For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எந்த காரணங்களுக்கு எல்லாம் ஒருவருக்கு மூட்டு வலி வருது தெரியுமா? இதை தடுக்க என்ன சாப்பிடலாம்?

தற்போது பலருக்கு இளமையிலேயே எலும்புகள் பலவீனமாகின்றன. இப்படி எலும்புகள் பலவீனமாவதற்கு ஒருசில காரணங்கள் உள்ளன. அந்த காரணங்களை ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும்.

|

எலும்புகள் உடலின் மிகவும் முக்கியமான பகுதியாகும். எலும்புகள் வலுவாக இருந்தால் தான், ஆயுட்காலம் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், ஒவ்வொருவரும் எலும்புகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதையும், புதிய எலும்புகள் உருவாவதையும், பழைய எலும்புகளை உடைவதையும் அறிந்திருக்க வேண்டும். இளமையாக இருக்கும் போது, உடலானது பழைய எலும்புகளை உடைப்பதை விட புதிய எலும்புகளை வேகமாக உருவாக்குகிறது. இதன் காரணமாக இளமையில் எலும்புகளின் நிறை அதிகரிக்கிறது. பெரும்பாலான மக்கள் 30 வயதில் அதிகமான எலும்பு நிறையை கொண்டிருக்கிறார்கள். அதன் பின் எலும்பு மறுவடிவமைப்பு தொடர்கிறது. ஆனால் இந்த வயதில் எலும்புகளின் நிறை அதிகரிப்பதை விட சற்று அதிகமாகவே குறைகிறது.

What Are The Causes Of Weak Bones

எலும்புகளின் ஆரோக்கியத்தை வழக்கமான உடற்பயிற்சியுடன், ஆரோக்கியமான உணவுகளை உண்பதன் மூலமே பராமரிக்க முடியும். அதுவும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் ஒருசில சூப்பர் உணவுகள் உள்ளன. அந்த உணவுகள் என்னவென்பதைத் தெரிந்து அவற்றை உட்கொண்டு வந்தால், எலும்புகள் பலவீனமாகி அனுபவிக்கும் மூட்டு வலி பிரச்சனையில் இருந்து விடுபடலாம். தற்போது பலருக்கு இளமையிலேயே எலும்புகள் பலவீனமாகின்றன. இப்படி எலும்புகள் பலவீனமாவதற்கு ஒருசில காரணங்கள் உள்ளன. அந்த காரணங்களை ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். இப்போது எந்த காரணங்களுக்கு எல்லாம் ஒருவரது எலும்புகள் பலவீனமாகின்றன என்பதைக் காண்போம்.

இதய நோயால் அவதிப்படும் 3 வயது ஜெசிக்காவிற்கு உதவுங்கள் ப்ளீஸ்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Are The Causes Of Weak Bones in Tamil

To keep your bones healthy, it is important to take a nutritious diet. Here are the causes of weak bones and dietary tips to cope up.
Desktop Bottom Promotion