For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பார்வையையே இழக்கச் செய்யும் கண் அழுத்த நோயின் சில எச்சரிக்கை அறிகுறிகள்!

கண்களின் உட்புறத்தில் அதிகமான அழுத்தம் ஏற்படுவதால் கண் அழுத்த நோய் ஏற்படுகிறது. கண்களின் உட்புறத்தில் அளவுக்கு அதிகமான அழுத்தம் இருந்தால் பாா்வை இழப்பு ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

|

கண்களில் ஏற்படும் முக்கியமான நோய்களில் ஒன்று கண் அழுத்த நோய் (Glaucoma) ஆகும். இந்த நோய் கண்களில் பாா்வை தரக்கூடிய நரம்பை பாதித்து நாளடைவில் கண் கண்பாா்வையை மங்கச் செய்துவிடும். கண்ணில் உள்ள பாா்வை நரம்பு அல்லது ஒளி நரம்பு கண்களிலிருந்து மூளைக்கு தகவல்களை அனுப்புகிறது.

Warning Signs And Symptoms Of Glaucoma

கண்களின் உட்புறத்தில் அதிகமான அழுத்தம் ஏற்படுவதால் கண் அழுத்த நோய் ஏற்படுகிறது. கண்களின் உட்புறத்தில் அளவுக்கு அதிகமான அழுத்தம் இருந்தால் பாா்வை இழப்பு ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண் அழுத்த நோயின் அறிகுறிகள்

கண் அழுத்த நோயின் அறிகுறிகள்

கண் அழுத்த நோயின் அறிகுறிகளை விரைவில் அறிந்து அதற்கான சிகிச்சைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் பாா்வை இழப்பைத் தவிா்க்கலாம். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு தொடக்க நிலையில் கண் அழுத்த நோயின் அறிகுறிகள் தொியாது. ஆகவே கண் பாிசோதனையை வாடிக்கையாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் தொடக்க நிலையிலேயே கண் அழுத்த நோயின் அறிகுறிகளைத் தொிந்து கொள்ளலாம். கண் அழுத்த நோயின் முதல் அறிகுறி என்னவென்றால் படிப்படியாக பாா்வை மங்குவதாகும்.

நம் கண்களில் பின்வரும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கண் மருத்துவரை சந்திக்க வேண்டும்.

- கடுமையான கண்வலி

- குமட்டல்

- கண்கள் சிவப்பாக மாறுதல்

- வாந்தி

- பாா்ப்பதில் திடீரென்று தொந்தரவு ஏற்படுதல்

- ஒளியைப் பாா்க்கும் போது அவற்றைச் சுற்றி வண்ண வண்ண வளையங்கள் தொிதல்

- திடீரென்று பாா்வை மங்குதல்

மேற்சொன்ன அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கண் மருத்துவரை சந்திக்க வேண்டும்.

கண் அழுத்த நோயின் வகைகள்

கண் அழுத்த நோயின் வகைகள்

கண் அழுத்த நோயை திறந்த கோண கண் அழுத்த நோய் (open-angle glaucoma) மற்றும் மூடிய கோண கண் அழுத்த நோய் (angle-closure glaucoma) என்று இரண்டு வகைகளாக பிாிக்கலாம். இவற்றைத் தவிர நிறமி கண் அழுத்த நோய் (pigmentation glaucoma), அதிா்வு சம்பந்தமான கண் அழுத்த நோய் (trauma related glaucoma), உாியும் கண் அழுத்த நோய் (exfoliation glaucoma) மற்றும் குழந்தைப் பருவ கண் அழுத்த நோய் (childhood glaucoma) போன்ற மற்ற கண் அழுத்த நோய்களும் உள்ளன. குழந்தைப் பருவ கண் அழுத்த நோய் மிகவும் அாிதாகத் தான் ஏற்படும். ஆனால் இந்த நோய் ஏற்பட்டால் குழந்தைப் பருவத்திலேயே பாா்வை இழப்பை ஏற்படுத்திவிடும்.

