குறையும்

பூண்டில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இது சொத்தை பற்களை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது. ஏனெனில் இதில் உள்ள மருத்துவ பண்புகள், ஈறுகள் மற்றும் பற்களை பாதிக்கும் கிருமிகளை அழித்து, ஈறுகளில் உள்ள அழற்சியை குணப்படுத்துகிறது. முக்கியமாக பூண்டு சொத்தைப் பற்களின் அபாயத்தைக் குறைக்கும். எனவே உங்கள் பற்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென நினைத்தால், தினமும் பூண்டு சாப்பிட ஆரம்பியுங்கள்.

ஒல்லியாக ஆரம்பிப்பீர்கள்

ஒல்லியாக ஆரம்பிப்பீர்கள்

உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்க பூண்டு சாப்பிடுவது நல்லது. எப்படியெனில் பூண்டை சாப்பிடும் போது உடலில் நிகழும் சிக்கலான இரசாயன எதிர்விளைவுகளின் விளைவாக, அஜோன் செயல்படுத்தப்பட்டு இரத்தத்தில் புளிப்பை உண்டாக்கி, கொழுப்பு படிவுகளை அழிக்கிறது. தினமும் பூண்டு சாப்பிடும் போது, தேவையற்ற உடல் பருமனைத் தடுக்கிறது. எனவே நீங்கள் ஒல்லியாக விரும்பினால், தினமும் பூண்டு சாப்பிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Happens If You Eat A Piece Of Garlic Everyday

Did you know what happens if you eat a piece of garlic everyday? Read on...
Desktop Bottom Promotion