For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்கள் கல்லீரல் இறந்துட்டு இருக்குனு அர்த்தமாம்... உடனே டாக்டரை பாருங்க!

உங்கள் கல்லீரல் ஆபத்தில் இருக்கும் என்பதைக் குறிக்கும் சில ஆபத்தான அறிகுறிகள் உள்ளன. எந்தவித அறிகுறிகளையும் புறக்கணிக்காமல் சரியான நேரத்தில் சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

|

உங்கள் கல்லீரல் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு கணிசமாக பங்களிக்கிறது. உங்கள் உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை மாற்றுவது போன்ற வளர்சிதை மாற்ற செயல்பாடுகளுக்கு கல்லீரல்தான் பொறுப்பாகும், எனவே கல்லீரல் தீங்கு விளைவிக்கும் முன் நச்சுப் பொருட்கள் வெளியேற்றப்படுவதை உறுதி செய்கிறது. இருப்பினும், உங்கள் கல்லீரல் பிரச்சனையில் இருக்கும்போது மற்றும் சரியாக செயல்படாதபோது, அது பல்வேறு வழிகளில் உங்களை எச்சரிக்க முயற்சிக்கும்.

Warning Signs of Dying Liver That Should Not be Ignored in Tamil

உங்கள் கல்லீரல் ஆபத்தில் இருக்கும் என்பதைக் குறிக்கும் சில ஆபத்தான அறிகுறிகள் உள்ளன. எந்தவித அறிகுறிகளையும் புறக்கணிக்காமல் சரியான நேரத்தில் சிகிச்சை பெற வேண்டியது அவசியம். அவ்வாறு செய்யாமல் இருப்பது உங்கள் ஆரோக்கியத்தை மேலும் மோசமாக்கும். எனவே இவற்றில் ஏதேனும் இருந்தால் உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்தப்போக்கு மற்றும் சிராய்ப்பு

இரத்தப்போக்கு மற்றும் சிராய்ப்பு

உங்களுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டால், காயங்களுக்குப் பிறகு எளிதில் இரத்தப்போக்கு அல்லது சிராய்ப்பு ஏற்படும். இரத்தம் உறைவதற்குத் தேவையான குறிப்பிட்ட புரதங்கள் இல்லாதபோது இது ஏற்படுகிறது, இதனால் கல்லீரலில் சில சிக்கல்கள் ஏற்படும். இதனால் தோலின் கீழ் இரத்தம் தேங்கி, காயங்களுக்கு வழிவகுக்கிறது.

கால் வீக்கம்

கால் வீக்கம்

ஒருவருக்கு நாள்பட்ட கல்லீரல் நோய் இருந்தால், கால்களில் திரவம் சேரும். அதனால் பாதங்கள் வீக்கமடையும். இந்த அறிகுறியை நீங்கள் கவனித்தவுடன், வீக்கத்திற்கான சரியான காரணத்தைப் பற்றி அறிய உடனடியாக மருத்துவரை அணுகவும்.

மஞ்சள் காமாலை மற்றும் தோல் அரிப்பு

மஞ்சள் காமாலை மற்றும் தோல் அரிப்பு

இது கல்லீரல் நோயின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். மஞ்சள் காமாலை என்பது கண்கள் மற்றும் சிறுநீரின் மஞ்சள் நிறத்தைக் குறிக்கிறது மற்றும் மற்றவர்களுக்கு வெளிப்படையாக தெரியும் முதல் நோயாகும். இது கல்லீரல் செல்களை அழிப்பதால், இரத்தத்தில் பிலிரூபின் அதிகமாக வெளியேறுகிறது மற்றும் குறிப்பிட்ட இரத்த பரிசோதனைகளில் காணப்படுவது போல் அதன் அளவை அதிகரிக்கிறது. இது உடல் முழுவதும் அரிப்பு மற்றும் சோர்வை ஏற்படுத்தலாம்.

MOST READ: கன்னித்தன்மையை இழப்பது என்றால் உண்மையில் என்ன?அதன்பின் என்னென்ன உளவியல் மாற்றங்கள் நடக்கும் தெரியுமா

அடிவயிறு வீக்கம்

அடிவயிறு வீக்கம்

நாள்பட்ட கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அடிவயிற்றில் திரவம் குவிந்து வயிற்றுப் பெருக்கத்தை ஏற்படுத்துவதைக் கவனிக்கலாம். கல்லீரல் மற்றும் குடலின் மேற்பரப்பிலிருந்து திரவம் கசிந்து ஆஸ்கைட்டுகளுக்கு வழிவகுக்கிறது, இதனால் வயிறு பகுதியில் திரவம் குவிகிறது. வீங்கிய வயிறு என்பது கல்லீரல் ஈரல் அழற்சி அல்லது ஆல்கஹால் ஹெபடைடிஸ் காரணமாக காணப்படும் ஆஸ்கைட்டின் அறிகுறிகளில் ஒன்றாகும்.

இரத்த வாந்தி

இரத்த வாந்தி

சிரோசிஸ் இருந்தால், ஒருவர் இரத்த வாந்தி எடுக்கலாம் அல்லது இரத்தத்துடன் மலம் வெளியேறலாம். எனவே அதை ஒருபோதும் அலட்சியமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.

சிவந்த மற்றும் எரியும் உள்ளங்கை

சிவந்த மற்றும் எரியும் உள்ளங்கை

உங்கள் உள்ளங்கையில் தொடர்ந்து எரிச்சல் உணர்வு இருப்பது கல்லீரல் பாதிப்பைக் குறிக்கும். இரத்தத்தில் உள்ள அசாதாரண ஹார்மோன் அளவுகள் காரணமாக இந்த அறிகுறி காணப்படுகிறது, குறிப்பாக மதுபானம் அதிகம் அருந்துபவர்களுக்கு இந்த பிரச்சினை அதிகமாக இருக்கும்.

MOST READ: இந்த 5 ராசிக்காரங்க கோபப்படும்போது எரிமலை மாதிரி வெடிப்பாங்களாம்... ரொம்ப ஆபத்தானவங்களாம் இவங்க...!

தூக்கமின்மை

தூக்கமின்மை

கல்லீரல் பிரச்சினை உள்ளவர்களுக்கு தூக்கமின்மை பிரச்சினை இருக்கும். இரத்த தூக்க சுழற்சியில் திரட்டப்பட்ட நச்சுகள் தொந்தரவு செய்யப்படும் மற்றும் இந்த நிலை தீவிரமடைந்தால் சில நோயாளிகள் கோமா நிலைக்கு செல்லலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Warning Signs of Dying Liver That Should Not be Ignored in Tamil

Check out the warning signs and symptoms of dying liver that should not be ignored.
Desktop Bottom Promotion