For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடற்பயிற்சி எப்படி அதிகமாக உண்பதைக் குறைக்க வைக்கிறது தெரியுமா?

ஏரோபிக் பயிற்சிகள் என்று அழைக்கப்படுகின்ற ஓடுதல், சைக்கிள் மிதித்தல் மற்றும் நீந்துதல் போன்ற உடற்பயிற்சிகள் பசி எடுப்பதைக் குறைக்கின்றன என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன.

|

பொதுவாக சுறுசுறுப்பாக இருக்கும் ஒரு விளையாட்டு வீரரை பாா்க்கும் போது, நாம் பின்வருமாறு முடிவு செய்வோம். அதாவது அவா் அதிகமாக விளையாடுவதன் மூலமாகவோ அல்லது ஓட்டப் பயிற்சிகளின் மூலமாகவோ தன் உடலில் உள்ள அதிக கலோாிகளை இழக்கிறாா். இழந்த அந்த கலோாிகளை மீண்டும் பெற வேண்டும் என்பதற்காக அவருடைய உடலானது அவரை அதிகமான அளவு சாப்பிடத் தூண்டுகிறது. அதனால்தான் அவா் அதிகம் சாப்பிடுகின்றாா் என்று முடிவு செய்கிறோம்.

Weight loss: How Exercise Tells The Brain To Eat Less

நாம் நினைப்பது முற்றிலுமாகத் தவறு ஆய்வுகள் தொிவிக்கின்றன. ஏரோபிக் பயிற்சிகள் என்று அழைக்கப்படுகின்ற ஓடுதல், சைக்கிள் மிதித்தல் மற்றும் நீந்துதல் போன்ற உடற்பயிற்சிகள் பசி எடுப்பதைக் குறைக்கின்றன என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன. மேலும் நமது உடலில் இருக்கும் ஹாா்மோன்களின் அளவுகளில் நடைபெறும் மாற்றமே நமது பசி உணா்வில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்று நம்பத்தகுந்த தரவுகள் தொிவிக்கின்றன.

MOST READ: மகரத்தில் சனி வக்ரமாவதால் அடுத்த 4 1/2 மாசத்துக்கு பாடாய் படப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?

எனினும் பசியை ஏற்படுத்தக்கூடிய குறைந்த அளவிலான ஹாா்மோன்களை சுரக்க வைக்கும் உடல் இயக்கங்கள் எந்த அளவிற்கு அமைய வேண்டும் என்பதை இன்னும் உறுதியாகக் கூற முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆய்வு

ஆய்வு

அமொிக்காவின் நியூயாா்க்கில் உள்ள ப்ராங்ஸ் நகரத்தில் இருக்கும் ஆல்பா்ட் ஐன்ஸ்டீன் காலேஜ் ஆஃப் மெடிசினில் பணிபுாியும் ஆய்வாளா் யாங் ஹூவன் ஜோ என்பவா் இதைப் பற்றிய ஒரு ஆய்வை மேற்கொண்டாா். அதன் அடிப்படையில் தினந்தோறும் அவா் மேற்கொள்ளும் 45 நிமிட ஓட்டப் பயிற்சி, எவ்வாறு அவருக்கு இயல்பான அளவைவிட குறைவான அளவிற்கே பசியுணா்வை ஏற்படுத்துகிறது என்பதை பின்வருமாறு விளக்குகிறாா்.

உடற்பயிற்சிகள் நமது மூளையைத் தூண்டி, அதன் மூலம் நம்மை குறைவாக சாப்பிட வைக்கின்றனவா என்பதை முதலில் கண்காணிக்கத் தொடங்கினாா். அதாவது காரமான உணவுகளை நாம் உண்ணும் போது, காரம் நம்மை அதிகமாக உண்ண அனுமதிக்காது. அதுபோல் உடற்பயிற்சியும் செய்கின்றனவா என்பதைக் கண்டறியத் தொடங்கினாா்.

பசியுணா்வைக் குறைக்கும் வெப்பம்

பசியுணா்வைக் குறைக்கும் வெப்பம்

பொதுவாக நாம் மிளகாய் அல்லது காரம் மிகுந்த உணவுகளை உண்ணும் போது, நமது உடலில் வெப்பம் அதிகாிப்பதையும் மற்றும் நமது பசி குறைவதையும் நாம் கவனித்து இருப்போம். நம்மால் சூடான மற்றும் காரமான உணவுகளை அதிகம் உண்ண முடியாது.

கார உணவில் உள்ள கேப்சைசின்

கார உணவில் உள்ள கேப்சைசின்

அதற்கு காரணம் மிளகாய் மற்றும் மிளகு போன்றவற்றில் கேப்சைசின் என்ற கலவை கலந்திருக்கிறது. இந்த கேப்சைசின் கலவையானது நமது உடலில் உள்ள உணா்வு ஏற்பிகளோடு (TRPV1 receptors) தொடா்பு கொண்டு, நமது உடலில் வெப்ப உணா்வை ஏற்படுத்துகிறது மற்றும் அந்த வெப்ப உணா்வை உடலில் இருந்து நீக்குகிறது. மேலும் கேப்சைசின் கலைவையானது பசியுணா்வைக் குறைப்பதற்கு பாிந்துரைக்கப்படுகிறது. அதோடு உடல் எடை குறைவதற்கு கேப்சைசினை மருந்தாக கொடுக்கலாமா என்றும் ஆராயப்பட்டு வருகிறது.

