For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தைராய்டு ஹார்மோனால் பாதிக்கப்படும் 4 முக்கிய உறுப்புகள் எவையென்று தெரியுமா?

தைராய்டு என்பது ஒரு நோய் அல்ல. ஆனால் இது ஒரு சுரப்பியாகும். தொண்டையின் முன்பகுதியில் இது காணப்படுகிறது. பட்டாம்பூச்சி வடிவத்தில் காணப்படும் இந்த சுரப்பி உடலின் பல்வேறு செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது

|

இந்தியாவில் நோய்களுக்கான தற்போதைய நிலைமை அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கிறது. இந்த காலகட்டத்தில் மக்கள் பலர் சில பொதுவான நோய்களால் அவதிப்படுகின்றனர். அவை,

* நீரிழிவு

* ஹைப்பர் டென்சன்

* தைராய்டு

Thyroid Prevention Tips: Top 4 Organs Affected By This Hormone

போன்றவையாகும். இவற்றுள் தைராய்டு என்பது ஒரு நோய் அல்ல. ஆனால் இது ஒரு சுரப்பியாகும். தொண்டையின் முன்பகுதியில் இது காணப்படுகிறது. பட்டாம்பூச்சி வடிவத்தில் காணப்படும் இந்த சுரப்பி உடலின் பல்வேறு செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது. தைராய்டு பற்றிய பிரச்சனை மிகவும் அபாயகரமானது. உடலின் பல்வேறு உறுப்புகளை இது சேதப்படுத்துகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தைராய்டு சுரப்பியின் செயல்பாடு

தைராய்டு சுரப்பியின் செயல்பாடு

உணவை ஆற்றலாக மாற்றுவதில் தைராய்டு சுரப்பி உதவுகிறது. ட்ரியோடோதைரோனைன் மற்றும் தைராக்ஸின் ஹார்மோன் உருவாகவும் உதவுகிறது. இந்த ஹார்மோன்கள் பின்வருவனவற்றில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

* சுவாசம்

* இதயத்துடிப்பு

* செரிமான மண்டலம்

* உடல் வெப்பநிலை

இது மட்டுமில்லாமல், இந்த ஹார்மோன்கள் சமநிலையை இழக்கும் போது உடலின் எடை கூடவோ, குறையவோ தொடங்குகிறது. இதுவே தைராய்டு பிரச்சனை என்று அறியப்படுகிறது. மனித உடலின் நான்கு முக்கிய உறுப்புகளை தைராய்டு பிரச்சனை பாதிக்கிறது. இது தொடர்பான பல தகவல்கள் பலருக்கும் தெரியாத போதும், இந்த நான்கு உறுப்புகளுக்கு தைராய்டு ஹார்மோன் உண்டாக்கும் பாதிப்பு குறித்து இனி பார்க்கலாம்.

தைராய்டு, தொண்டைக்கு பாதிப்பை உண்டாக்குகிறது

தைராய்டு, தொண்டைக்கு பாதிப்பை உண்டாக்குகிறது

தைராய்டால் பாதிக்கப்படும் முதல் உறுப்பு தொண்டையாகும். தைராய்டு வீக்கம் மற்றும் கட்டிகளை ஏற்படுத்தி, தொண்டை தொற்று அபாயத்தை அதிகரிக்கிறது. தொண்டை தொற்று பாதிப்பு காரணமாக உணவு உட்கொள்ளும் போதும், எதாவது பருகும் போதும் பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்குகிறது மற்றும் இதனால் உடல் பாதிக்கத் தொடங்குகிறது. தைராய்டு பாதிப்பைத் தொடர்ந்து வரும் பிரச்சனைகளை புறக்கணிப்பது தவறு என்பதால் உடனடியாக மருத்துவரிடம் கலந்தாலோசித்து மருந்து மற்றும் சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம்.

தைராய்டு மூளையை பாதிக்கிறது

தைராய்டு மூளையை பாதிக்கிறது

தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு மூளையில் சேதம் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. மூளையில் உள்ள நரம்புக்கடத்திகள் தைராய்டு பாதிப்பு காரணமாக சரியாக செயல்புரிவதில்லை. இதன் காரணமாக மனித மூளை மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வுக்கு உள்ளாகிறது. இதுமட்டுமில்லாமல் , அவ்வப்போது மனிதர்களுக்கு எரிச்சல் உணர்வும் உண்டாகிறது. அதனால் தைராய்டு பாதிப்பு மூளையைத் தீவிரமாக பாதிக்கிறது.

தைராய்டு கண்களை பாதிக்கிறது

தைராய்டு கண்களை பாதிக்கிறது

தைராய்டு பிரச்சனை கண்களில் உள்ள ரெட்டினா செயல்பாடுகளை பாதிக்கிறது. கண்களை சேதப்படுத்துவது மட்டுமில்லாமல் கண் எரிச்சல், கண் சிவந்து போவது, வீக்கம் போன்ற கண் அழற்சிக்கு காரணமாகிறது. தைராய்டு பாதிப்பின் காரணமாக பார்வை குறைபாடு ஏற்படலாம். இந்த பாதிப்புகள் உண்டாகாமல் தடுக்க, உடற்பயிற்சி செய்வதையும், அயோடின் சேர்க்கப்பட்ட உணவுகள் எடுத்துக் கொள்வதையும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

தைராய்டு கருப்பையை பாதிக்கிறது

தைராய்டு கருப்பையை பாதிக்கிறது

பெண்களுக்கு தைராய்டு பாதிப்பு காரணமாக கருப்பை சேதமடையலாம். தைராய்டு பாதிப்பு, கருப்பை சுருங்க வழிவகுக்கலாம், இதனால் கருப்பையின் அடுக்கு பலவீனமாகலாம். இந்த சூழ்நிலையில் பெண்கள் பல்வேறு கஷ்டமான நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இது மட்டுமில்லாமல் பெண்களின் தாய்மைக்கான கனவும் பாதிக்கப்படக்கூடும். எனவே பெண்கள் தைராய்டு குறித்த பரிசோதனையை அவ்வப்போது செய்து கொள்வது அவசியம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Thyroid Prevention Tips: Top 4 Organs Affected By This Hormone

The thyroid gland helps transform diet into energy as well as in the formation of triiodothyronine and thyroxine hormone. These hormones have a direct effect on our breath, heart rate, digestive system, and body temperature.
Desktop Bottom Promotion