For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடிக்கடி மயக்கம் வராம இருக்கணும்னா இந்த பொருட்கள உங்க பாக்கெட்லயே வைச்சுக்கோங்க…!

நீங்கள் குறைந்த இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறீர்கள் என்பதை சில அறிகுறிகள் உங்களுக்கு உணர்த்தும். சோர்வு, மயக்கம், தலைச்சுற்றல் போன்றவை பொதுவான அறிகுறி.

|

இரத்த அழுத்தம் குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் அது உடல்நலத்திற்கு பிரச்சனைதான். உயர் இரத்த அழுத்தத்திற்கும், குறைந்த இரத்த அழுத்தத்திற்கும் வெவ்வேறு சிகிச்சைகள் இருக்கின்றன. இரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்கள் இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருக்க வேண்டும். அது குறையும்போது, அவர்கள் பல உடல் நலப் பிரச்சனைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். நீங்கள் பஸ், ரயிலில் பயணம் செய்யும்போது அல்லது உங்கள் பணியிடத்தில் இருக்கும்போது, திடீரென்று வியர்க்கத் தொடங்குகிறது, கண் மங்கலாகி மயக்கம் வருகிறது, எனில் நீங்கள் குறைந்த இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள்.

ways-to-raise-low-blood-pressure-quickly

நீங்கள் குறைந்த இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறீர்கள் என்பதை சில அறிகுறிகள் உங்களுக்கு உணர்த்தும். சோர்வு, மயக்கம், தலைச்சுற்றல் போன்றவை பொதுவான அறிகுறி. இதுபோன்ற சூழ்நிலையைத் தடுப்பதற்காகவும், உங்கள் இரத்த அழுத்தம் அடிக்கடி குறைந்து கொண்டே வந்தால், நீங்கள் பயணம் செய்யும் போது உங்கள் பையில் எளிதில் வைத்திருக்கக்கூடிய சில உணவுகள் இருக்கின்றன. அவை குறைந்த இரத்த அழுத்தத்தைத் தடுக்கவும், இரத்த அழுத்த அளவை உயர்த்தவும் உதவும் உடனடியாக உங்களுக்கு உதவும். குறைந்த இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிக்க உதவும் சில எளிய வழிகளை இக்கட்டுரையில் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உப்பு

உப்பு

நீங்கள் அடிக்கடி குறைந்த இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், உப்பு எடுத்துச் செல்வது அவசியம். இரத்த அழுத்தம் குறைவதை நீங்கள் உணரும்போதெல்லாம், ஒரு கிளாஸ் தண்ணீரில் விரைவாக ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலக்கி, பின்னர் குடிக்கவும். உப்பில் குறைந்த இரத்த அழுத்த அளவை உயர்த்தக்கூடிய சோடியம் உள்ளது. அதன் காரணமாக இது இரத்த அழுத்தத்தை உடனடியாக அதிகரிக்க உதவுகிறது.

MOST READ:இந்த ராசிக்காரர்கள் முத்தம் கொடுப்பதில் ஜிகிடி கில்லாடிகளாம்... நீங்களும் ஜிகிடி கில்லாடியா?

குளுக்கோஸ்

குளுக்கோஸ்

ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு சிட்டிகை அளவு உப்புடன் இரண்டு டீஸ்பூன் குளுக்கோஸைச் சேர்த்து நன்கு கலக்கி பின்னர் குடிக்க வேண்டும். இது இரத்த அழுத்தம் அளவை விரைவாக அதிகரிக்க உதவும். எனவே, உங்களுக்கு குறைந்த இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால், ஒரு பாக்கெட் குளுக்கோஸ் பொடியை உங்களுடன் எடுத்துச் செல்வது எப்போதும் நல்லது.

உலர்ந்த திராட்சை

உலர்ந்த திராட்சை

நீங்கள் அடிக்கடி குறைந்த இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், உங்களுடன் ஒரு சில உலர் திராட்சையும் கொண்டு செல்வது நல்லது. குறைந்த இரத்த அழுத்தத்தைத் தடுக்க உலர் திராட்சை சிறந்த உணவாக அறியப்படுகிறது. உங்கள் இரத்த அழுத்த அளவு குறைகிறது என்று நீங்கள் உணர்ந்தால் சுமார் 10-15 துண்டுகள் உலர் திராட்சை சாப்பிடுங்கள். மேலும், உலர் திராட்சையை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

தேன்

தேன்

ஒரு சிறிய பாட்டில் தேனை எப்போதும் உங்கள் கைப்பையில் வைத்துக் கொள்ளுங்கள். திடீரென உங்களுக்கு இரத்த அழுத்தம் குறைந்து மயக்கம் ஏற்படும் போதெல்லாம், ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து உடனடியாக குடிக்கவும். இது இரத்த அழுத்த அளவை உடனடியாக அதிகரிக்க உதவுகிறது.