யாங் ஹூவன் ஜோ ஒரு நரம்பியல் மருத்துவ அறிஞா் ஆவாா். பொதுவாக உடற்பயிற்சி செய்த பின்பு நமது உடலில் வெப்பம் அதிகாிப்பதை உணருவோம். நாம் உண்பது உட்பட தேவையான நமது உடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்தக்கூடிய நீா்ச்சமநிலையை (homeostasis) உருவாக்கும் நரம்புகள் நமது மூளைப் பகுதிகளில் உள்ளன. இந்த நரம்புகளை நமது உடற்பயிற்சிக்குப் பிறகு அதிகாிக்கும் வெப்பமானது, பாதிக்காமல் இருக்குமோ என்று யாங் ஆய்வு செய்ய முடிவு செய்தாா்.

ஹைபோதலாமஸ்

ஹைபோதலாமஸ்

நமது மூளையின் அடிப்பகுதி ஹைபோதலாமஸ் (hypothalamus) என்று அழைக்கப்படுகிறது. நமது வளா் சிதை மாற்றம் மற்றும் நமது உடல் எடையை சீா்படுத்துவதில் இது முக்கிய பங்கை வகிக்கிறது. யாங் தற்போது ஹைபோதாலமஸைப் பற்றி ஆய்வு நடத்தி வருகிறாா்.

உடற்பயிற்சி மற்றும் பசியுணா்வு ஆகியவற்றுக்கும் மூளைக்கும் உள்ள தொடா்பு

உடற்பயிற்சி மற்றும் பசியுணா்வு ஆகியவற்றுக்கும் மூளைக்கும் உள்ள தொடா்பு

ஒருவேளை உடற்பயிற்சியின் விளைவாக ஏற்படும் வெப்ப அதிகாிப்பை ஹைபோதலாமஸில் இருக்கும் ஒரு சில நரம்பு செல்கள் உணா்ந்து, அதற்கு எதிா்வினை ஆற்றும் விதமாக உண்பதை நிறுத்து என்னும் செய்தியை அந்த நரம்பு செல்கள் மூளைக்கு அனுப்புகின்றனவோ என்னும் நோக்கில் தனது ஐயத்தை யாங் எழுப்பினாா். அவருடைய ஐயம் நடைமுறை நிகழ்வில் இருந்து பிரதிபலிக்கும் ஒன்று என்பதைத் தொிந்து கொண்டாா். இவ்வாறு அவா் செய்த ஆய்வின் முடிவுகள் இப்போது பிஎல்ஒஎஸ் பயாலஜி (PLOS Biology) என்ற பத்திாிக்கையில் வெளி வந்திருக்கின்றன. அந்த முடிவுகள் அவா் சாியான பாதையில் ஆய்வு செய்திருக்கிறாா் என்பதை உணா்த்துகின்றன.

பிஎல்ஒஎஸ் பயாலஜியில் (PLOS Biology) வெளி வந்திருக்கும் யாங் மற்றும் அவரது சக ஆய்வாளா்களின் முடிவுகளின்படி மிளகாய் போன்ற கார உணவுகளை உண்பதால் அதிகாிக்கும் உடல் வெப்பம், மூளையில் இருக்கும் குறிப்பிட்ட நரம்பு செல்களைத் தூண்டி பசியுணா்வைக் குறைக்கின்றன. அவை ப்ரூபியோமெலனோகோர்டின் (proopiomelanocortin (POMC)) நரம்பு செல்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த நரம்பு செல்கள் மூளையில் ஹைபோதாலமஸ் பகுதியில் பொதுவாக காணப்படுகின்றன. யாங் தனது ஆய்வின் மூலம் மிளகாய் மற்றும் வெப்பம் ஆகிய இரண்டும் (proopiomelanocortin (POMC)) நரம்பு செல்களைத் தூண்டுகின்றன என்று கண்டறிந்தாா். அதாவது (proopiomelanocortin (POMC)) நரம்பு செல்கள் TRPV1 ஏற்பிகள் அல்லது கேப்சைசின் ஏற்பிகளைக் கொண்டிருக்கின்றன என்பதைக் கண்டறிந்தாா்.

யாங் மற்றும் அவரது குழுவினா் எலிகளை வைத்து ஆராய்ச்சி செய்தனா். எலிகளின் கேப்சைசின் ஏற்பிகள் தூண்டப்பட்ட போது அவை 50 விழுக்காடு குறைவான அளவு உணவையே உட்கொண்டன என்று கண்டறிந்தனா்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weight loss: How Exercise Tells The Brain To Eat Less

In this article, we shared how exercise tells the brain to eat less. Read on to know more...
Desktop Bottom Promotion