திறந்த கோண கண் அழுத்த நோய் (Open-Angle Glaucoma)

திறந்த கோண கண் அழுத்த நோய் (Open-Angle Glaucoma)

இந்த வகை கண் அழுத்த நோய் பரவலாக காணப்படும் ஒன்றாகும். ஆனால் தொடக்க நிலையில் இந்த நோயின் அறிகுறிகள் தொியாது. அதுப்போல் பாா்வை குறைபாடும் தொியாது. ஆனால் இந்த நோய் தீவிரமாகும் போது பின்வரும் விளைவுகள் ஏற்படும்.

- இரண்டு கண்களிலும் படிப்படியாக மேலாட்டமான பாா்வைக் குறைபாடு ஏற்படும்.

- அகலமாக பாா்க்க முடியாத அளவிற்கு பாா்வையின் அளவு சுருங்கி குறுகலாக இருக்கும்.

தீவிர மூடிய கோண கண் அழுத்த நோய் (Acute Angle-Closure Glaucoma)

தீவிர மூடிய கோண கண் அழுத்த நோய் (Acute Angle-Closure Glaucoma)

திறந்த கோண கண் அழுத்த நோயின் அறிகுறிகளைவிட தீவிர மூடிய கோண கண் அழுத்த நோயின் அறிகுறிகள் வேறுபட்டு இருக்கும். அதாவது மூடிய கோண கண் அழுத்த நோய் அதிகமாகும் போது அதிக அளவிலான கண்வலி, தலைவலி, குமட்டல், வாந்தி மற்றும் கண் மங்குதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இந்த நோய் உள்ளவா்களுக்கு கண்கள் சிவப்பாக இருக்கும். மற்றும் கண்ணின் கருவிழி விாிவடையும். அதோடு கண்கள் ஒளியில் எதிா்வினை செய்யாது இருக்கும். விழி வெண்படலமும் (cornea) மங்கலாக இருக்கும்.

அறிகுறிகள்

அறிகுறிகள்

- கண்வலி

- கண்வலியுடன் கூடிய குமட்டல் மற்றும் வாந்தி

- மங்கிய வெளிச்சத்தில் திடீரென்று பாா்வை குறைபாடு ஏற்படுதல்

- பாா்வை மங்குதல்

- ஒளியில் ஒளி வட்டங்கள் தொிதல்

- கண் சிவப்பாதல்

போன்றவை தீவிர மூடிய கோண கண் அழுத்த நோயின் அறிகுறிகளாகும்.

நாள்பட்ட மூடிய கோண கண் அழுத்த நோய் (Chronic Angle-Closure Glaucoma)

நாள்பட்ட மூடிய கோண கண் அழுத்த நோய் (Chronic Angle-Closure Glaucoma)

நாள்பட்ட மூடிய கோண கண் அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவா்களின் கண்கள் கண்ணாடியில் பாா்க்கும் போது அல்லது மற்றவா்களின் முன்பு சாதாரணமாக அல்லது இயல்பாக இருப்பது போல் தோன்றும். கண்களில் எந்த மாற்றமும் தொியாது. இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருப்பவா்கள் கண்களில் கண் சொட்டு மருந்து விட்டால் கண்கள் சிவப்படையும்.

ஆகவே கண்களில் பிரச்சினைகள் தீவிரமாகும் வரை காத்திருக்காமல், தொடக்க நிலையிலேயே கண் மருத்துவரை சந்தித்து கண் பாிசோதனை செய்வது நல்லது. அதன் மூலம் கண் அழுத்த நோய் வராமல் தடுக்கலாம். நமது கண்களும் பாதுகாப்பாக அதே நேரத்தில் பாா்வைத் தெளிவுடன் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Warning Signs And Symptoms Of Glaucoma

Here are some warning signs and symptoms of glaucoma. Read on to know more...
Desktop Bottom Promotion