MOST READ:இன்னைக்கு உங்க லவ்வருக்கு இந்த பரிசு மட்டும் கொடுத்து பாருங்க... ஷாக் ஆகிடுவாங்க...!

காஃபி

காஃபி

நீங்கள் காஃபி குடிப்பவராக இருந்தால், உங்கள் இரத்த அழுத்தத்தை இயல்பாக அதிகரிப்பதற்கு மற்றொரு எளிய மற்றும் விரைவான வழி இதுவாகும். இரண்டு கப் காஃபி இரத்த அழுத்த அளவை அதிகரிக்க ஒரு தற்காலிக தீர்வாக இருக்கும். கருப்பட்டி காஃபி குடிப்பது மிகச் சிறந்த வழி.

கிரீன் டீ

கிரீன் டீ

காஃபின் மூலம் செறிவூட்டப்பட்ட, கிரீன் டீ உங்கள் நிலையை மேம்படுத்த உதவும். ஒரு கப் சூடான நீரில் ஒரு டீஸ்பூன் கிரீன் டீ பொடியை சேர்க்கவும். இதை 10 நிமிடங்கள் மூழ்க வைத்து பின்னர் வடிகட்டவும். பருகுவதற்கு முன் ஒரு ஸ்பூன் தேன் சேர்க்கவும். இதை ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை நீங்கள் பருகலாம். உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் கிரீன் டீ நன்மை பயக்கும்.

ஜின்செங்

ஜின்செங்

வீட்டிலே குறைந்த இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிப்பதற்கான சரியான தீர்வுகளில் ஒன்று ஜின்செங் தேநீர். ஒரு கப் தண்ணீரில் 1 டீஸ்பூன் ஜின்ஸெங் டீ பொடியை சேர்த்து ஒரு கொதி நிலைக்கு கொண்டு வரவேண்டும். பின்னர், அதை வடிகட்டவும். இந்த தேநீரில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து பருகலாம்.

MOST READ:உங்க உடல் எடையை ஈஸியாக குறைக்க வீட்டில் இருக்கும் இந்த புளிப்பு உணவுகளே போதுமாம்...!

துளசி

துளசி

இரத்த அழுத்தம் குறைவாக இருப்பதாக நீங்கள் உணரும்போது 5 முதல் 6 துளசி இலைகளை மென்று சாப்பிடுங்கள். துளசி செடியில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. பொதுவாக துளசி அழற்சி எதிர்ப்பு, அடாப்டோஜெனிக், சிகிச்சை மற்றும் கார்டியோ பாதுகாப்பு போன்ற பல மருத்துவ பண்புகளைக் கொண்டுள்ளது. இது பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றால் செறிவூட்டப்பட்டுள்ளது. அத்துடன் இது உங்கள் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.

அதிமதுரம்

அதிமதுரம்

ஹைபோடென்ஷன் என்பது இரத்த அழுத்தம் சம்பந்தப்பட்டது. இதைக் குணப்படுத்த, அதிமதுர வேர்கள் உங்களுக்கு உதவுகின்றன. ஒரு கப் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் அதிமதுர தூளை சேர்த்து கொதிக்கவிட வேண்டும். 5 நிமிடம் கொதிக்க விட்டு, பின்னர் அதை வடிகட்டி, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து பருகலாம்.

MOST READ:இந்த காரணம்தான் உங்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறதாம்...!

தண்ணீர்

தண்ணீர்

சில நேரங்களில், குறைந்த இரத்த அழுத்தம் நீரிழப்பால் கூட ஏற்படலாம். எனவே, உடலை ஹைட்ரேட் செய்ய போதுமான அளவு தண்ணீர் உடலுக்கு தேவைப்படுகிறது. குறைந்த இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் உங்களுக்கு இருக்கும்போது, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் இது இரத்த அழுத்த அளவை உடனடியாக அதிகரிக்க உதவுகிறது.

மருத்துவரை பார்ப்பது

மருத்துவரை பார்ப்பது

ஒரு முறை குறைந்த இரத்த அழுத்தம் இருப்பது கவலைக்குரியதல்ல. இருப்பினும், நிலையான மற்றும் தொடர்ச்சியாக இரத்த அழுத்தம் குறைந்துகொண்டே வருவது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பல்வேறு வழிகளில் பாதிக்கும். உங்களுக்கு குறைந்த இரத்த அழுத்தம் பிரச்சினை இருந்தால், அது குறித்து மருத்துவருடன் கலந்துரையாடி, ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

ways to raise low blood pressure quickly

Here we are talking about ways to raise low blood pressure quickly.
Story first published: Saturday, February 15, 2020, 11:17 [IST]
Desktop Bottom Promotion