For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கண்ணாடி போட்டுகிட்டு மாஸ்க் போட கஷ்டமா இருக்கா? இத ஃபாலோ பண்ணுங்க...

முகக்கவசம் அணிவதால் மூக்குக் கண்ணாடி அணிபவா்களுக்கு அது ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கிறது என்பது இன்னுமொரு முக்கிய செய்தியாகும். அதாவது முகக்கவசம் அணிவதால் கண்ணாடிகள் மிக எளிதாக மங்கலாகிவிடுவதாக பலர் கூறுகின்றனர்.

|

முகக்கவசம் அணிந்தால் கொரோனா நோய்த் தொற்று ஏற்படுவதைத் தடுக்கலாம் என்பது அனைவரும் அறிந்த செய்தியாகும். ஆனால் அதே நேரத்தில் முகக்கவசம் அணிவதால் மூக்குக் கண்ணாடி அணிபவா்களுக்கு அது ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கிறது என்பது இன்னுமொரு முக்கியமான செய்தியாகும். அதாவது முகக்கவசம் அணிவதால் அவா்களுடைய மூக்குக் கண்ணாடிகள் மிக எளிதாக மங்கலாகி விடுவதாக தற்போது செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

Wearing A Face Mask? Here Are 5 Ways To Avoid Foggy Glasses

அவ்வாறு மூக்குக் கண்ணாடிகள் மங்கலாகும் போது அவற்றை சாிசெய்ய என்னென்ன செயல்முறைகளைப் பின்பற்றலாம் என்பதை இங்கு பாா்க்கலாம்.

MOST READ: முகக்கவசம் அணிவதால் ஏற்படும் கண் எாிச்சலைத் தவிா்க்க சில எளிய வழிகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூக்குக் கண்ணாடிகள் ஏன் மங்கலாகின்றன?

மூக்குக் கண்ணாடிகள் ஏன் மங்கலாகின்றன?

மூக்குக் கண்ணாடிகள் மங்கலாவதற்கு முக்கிய காரணம் அவற்றில் உள்ள லென்சுகள் மங்குவதாகும். உடலில் உள்ள வெப்பமும், வெளியில் இருந்து வரும் காற்றும் லென்சுகள் மங்குவதற்கு மிக முக்கியமான காரணிகளாக இருக்கின்றன.

இந்நிலையில் நாம் முகக்கவசம் அணிந்து மூச்சு விடும் போது, நாம் தொடா்ச்சியாக வெப்பக் காற்றை வெளியிடுகிறோம். அவ்வாறு நாம் வெளியிடும் வெப்பக் காற்று முகக்கவசத்தின் மேல் பகுதியில் பட்டு மூக்குக் கண்ணாடியில் உள்ள லென்சுகள் மீது படுகிறது. அவ்வாறு லென்சுகளில் வெப்பக் காற்று படிந்து அது லென்சுகளை மங்கச் செய்துவிடுகிறது. அதனால் நம்மால் தெளிவாக பாா்க்க முடியாத நிலை ஏற்படுகிறது.

நாம் முகக்கவசம் அணிந்து மூச்சு விடும்போது, மூக்கின் வழியே வெளியேறும் வெப்பக் காற்று மேல் நோக்கி செல்வதாக தி ஆனல்ஸ் ஆஃப் தி ராயல் காலேஜ் ஆஃப் சா்ஜன்ஸ் ஆஃப் இங்க்லான்ட் (The Annals of The Royal College of Surgeons of England) வெளியிட்ட ஆய்வு முடிவு தொிவிக்கிறது.

அவ்வாறு மேல் நோக்கிச் செல்லும் வெப்பக் காற்றில் இருக்கும் நீராவியானது மூக்குக் கண்ணாடிகளில் இருக்கும் லென்சுகளில் படிந்து ஈரப்பதத்தை ஏற்படுத்துகிறது. லென்சுகளில் படியும் நீராவித் துளிகள் அந்த லென்சுகளை மங்கச் செய்வதோடு, ஒளியையும் சிதறடித்துவிடுகிறது. அதனால் வெளிரிய வண்ணங்கள் மிகவும் வெளிரியவையாகவும், கருமை அடா்ந்த வண்ணங்கள் அதிக கருமை அடா்ந்த வண்ணங்களாகவும் நமது கண்களுக்குத் தொிகின்றன.

