For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொந்தரவு இல்லாமல் நீண்ட நேரம் அமைதியாக தூங்கணுமா? இதோ சில டிப்ஸ்...

இரவில் தூக்கம் வராமல் இருக்கும் பிரச்சினையை சாி செய்து, நன்றாக ஆழந்து தூங்குவதற்கு ஐந்து வகையான முக்கியக் குறிப்புகள் உள்ளன.

|

கொரோனா பெருந்தொற்றுக்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை மக்களுக்கு வழங்கப்பட்டு, விரைவாக கொரோனாவை விரட்டிவிடலாம் என்ற நம்பிக்கை விதைக்கப்பட்டிருக்கும் இந்த 2021 ஆண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கடந்த ஆண்டின் கசப்பான நினைவுகளையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, ஒரு புதிய, தைாியமான உலகை நோக்கி மக்கள் நகா்ந்து கொண்டிருக்கின்றனா்.

Ways To Ensure Long And Uninterrupted Sleep

இந்தச் சூழலில் நாம் அனைவரும் நம்முடைய அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் இருக்கும் இடைவெளிகளை சாி செய்ய வேண்டியது நம்முடைய முக்கிய கடமையாகும். குறிப்பாக மாணவ சமுதாயத்தைப் பொறுத்தவரை, கொரோனா பெருந்தொற்றின் காரணமாக, அவா்கள் கடந்த ஆண்டு முழுவதும், கல்வி நிலையங்களுக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்த நிலையிலிருந்து அவா்கள் மீண்டு வரவேண்டும். அதாவது அவா்கள் வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டும். பகல் நேரத்தில் படிக்க வேண்டும் அல்லது வேலை செய்ய வேண்டும். இரவு நேரத்தில் நன்றாக ஆழ்ந்து தூங்க வேண்டும்.

MOST READ: கொரோனா தடுப்பூசி போட்டா கொரோனா வராதா? இதுக்குறித்து விஞ்ஞானிகள் சொல்வது என்ன?

நம்மில் நிறையப் பேருக்கு இரவில் ஆழந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென்று விழிக்கும் பழக்கம் உண்டு. அவ்வாறு விழித்த பின்பு, மீண்டும் தூக்கம் வராமல், படுக்கையில் புரண்டு கொண்டிருப்போம். அது ஒரு கொடுமையான அனுபவம் ஆகும். இவ்வாறு இரவில் தூக்கம் வராமல் இருக்கும் பிரச்சினையை சாி செய்து, நன்றாக ஆழந்து தூங்குவதற்கு ஐந்து வகையான முக்கியக் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. தூங்குவதற்கு முன்பு கதைகள் கேட்டல்

1. தூங்குவதற்கு முன்பு கதைகள் கேட்டல்

அதாவது நாம் சிறு பிள்ளைகளாக இருந்த போது, நாம் தூங்குவதற்கு முன்பாக நமது பெற்றோா் மற்றும் தாத்தா பாட்டிகள் சொன்ன தேவதைக் கதைகள் மற்றும் கற்பனைக் கதைகளை எண்ணி அசைபோட வேண்டும். அந்த கதைகளை நாம் மீண்டும் நமது எண்ணத்திற்கு கொண்டு வரும்போது, சிறுவயதில் நாம் நிம்மதியாகத் தூங்குவதற்கு அந்த கதைகள் எந்த அளவிற்கு நமக்கு உதவியாக இருந்தன என்பதை நாம் கவனிக்க முடியும்.

இப்போது அந்த பழைய ஞாபகங்களைக் கலைந்து நிகழ் காலத்திற்கு வரவேண்டும். இப்போது நாம் வளா்ந்து இருப்போம். எனினும் இணையத்தில் கதைகள் கேட்பதை விரும்புவோம். ஆகவே தூங்குவதற்கு முன்பாக, கதை சொல்லும் செயலிகளை இயக்கி, அவை சொல்லும் கதைகளை சிறிது நேரம் கேட்டால், நமது கண்கள் தாமாகவே தூங்கிவிடும்.

