For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க மார்பகத்தில் ஏற்படும் எல்லா பிரச்சனைகளிலிருந்து உங்கள பாதுகாக்க இந்த விஷயங்களை செய்யுங்க...!

ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் நீண்ட ஆயுளுக்கு சில பழக்க வழக்கங்கள் இல்லாமல் இருப்பது முக்கியமானது. அதற்காக, நீங்கள் புகைபிடிப்பதையும் குடிப்பதையும் விட்டுவிட வேண்டும்.

|

மற்ற உடல்நலக் கவலைகளைப் போலவே, ஒருவரின் மார்பக ஆரோக்கியத்தையும் கவனித்துக்கொள்வது ஒவ்வொரு பெண்ணின் பொறுப்பாகும். உங்கள் 20 களின் முற்பகுதியில் அல்லது 70 களின் பிற்பகுதியில் மார்பக கட்டிகள், மார்பக வலி அல்லது மென்மை போன்ற மார்பக தொடர்பான பிரச்சினைகள் எப்போது வேண்டுமானாலும் தோன்றும். ஒவ்வொரு ஆண்டும் நூறாயிரக்கணக்கான பெண்கள் மார்பக தொடர்பான பிற பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் மார்பக பிரச்சினைகள் குறித்த குடும்ப வரலாறு உங்களிடம் இருந்தால் கூட இதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

ways to boost your breast health

மார்பக பிரச்சினைகள் குறித்த குடும்ப வரலாறு உங்களிடம் இருந்தால் கூட இதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். இந்த முக்கியமான தலைப்பை நாம் அனைவரும் அடிக்கடி புறக்கணிக்கிறோம். நீங்கள் ஆபத்தில் இருக்கக்கூடாது என்று நினைத்தால், இது பற்றிய விஷயங்களை தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. இந்த உடல்நலக் கவலைகளைத் தடுப்பது கடினம் என்றாலும், அதைப் பெறுவதற்கான வாய்ப்புகளை குறைக்க பல வழிகள் உள்ளன. உங்கள் மார்பக ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் மார்பக நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும் எளிய வழிகளைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்

தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்

இது ஒவ்வொரு நபருக்கும் வயது மற்றும் பாலினத்தைப் பொருட்படுத்தாமல் பரிந்துரைக்கப்படும் ஒன்று. ஆனால் நம்மில் பலர் இதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது மற்றும் எந்தவொரு நாட்பட்ட நோயையும் உருவாக்கும் அபாயத்தை பாதியாக குறைக்கும். நீங்கள் எந்த வகையான உடல் செயல்பாடுகளைச் செய்யத் தேர்வுசெய்தாலும், நீங்கள் சீரானவர் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

MOST READ: இந்த ராசிக்கார ஆண்களுக்கு அழகான பெண்களைவிட இந்த மாதிரி பொண்ணுங்களதான் ரொம்ப பிடிக்குமாம்...!

நீரேற்றமாக இருங்கள் மற்றும் ஆரோக்கியமாக சாப்பிடுங்கள்

நீரேற்றமாக இருங்கள் மற்றும் ஆரோக்கியமாக சாப்பிடுங்கள்

ஒரு நாளில் நாம் குடிக்கும் நீரின் அளவும், நம்முடைய தட்டில் நாம் நிரப்பும் உணவும் நம் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உகந்த ஆரோக்கியத்திற்கு, ஒவ்வொரு நாளும் குறைந்தது ஐந்து முதல் எட்டு பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது மிக முக்கியம். ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், கேரட், தக்காளி போன்ற காய்கறிகளும், தர்பூசணி, பெர்ரி மற்றும் செர்ரி போன்ற பழங்களும் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. மேலும், அக்ரூட் பருப்புகள், மீன், சோயாபீன்ஸ் மற்றும் பூசணி விதைகளில் காணப்படும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களை உட்கொள்வதை அதிகரிக்கவும்.

ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும்

ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும்

சில ஆய்வுகளின்படி, அதிக எடையுடன் இருப்பது மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இவை இரண்டுக்கும் இடையிலான தொடர்பு முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை என்றாலும், அவை நிச்சயமாக ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. உங்கள் உடல் நிறை குறியீட்டை (பிஎம்ஐ) 30 வயதுக்கு கீழ் வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும். 30 அல்லது அதற்கு மேற்பட்ட பி.எம்.ஐ மார்பக புற்றுநோய் உட்பட பல நாள்பட்ட சுகாதார பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கும்.

MOST READ: உங்க துணைகிட்ட இந்த விஷயங்கள் எல்லாம் நீங்க செஞ்சா உறவில் இருமடங்கு இன்பம் இருக்குமாம்...!

புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கத்தை கைவிடுங்கள்

புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கத்தை கைவிடுங்கள்

ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் நீண்ட ஆயுளுக்கு சில பழக்க வழக்கங்கள் இல்லாமல் இருப்பது முக்கியமானது. அதற்காக, நீங்கள் புகைபிடிப்பதையும் குடிப்பதையும் விட்டுவிட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கிளாஸ் மதுபானங்களை உட்கொள்ளும் பெண்கள் மார்பக புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தில் உள்ளனர். மறுபுறம், புகையிலை மார்பக புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு வகையான புற்றுநோய்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது தவிர, சரியான நேரத்தில் தூங்குவதும், உங்கள் மன அழுத்தத்தை சரிபார்ப்பதும் மிக முக்கியம்.

உள்ளாடைகளில் கவனம் செலுத்தவும்

உள்ளாடைகளில் கவனம் செலுத்தவும்

பெண்கள் ஆடைகளை தேர்வு செய்வதில் மிக அதிகம் கவனம் செலுத்துவார்கள். அதே கவனத்தை தங்கள் உள்ளாடைகளை தேர்வு செய்வதில் காட்டுவதில்லை. உள்ளாடைகளும் பெண்களின் மார்பக ஆரோக்கியத்தை பாதிக்கும். ஆதலால், உள்ளாடைகளை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

ways to boost your breast health

Here we are talking about the ways to boost your breast health.
Desktop Bottom Promotion