For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த சூப்பர்ஃபுட்டை நீங்க அதிகமா சாப்பிடும்போது உங்க ஆரோக்கியத்தை அது எப்படி பாதிக்கும் தெரியுமா?

சரியான அளவில் சாப்பிடும்போது, பிரேசிலிய நட்ஸ்கள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. என்ஹெச்எஸ் படி, ஒரு நாளைக்கு 75 கிராம் செலினியம் 19 முதல் 64 வயதுடைய ஆண்களுக்கு பாதுகாப்பானது.

|

கொரோனா வைரஸ் தொற்று, நம் உடல் நலம் பற்றிய நிறைய விஷயங்களை நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது. உடல்நலம் குறித்து அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று நமக்கு உணர்த்தியுள்ளது. பழங்கள், இறைச்சிகள், காய்கறிகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சீரான உணவை சாப்பிடுவதன் முக்கியத்துவத்தை இப்போது நன்கு அறிந்திருக்கிறோம். சரியான வழியில் நுகரப்படும் போது பல உணவுகள் உடலில் அதிசயங்களை செய்ய முடியும்.

Too much of this superfood can backfire on your health

என்ன சாப்பிட வேண்டும் என்று தெரிந்துகொள்வது, எப்போது சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பது முக்கியம். ஆரோக்கியமான உணவுகள் கூட உடலில் ஒரு பாதகமான விளைவை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள சூப்பர்ஃபுட்டின் அதிகப்படியான அளவு உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கும் என்று காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சூப்பர்ஃபுட் நீங்கள் அதிகமாக உட்கொள்ளக்கூடாது

சூப்பர்ஃபுட் நீங்கள் அதிகமாக உட்கொள்ளக்கூடாது

நட்ஸ்கள் ஆரோக்கியமான உணவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். பாதாம், முந்திரி மற்றும் அக்ரூட் பருப்புகளில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதங்கள் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

MOST READ: பெண்களே! இந்த அறிகுறிகள் இருந்தா அத சாதாரணமா நினைக்காதீங்க...அது மாரடைப்பை ஏற்படுத்துமாம்...!

ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது

ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது

பிரேசிலிய நட்ஸ்களில், நோய் எதிர்ப்பு மற்றும் இனப்பெருக்க அமைப்பின் சரியான செயல்பாட்டிற்கு தேவைப்படும் செலினியம் அடர்த்தியாக உள்ளது. செலினியம் செல்கள் மற்றும் திசுக்களுக்கு ஏற்படக்கூடிய சேதத்தைத் தடுக்க உதவுகிறது. ஆனால் அதிக பிரேசிலிய நட்ஸ்கள் உங்கள் உடலுக்கு அதிக செலினியம் வழங்கலாம். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது.

பக்கவிளைவுகள்

பக்கவிளைவுகள்

தேசிய சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, உடலில் அதிகப்படியான செலினியம் குமட்டல், வயிற்றுப்போக்கு, தோல் அரிப்பு, மனநிலை ஏற்ற இறக்கங்கள், முடி உதிர்தல், உடையக்கூடிய நகங்கள், பற்களின் நிறமாற்றம் மற்றும் நரம்பு மண்டலத்தில் பிரச்சனைகள் போன்ற பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும். சில தீவிர நிகழ்வுகளில், இது மாரடைப்பு, இதய செயலிழப்பு, நடுக்கம் மற்றும் சுவாசிப்பதில் சிரமத்திற்கு வழிவகுக்கும்.

செலினியம் உட்கொள்வது எவ்வளவு பாதுகாப்பானது?

செலினியம் உட்கொள்வது எவ்வளவு பாதுகாப்பானது?

சரியான அளவில் சாப்பிடும்போது, பிரேசிலிய நட்ஸ்கள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. என்ஹெச்எஸ் படி, ஒரு நாளைக்கு 75 கிராம் செலினியம் 19 முதல் 64 வயதுடைய ஆண்களுக்கு பாதுகாப்பானது.

MOST READ: டெய்லி நீங்க முட்டை சாப்பிடுறதால.... உங்க உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா?

அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்

அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்

பிரேசிலிய நட்ஸ்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது அறிவாற்றல் ஆரோக்கியத்திற்கும் மூளை செயல்பாட்டிற்கும் சிறந்தது. ஆய்வுகளின்படி, இந்த கலவைகள் நீண்ட காலத்திற்கு மனச்சோர்வைத் தடுக்க உதவுகின்றன. அதிக கொழுப்பால் அவதிப்படுபவர்கள் பிரேசிலிய நட்ஸ்களை வரையறுக்கப்பட்ட அளவுகளில் எடுத்துக்கொள்ளலாம்.

எத்தனை பிரேசிலிய நட்ஸ்?

எத்தனை பிரேசிலிய நட்ஸ்?

ஒரு நாளைக்கு எத்தனை பிரேசிலிய நட்ஸ்களை நீங்கள் உட்கொள்ளலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள். நட்ஸ்களின் நல்ல தன்மையை உங்களுக்கு வழங்குவதற்கு இரண்டு பிரேசிலிய நட்ஸ்கள் போதுமானவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Too much of this superfood can backfire on your health

Here we are talking about the Too much of this superfood can backfire on your health.
Story first published: Tuesday, October 12, 2021, 9:20 [IST]
Desktop Bottom Promotion