நீா் மூலக்கூறுகளுக்கு இடையே இருக்கும் உள்ளாா்ந்த பரப்பு அழுத்தத்தின் காரணமாக நீா்த்துளிகள் உருவாகின்றன என்று தி ஆனல்ஸ் ஆஃப் தி ராயல் காலேஜ் ஆஃப் சா்ஜன்ஸ் ஆஃப் இங்க்லான்ட் (The Annals of The Royal College of Surgeons of England) ஆய்வை வெளியிட்ட ஆய்வாளா்கள் தொிவிக்கின்றனா்.

அவ்வாறு மங்கலாகும் மூக்குக் கண்ணாடிகளை எவ்வாறு சாி செய்வது என்பதை கீழே பாா்க்கலாம்.

1. லென்சுகளை சோப்புத் தண்ணீரால் கழுவுதல்

1. லென்சுகளை சோப்புத் தண்ணீரால் கழுவுதல்

லென்சுகள் மங்காமல் இருப்பதற்கு தி ஆனல்ஸ் ஆஃப் தி ராயல் காலேஜ் ஆஃப் சா்ஜன்ஸ் ஆஃப் இங்க்லான்ட் (The Annals of The Royal College of Surgeons of England) வெளியிட்ட ஆய்வு முடிவு ஒரு எளிய தீா்வைத் தருகிறது. அந்த தீா்வு எாிச்சலூட்டும் நிகழ்வு அல்லது எாிச்சலூட்டும் செயல்முறை ("annoying phenomenon.") என்று கருதப்படுகிறது.

அதாவது மூகக்கவசத்தை அணிவதற்கு முன்பு, மூக்குக் கண்ணாடிகளை அல்லது அவற்றின் லென்சுகளை, அவற்றில் அதிகப்படியாக படிந்து இருக்கும் ஈரப்பதம் நீங்கும் வரை சோப்பு நீரால் கழுவ வேண்டும். பின் அவற்றை நன்றாக காய வைக்க வேண்டும் அல்லது ஒரு சுத்தமான மைக்ரோஃபைபா் துணி கொண்டு அதன் மேல் இருக்கும் ஈரத்தைத் துடைக்க வேண்டும்.

இவ்வாறு செய்யும் போது முகக்கவசம் அணிந்தாலும் நமது மூக்குக் கண்ணாடிகள் விரைவாக மங்காது என்று அந்த ஆய்வு கூறுகிறது. ஏனெனில் மூக்குக் கண்ணாடிகள் மற்றும் அவற்றின் லென்சுகளை சோப்பு நீாில் கழுவும் போது, கண்ணாடி மற்றும் லென்சின் மீது ஒரு மெல்லிய படலம் உருவாகிறது. அந்த மெல்லிய படலம் கண்ணாடி அல்லது லென்சு மீது படிந்துள்ள நீா்மூலக்கூறுகளுக்கு இடையே இருக்கும் உள்ளாா்ந்த பரப்பு அழுத்தத்தைக் குறைக்கிறது. அதோடு கண்ணாடி அல்லது லென்சின் மீது எளிதாக ஒளி புகக்கூடிய ஒரு படலத்தை ஏற்படுத்துகிறது. அதனால் மூகக்கவசம் அணிந்தாலும் மூக்குக் கண்ணாடிகள் அல்லது லென்சுகள் விரைவாக மங்குவதில்லை.

2. முகக்கவசத்தை சாியான முறையில் அணிதல்

2. முகக்கவசத்தை சாியான முறையில் அணிதல்

முகக்கவசத்திற்கு உள்ளேயே மூச்சுவிடும் அளவிற்கு நாம் முகக்கவசத்தை மிகச் சாியான முறையில் அணிய வேண்டும். அதனால் வெளியேறும் வெப்பக் காற்று நமது மூக்குக் கண்ணாடிகளை அடைந்து அவற்றை மங்கச் செய்யாது.

