For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடிக்கடி சானிடைசர் யூஸ் பண்றீங்களா? அப்ப இந்த நியூஸ் உங்களுக்கு தான்…

|

கொரோனா வைரஸின் தாக்குதல் ஆரம்பமானது முதல் உலக மக்கள் அனைவருக்கும் வலியுறுத்தப்படுவது என்னவென்றால், அடிக்கடி கைகளை கழுவுங்கள், முக கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியை பின்பற்றுங்கள் என்பது தான். இவை அனைத்தும் வைரஸ் தாக்குலை தடுக்க உதவிடும் வழிகள் ஆகும். கைகளை சோப்பு கழுவுவது எப்படி என்பது முதல் கொண்டு அனைத்தும் கற்பிக்கப்பட்டு வருகிறது. வீட்டில் இருக்கும் போது சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கழுவிடலாம். அதுவே, நீரே இல்லாத இடத்திற்கு செல்கிறோம் என்றால், அதுப்போன்ற இடங்களில் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.

கொரோனா தொடங்குவதற்கு முன்பிருந்தே சானிடைசர் புழக்கத்தில் இருந்த ஒன்று தான். இப்போது அது அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஆல்கஹால் கொண்ட சானிடைசர் வைரஸ் கிருமிகளை அழிப்பதில் நன்கு செயல்படுகிறது. இருந்தாலும், வைரஸை கொல்லும் என்பதற்காக அதனை அளவிற்கு அதிகமாக பயன்படுத்தினால் கூட ஆபத்து தான்.

MOST READ: நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க FSSAI பரிந்துரைக்கும் உணவுகள் எதுலாம் தெரியுமா? இத படிங்க...

அளவிற்கு அதிகமாக பயன்படுத்தும் வேளைகளில், அவை தீங்கு விளைவிக்கும் வைரஸ்களை அழிப்பதோடு, நல்ல பாக்டீரியாக்களையும் கொன்று விடுகிறது. அதுமட்டுமில்லாமல், அவை சரும அழற்சியை போன்றவற்றை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. அதிகப்படியான வறட்சி, எரிச்சல் மற்றும் சிவத்தல், சரும வெடிப்பு அல்லது இரத்த கசிவு போன்ற பிரச்சனைகளும் பலருக்கு ஏற்பட்டுள்ளது.

MOST READ: இன்னும் ஏன் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க முடியலை-ன்னு தெரியுமா? இதோ சில உண்மை காரணங்கள்!

எதுவாக இருந்தாலும், ஆல்கஹால் இல்லாத மற்றும் ஆல்கஹால் சார்ந்த சானிடைசர்கள் இரண்டுமே, உங்களது சருமத்தை எந்தவொரு எதிர்மறையான விளைவுகளிலிருந்தும் காப்பாற்றக்கூடியவை. இருப்பினும், சானிடைசர்களை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் அதனை குறித்து முழுவதுமாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதனை தான் இப்போது பார்க்க போகிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குறைந்த அளவே சிறந்த தீர்வு

குறைந்த அளவே சிறந்த தீர்வு

அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். உணவிற்கு மட்டுமல்ல சானிடைசருக்கும் இது பொருந்தும். சானிடைசர்களை தேவையான அளவு முறையாக உபயோகித்தால், அவை கொடுக்கும் பலன் மிகவும் நன்மையளிக்கக் கூடியது. ஆனால், அதற்கு மாறாக, அளவிற்கு அதிகமாக சானிடைசர் உபயோகித்தால் அவை உங்கள் சருமத்தை பாதிக்க செய்து கை அழற்சி போன்றவற்றை உண்டாக்கிவிடும்.

சானிடைசர்களில் தேவையற்ற இரசாயன மாசுபாடு

சானிடைசர்களில் தேவையற்ற இரசாயன மாசுபாடு

சானிடைசர்களில் தேவையற்ற இரசாயன மாசுக்கள் உள்ளன. எனவே, அவற்றை அதிகமாகப் பயன்படுத்தினால் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். சரும அமைப்பானது ஒருவருக்கு ஒருவர் வேறுபடக்கூடும். அதனால்தான் சானிடைசர்களில் இருக்கும் ரசாயன பொருட்கள், சரும அமைப்பிற்கேற்ப பயனுள்ளதாகவோ அல்லது சில சமயங்களில் பயங்கரமாகவோ அமையலாம். இதன் காரணமாக தான் அதிக அளவில் சானிடைசர்கள் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மாய்ஸ்சுரைசிங் க்ரீம்கள்

மாய்ஸ்சுரைசிங் க்ரீம்கள்

ஒரு வேளை நீங்கள் நீண்ட காலமாக சானிடைசர்களை பயன்படுத்துபவராக இருந்தால், உங்கள் கைகளில் அழற்சியின் அறிகுறிகள் வெளிப்பட தொடங்கலாம். அதுபோன்ற சமயங்களில், சானிடைசர் பயன்படுத்துவதை விட்டுவிடுவதே நல்லது. மேலும், மாய்ஸ்சுரைசர் மற்றும் க்ரீம்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவது சிறந்தது. இது உங்கள் சருமத்தை ஆரோக்கியத்துடனும், முறையான அமைப்புடனும் வைத்திருக்க உதவிடும்.

ஒரு வேளை உங்களுக்கு, ஏற்கனவே, சரும அழற்சி அல்லது வறண்ட சருமம் போன்ற பிரச்சனைகள் இருந்தால் சானிடைசர் உபயோகித்த உடனேயே மாய்ஸ்சரைசரை பயன்படுத்தவும். இது, சருமத்தை வறண்டு விடாமல் பாதுகாக்கும். அதுமட்டுமல்லாமல், சரும அரிப்பு, தோல் அழற்சி மற்றும் தோல் தடிப்பு போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வு காட்டிட உதவும்.

சோப்பு மற்றும் தண்ணீர்

சோப்பு மற்றும் தண்ணீர்

சானிடைசர்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கைகளை கழுவவே முன்னுரிமை கொடுக்க வேண்டும். இந்த சிறு மாற்றம், உங்கள் சருமத்தின் வகையை பொறுத்து, அழற்சி எதிர்வினைகளைத் தடுத்திட உதவும். எனவே, வேறு வழிகள் இல்லாதபோது மட்டுமே சானிடைசர்களை பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், ஆன்டிசெப்டிக் சோப்பு மற்றும் ஓடும் நீர் கொண்டு கைகளை கழுவவும். சோப்பு இல்லாத சூழ்நிலைகளில் ஈரமான துடைப்பான்களை பயன்படுத்திக் கொள்ளவும். அனைத்து வயதினருக்கும் சிறந்த முடிவை வழங்க, இதுபோன்ற சிறுசிறு எளிய மாற்றங்களை பின்பற்றுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Too Much Hand Sanitiser Can Lead To Severe Hand Dermatitis

People have also encountered skin issues like severe dryness, burning, and redness of the skin along with cracked or bleeding skin.