For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த சத்து அதிகம் உள்ள ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகமாம்... ஜாக்கிரதை!

மல்டிவைட்டமின்கள் ஆண்களிடையே நுரையீரல் புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயத்தில் 30% முதல் 40% அதிகரிப்புடன் தொடர்புடையது.

|

நாம் சாப்பிடும் உணவுகள் நம் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உணவுகள் தான் நாம் ஆரோக்கியமாக இருக்கவும், ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தவும் காரணமாக இருக்கும். ஏனெனில், உணவுகளில் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. ஊட்டச்சத்துக்களை சரியான அளவு நாம் எடுத்துக்கொள்ளா விட்டாலும், அதைவிட அதிகமாக எடுத்துக்கொண்டாலும், அது ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். 70,000 க்கும் மேற்பட்ட மக்கள் மீதான ஆராய்ச்சி ஆய்வில் வைட்டமின் பி நுகர்வுக்கும் நுரையீரல் புற்றுநோயின் அதிக ஆபத்துக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

Vitamin B12 Is Linked With Increased Risk Of Lung Cancer In Male Smokers; Says Study

வைட்டமின் பி12 சப்ளிமெண்ட்ஸ் அதிகமாக இருக்கும் புகைப்பிடிக்கும் நபர்களுக்கு நுரையீரல் புற்றுநோயின் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு என்ன சொல்கிறது என்று இக்கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நன்மைகள்

நன்மைகள்

வைட்டமின் பி ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். இது தொற்றுநோயைத் தடுக்க உதவுகிறது மற்றும் உயிரணு வளர்ச்சி, இரத்த சிவப்பணுக்கள், ஆற்றல் மட்டத்தை அதிகரிப்பது, பார்வையை மேம்படுத்துதல், மூளையின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துதல், செரிமானத்திற்கு உதவுதல் மற்றும் சரியான நரம்பு செயல்பாட்டை உறுதி செய்வதற்கு உங்களுக்கு உதவுகிறது.

வைட்டமின் பி

வைட்டமின் பி

வைட்டமின் பி பெரும்பாலும் விலங்கு பொருட்களில் காணப்படுகிறது. விலங்கு பொருட்களிலிருந்து ஒருவர் தவறவிட்ட வைட்டமின் பி அளவை ஈடுசெய்ய, மக்கள் பெரும்பாலும் கூடுதல் உணவுகளை உட்கொள்கிறார்கள். வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் சப்ளிமெண்ட் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி3, வைட்டமின் பி5, வைட்டமின் பி6, வைட்டமின் பி7, வைட்டமின் பி9 மற்றும் வைட்டமின் பி12 ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

வைட்டமின் பி பற்றி இந்த ஆய்வு என்ன சொல்கிறது?

வைட்டமின் பி பற்றி இந்த ஆய்வு என்ன சொல்கிறது?

ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் ஆன்காலஜியில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி ஆய்வில், வைட்டமின் பி6 மற்றும் பி12 ஆகியவை தனிப்பட்ட சப்ளிமெண்ட் மூலங்களிலிருந்து பயன்படுத்தப்படுவதைக் கண்டறிந்துள்ளது. மல்டிவைட்டமின்கள் ஆண்களிடையே நுரையீரல் புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயத்தில் 30% முதல் 40% அதிகரிப்புடன் தொடர்புடையது. துணை வைட்டமின்கள் பி6, ஃபோலேட் மற்றும் பி12 ஆகியவற்றின் பயன்பாடு பெண்களிடையே நுரையீரல் புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புபடுத்தப்படவில்லை என்பதையும் அது கண்டறிந்துள்ளது.