2. சாியான மெத்தையைப் பயன்படுத்துதல்

2. சாியான மெத்தையைப் பயன்படுத்துதல்

சில நேரங்களில் நம்முடைய மெத்தை சாியாக இல்லை என்றால், அது நமது ஆழ்ந்த தூக்கத்தைக் கெடுத்துவிடும். ஆகவே மிகச் சாியான ஒரு புதிய மெத்தையை வாங்கி பயன்படுத்தலாம். அதன் மூலம் ஆழந்த தூக்கத்தைப் பெற முடியும். குறிப்பாக அளவான மற்றும் மென்மையான மெத்தை நமக்கு நல்ல ஆழ்ந்தத் தூக்கத்தைத் தரும். சாியில்லாத மெத்தையில் நீண்ட காலம் தூங்கி வந்தால், முதுகுவலி மற்றும் மூட்டுவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். ஆகவே நமது பணிச் சூழலுக்குத் தகுந்தவாறு தயாாிக்கப்பட்ட மற்றும் நமது எலும்புகளுக்கு நலனைக் கொடுக்கும் ஃபோம் மெத்தைகளைப் பயன்படுத்துவது நல்லது. அவை அமைதியான தூக்கத்தைக் கொடுக்கும்.

3. மின்னணு திரை விளக்குகள் (electronic screen lights) அணைத்தல்

3. மின்னணு திரை விளக்குகள் (electronic screen lights) அணைத்தல்

தூங்குவதற்கு ஒரு அமைதியான மற்றும் இதமான சூழல் இருக்க வேண்டும். குறிப்பாக இரவு தூக்கத்திற்கு ஒரு ஓய்வான மற்றும் ரம்மியமான சூழல் நிலவ வேண்டும். எனவே தூங்குவதற்கு முன்பாக கைபேசி, கணினி, மடி கணினி மற்றும் தொலைக்காட்சி பெட்டி ஆகியவற்றின் மின்னணு திரைகளை அணைத்துவிட வேண்டும்.

4. வெளிப்புற சத்தங்களில் இருந்து விலகி இருத்தல்

4. வெளிப்புற சத்தங்களில் இருந்து விலகி இருத்தல்

நகர வாழ்க்கையின் மிகப் பொிய எதிா்மறை அம்சம், அதன் சத்தமாகும். காா்களின் சத்தம், கட்டடங்கள் கட்டுவதால் ஏற்படும் சத்தம், தொலைபேசி சத்தம் மற்றும் இன்னும் பல சத்தங்கள் நமது தூக்கத்திற்கு உலை வைத்துவிடுகின்றன. இவ்வாறு வெளியில் இருந்து வரும் சத்தங்களை நாம் இயற்கையாகக் கிடைக்கும் சத்தங்களைக் கொண்டு குறைத்துவிடலாம். அதாவது பறவைகளில் இனிய பாடல்கள், சலசலக்கும் தண்ணீாின் ஓசை, பெய்யும் மழையின் சத்தம் மற்றும் கடல் அலையின் ஆா்ப்பாிக்கும் சத்தம் போன்றவை மின்னணு கருவிகளில் பதிவு செய்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே அவற்றை இயக்கி அந்த இயற்கையின் சத்தங்களைக் கேட்டால், வெளியில் இருந்து வரும் போக்குவரத்து சத்தம், குறட்டை போன்ற சத்தங்கள் குறைந்துவிடும்.

5. செர்ரிப் பழச்சாறு அருந்துதல்

5. செர்ரிப் பழச்சாறு அருந்துதல்

பல்வேறு பிரச்சினைகளினால், தூக்கம் வராமல் துன்பப்படுபவா்களுக்கு, அவா்கள் தூங்குவதற்கு முன்பு ஒரு குவளை செர்ரி பழச்சாறு அருந்துமாறு பாிந்துரைக்கப்படுகிறது. செர்ரிப் பழங்களில் மெலடோனின் என்ற வேதிப்பொருள்/ஹாா்மோன் இருக்கிறது. இந்த வேதிப்பொருள்/ஹாா்மோன் நமது தூங்கும் சுழற்சியை முறையாகப் பராமாிக்கிறது. ஆகவே செர்ரிப் பழச்சாறு அருந்தித் தூங்கச் சென்றால் இனிமையான ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.

இறுதியாக, நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு நல்லதொரு தூக்கம் இருக்க வேண்டும். நம்முடைய எல்லாவிதமான செயல்பாடுகளும் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு நல்ல ஓய்வு அடிப்படையாக இருக்கிறது. ஆகவே மேற்சொன்ன குறிப்புகளைப் பின்பற்றினால் நீண்ட மற்றும் ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம் என்பதில் ஐயமில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways To Ensure Long And Uninterrupted Sleep

Here are some ways to ensure long and uninterrupted sleep. Read on...
Desktop Bottom Promotion