For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் வேண்டாமென தூக்கி எறியும் மாம்பழத் தோல் உங்கள் ஆயுளை எப்படியெல்லாம் அதிகரிக்கும் தெரியுமா?

நிபுணர்களின் கூற்றுப்படி, மாம்பழத் தோலை உட்கொள்வதற்கான சிறந்த வழி உங்களுக்கு பிடித்த பானங்கள் மற்றும் உணவுகளில் சிறுசிறு துண்டுகளாக சேர்ப்பதுதான்.

|

கோடைகாலம் என்றாலே அனைவரின் நினைவிற்கும் முதலில் வருவது மாம்பழம்தான். மாம்பழம் சாப்பிடுவதற்காகவே கோடைகாலத்திற்காக காத்திருக்கும் பலர் இருக்கிறார்கள். இந்த பருவகால பழம் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக இருக்கிறது. மா அது சேர்க்கப்படும் அனைத்து உணவுகளுக்கும் தனித்துவமான சுவையை வழங்கக்கூடியது.

Unknown Health Benefits of Mango Peels

இது மட்டுமல்லாமல், இந்த பழத்தின் அளவிற்கு அதன் தோலும் சமமாக ஆரோக்கியமானது மற்றும் நன்மை பயக்கும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, அவை பல நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகின்றன. அதன் முக்கியமான நன்மைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாம்பழ தோலை எப்படி சாப்பிட வேண்டும்?

மாம்பழ தோலை எப்படி சாப்பிட வேண்டும்?

நிபுணர்களின் கூற்றுப்படி, மாம்பழத் தோலை உட்கொள்வதற்கான சிறந்த வழி உங்களுக்கு பிடித்த பானங்கள் மற்றும் உணவுகளில் சிறுசிறு துண்டுகளாக சேர்ப்பதுதான். தோலை நுகர்வுக்கு பயன்படுத்துவதற்கு முன்பு மாம்பழத்தை சரியாக கழுவ வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

எடைகுறைப்பிற்கு உதவும்

எடைகுறைப்பிற்கு உதவும்

மாம்பழ தோல் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் எடை குறைக்க உதவுகிறது. குயின்ஸ்லாந்து ஸ்கூல் ஆஃப் பார்மசி பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, நம் டாக் மாய் மற்றும் இர்வின் வகைகளின் மாம்பழ தோல்கள் உடலில் கொழுப்பு செல்கள் உருவாகுவதைக் குறைக்கின்றன, எனவே எடையை குறைக்க உதவுகின்றன.

MOST READ: தடுப்பூசி போட்ட பிறகு இந்த விஷயங்களை தெரியாமகூட செய்யாதீங்க... இல்லனா கொரோனா ஆபத்து அதிகமாகிரும்...!

நோயெதிர்ப்பு சக்தி மற்றும் செரிமானம்

நோயெதிர்ப்பு சக்தி மற்றும் செரிமானம்

நார்ச்சத்து நிறைந்த இந்த பழம் செரிமான அமைப்பை எளிதில் வைத்திருக்கிறது மற்றும் வைட்டமின் ஏ, சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கொரோனவை எதிர்கொள்ளும் இந்த சமயத்தில் இந்த பழம் மிகவும் அவசியமானதாகும்.

வயதாவதை தாமதப்படுத்துகிறது

வயதாவதை தாமதப்படுத்துகிறது

நிபுணர்களின் கூற்றுப்படி, மாம்பழ தோல் சருமத்திற்கு நல்லது மற்றும் சுருக்கங்களை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் சருமத்தை பளபளப்பாக்குகிறது. மேலும் இதிலிருக்கும் சிறப்பான ஆக்ஸிஜனேற்றிகள் வயதாகும் செயல்முறையை மெதுவாக்க உதவுகின்றன.

புற்றுநோய் சிகிச்சை

புற்றுநோய் சிகிச்சை

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த, மாம்பழ தோல்கள் புற்றுநோய்க்கு எதிரான பண்புகளைக் கொண்டிருப்பதாக அறியப்படுகின்றன மற்றும் நுரையீரல், பெருங்குடல், மார்பகம், மூளை மற்றும் முதுகெலும்பு போன்ற புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் பயனளிக்கும். அவை ட்ரைடர்பென்கள் மற்றும் ட்ரைடர்பெனாய்டுகள் என்னும் தாவர கலவைகள் நிறைந்தவை மற்றும் நீரிழிவு நோய் சிகிச்சைக்கும் உதவியாக இருக்கும்.

MOST READ: கற்பனைக்கும் எட்டாத கடுமையான சட்டங்களை கொண்ட நாடுகள்... இதுக்குகூட இங்கெலாம் தண்டனையா?

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

மாம்பழத் தோலில் பைட்டோநியூட்ரியண்ட்கள் நிறைந்துள்ளன, அவை இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றன மற்றும் இதய பிரச்சினைகளையும் தடுக்க உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்த அளவு இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது மற்றும் ஒரு ஆய்வின்படி, நார்ச்சத்து நிறைந்த உணவை வழக்கமாக உட்கொள்வது இதய நோய் அபாயத்தை 40 சதவீதம் குறைக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Unknown Health Benefits of Mango Peels

Check out the unknown health benefits of mango peels.
Story first published: Saturday, June 26, 2021, 11:15 [IST]
Desktop Bottom Promotion