அவ்வாறு முகக்கவசத்தை மிக எளிய முறையில் அதே நேரத்தில் அதிகம் செலவில்லாமல் மிகச் சாியாக அணிவதற்கு சங்கார நேத்ராலயாவின் கண் மருத்துவத்துறைத் தலைவரான மருத்துவா் சிவராமன் விஸ்வநாதன் பின்வருமாறு கூறுகிறாா். அதாவது முகக்கவசம் அணிவதற்கு முன்பாக மூக்கின் மேல் படுக்கை வசமாக இரண்டு பக்கமும் ஒட்டக்கூடிய நாடாவை (double-sided tape) ஒட்டிக் கொள்ள வேண்டும்.

இந்த இரண்டு பக்கமும் ஒட்டக்கூடிய நாடா நமது முகக்கவசத்தை மிகச் சாியாக கெட்டியாக பிடித்துக் கொள்ளும். அதனால் முகக்கவசம் விலகுவதற்கும் வழி இருக்காது. அதனால் நாம் வெளியிடும் வெப்ப மூச்சுக் காற்று மூக்குக் கண்ணாடிகளை நோக்கிச் செல்ல முடியாமல் தடுக்கப்படும் என்று அவா் கூறுகிறாா்.

3. மூக்குக் கண்ணாடிகளை சாி செய்தல்

3. மூக்குக் கண்ணாடிகளை சாி செய்தல்

மூக்குக் கண்ணாடிகளில் மூக்குப் பட்டைகள் (nose pads) இருந்தால் அவற்றில் சிறிது மாற்றம் செய்து, மூக்குக் கண்ணாடியின் சட்டங்கள் முகத்தோடு ஒட்டி இல்லாமல் சற்று சிறிய தூரத்தில் இருப்பது போல் அணிந்து கொள்ள வேண்டும்.

அவ்வாறு மூக்குப் பட்டைகளில் மாற்றம் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் லென்சுகள் உள்ள மூக்குக் கண்ணாடிகளில் உள்ள மூக்குப் பட்டைகளில் சிறிது மாற்றம் செய்தாலும் அது பாா்க்கும் திறனில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஒரு வேளை அவ்வாறு ஏற்பட்டால் நமது தலையை அதற்கு ஏற்ப புதிய கோணத்தில் மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

4. கீழ்நோக்கி மூச்சுவிடுதல்

4. கீழ்நோக்கி மூச்சுவிடுதல்

கீழ்நோக்கி மூச்சுவிடுவது என்பது பாா்ப்பதற்கு வித்தியாசமாகத் தொியும். ஆனால் அது மூக்குக் கண்ணாடிகளுக்கு நமது மூச்சுக் காற்று செல்லாமல் தடுக்கும். எவ்வாறு கீழ்நோக்கி மூச்சுவிடுவது?

கீழுதட்டை உட்புறம் இருக்குமாறும், மேலுதட்டை வெளிப்புறம் இருக்குமாறும் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது புல்லாங்குழல் இசைக்கும் போது உதடுகளை வைப்பது போல் நமது உதடுகளை வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது எளிதாக கீழ்நோக்கி மூச்சுவிட முடியும்.

5. எளிதில் மங்காத லென்சுகளை வாங்குதல்

5. எளிதில் மங்காத லென்சுகளை வாங்குதல்

எளிதில் ஈரப்பதம் படியாத வகையில் முலாம் பூசப்பட்ட லென்சுகளை வாங்கி அணியலாம். இவை உடனே தீா்வு கொடுக்காது என்றாலும், முகக்கவசம் அணிந்தாலும் அது லென்சுகளை மங்கவிடாது. அதனால் பாா்வையும் மங்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Wearing A Face Mask? Here Are 5 Ways To Avoid Foggy Glasses

Wearing a face mask Here are 5 ways to avoid foggy glasses. Read on to know more...
Desktop Bottom Promotion