புகைபிடித்தல்

புகைபிடித்தல்

இந்த ஆய்வில் 10 ஆண்டு சராசரி கூடுதல் அளவை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். இதில், புகைபிடிக்கும் ஆண்களிடையே ஆபத்து இன்னும் அதிகமாக இருப்பதை ஆய்வு கணடறிந்துள்ளது. மேற்கு வாஷிங்டன் மாநிலத்தின் ஒரு பகுதியில் வசிக்கும் 50 முதல் 76 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நுரையீரல் புற்றுநோய்

நுரையீரல் புற்றுநோய்

உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கின்ற தரவுகளின்படி, நுரையீரல் புற்றுநோயால் 2020 இல் 2 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் நிகழ்ந்துள்ளன. இதுவே இந்த ஆண்டில் அதிக புற்றுநோய் தொடர்பான இறப்பு ஆகும். இதே ஆண்டில், 2.21 மில்லியன் மக்கள் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வழக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல, மார்பக புற்றுநோயால் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் நுரையீரல் புற்றுநோயின் பாதிப்பு அதிகமாக உள்ளது. நுரையீரல் புற்றுநோய் அனைத்து புற்றுநோய்களில் 5.9% மற்றும் புற்றுநோய் தொடர்பான இறப்புகளில் 8.1% அதிகமாக உள்ளது.

வைட்டமின் பி எவ்வளவு அதிகமாக உள்ளது?

வைட்டமின் பி எவ்வளவு அதிகமாக உள்ளது?

பல்வேறு வைட்டமின் பிகளின் தினசரி தேவை:

வைட்டமின் பி1: 1.5 மி.கி

வைட்டமின் பி2: 1.7 மி.கி

வைட்டமின் பி3: 20 மி.கி

வைட்டமின் பி5: 5 மி.கி

வைட்டமின் பி6: 1.3 மி.கி

வைட்டமின் B7: 30 எம்.சி.ஜி

வைட்டமின் பி9: 400 எம்.சி.ஜி

வைட்டமின் பி12: 2.4 எம்.சி.ஜி

வைட்டமின் சப்ளிமெண்ட்ஸ்

வைட்டமின் சப்ளிமெண்ட்ஸ்

இந்த புள்ளிவிவரங்கள் பல சுகாதார நிறுவனங்களால் பகிரப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அமைந்தவை. வைட்டமின் பி ஒருவருக்கு எவ்வளவு தேவைப்படும் என்பதை பற்றி தெரிந்துகொள்ள பொது மருத்துவரைத் தொடர்புகொள்வது நல்லது. வைட்டமின் சப்ளிமெண்ட்ஸின் அதிகப்படியான நுகர்வுக்கு எதிராக நிபுணர்கள் எப்போதும் எச்சரித்துள்ளனர். சுய மருந்துகளுக்குச் செல்வதற்குப் பதிலாக, சப்ளிமெண்ட்டுகளுக்கு எப்போதும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

வைட்டமின் பி 12 இன் உணவு ஆதாரங்கள்

வைட்டமின் பி 12 இன் உணவு ஆதாரங்கள்

இறைச்சி, கோழி, மீன், முட்டை, பால் மற்றும் பிற பால் பொருட்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் வைட்டமின் பி 12 இயற்கையாகவே காணப்படுகிறது. பொதுவாக இது தாவர உணவுகளில் அதிகமாக இல்லை. ஆனால் வலுவூட்டப்பட்ட காலை உணவு தானியங்கள் அதிக உயிர் கிடைக்கும் தன்மை கொண்ட வைட்டமின் பி 12 இன் எளிதில் கிடைக்கக்கூடிய மூலமாகும்.

இறுதி குறிப்பு

இறுதி குறிப்பு

பெரும்பாலான பங்கேற்பாளர்கள் ஒவ்வொரு பி வைட்டமின்க்கும் அமெரிக்க ஆய்வில், பரிந்துரைக்கப்பட்ட தினசரி அளவை விட அதிமாக கொடுத்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வைட்டமின் பி12 இன் அதிகப்படியான நுகர்வு டிஎன்ஏ மெத்திலேஷனில் ஏற்படும் மாற்றங்களுடன் தொடர்புடையது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vitamin B12 Is Linked With Increased Risk Of Lung Cancer In Male Smokers; Says Study

Vitamin B12 Is Linked With Increased Risk Of Lung Cancer In Male Smokers; Know What Journal of Clinical Oncology Study Says.
Story first published: Tuesday, June 28, 2022, 11:59 [IST]
Desktop Bottom Promotion