For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எச்சரிக்கை! உடம்பில் இந்த வைட்டமின் குறைவா இருந்தா மாரடைப்பு சீக்கிரம் வருமாம்.. உஷாரா இருங்க..

உடலில் ஒரு குறிப்பிட்ட வைட்டமின் சத்தின் குறைபாடு இருந்தால், அது இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. அது தான் வைட்டமின் கே.

|

சமீப காலமாக உலகளவில் இதய நோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் இதய நோய்கள் மிகவும் பொதுவானதாகிவிட்டன. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் அதிக மரணத்திற்கான முக்கிய காரணமாக இதய நோய்கள் உள்ளன. குறிப்பாக இதய நோய்களில் மாரடைப்பால் தான் சமீப காலமாக ஏராளமானோர் இறந்து வருகிறார்கள். உலகளாவிய சுகாதார அமைப்பின் மதிப்பீடுகளின் படி 2019 ஆம் ஆண்டில் 17.9 மில்லியன் மக்கள் இதய நோய்களால் இறந்துள்ளனர். இது உலகளாவிய இறப்புகளில் 32 ஆகும். இவற்றில் 85% இறப்புகளுக்கு காரணம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகும்.

This Vitamin Deficiency Increase Your Heart Disease Risk

முக்கியமாக மாரடைப்பு, இதய செயலிழப்பு போன்ற இதய பிரச்சனைகள் இளம் வயதினர்களிடையே அதிகரித்து வருவதால், இதய ஆரோக்கியத்தின் மீது அனைவருமே கவனத்தை செலுத்த வேண்டும். அதுவும் உடலில் ஒரு குறிப்பிட்ட வைட்டமின் சத்தின் குறைபாடு இருந்தால், அது இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. அது தான் வைட்டமின் கே. எனவே இந்த வைட்டமின் நிறைந்த உணவுகளை அதிகம் உண்பதன் மூலம் மற்றும் அந்த வைட்டமின் குறைபாட்டின் அறிகுறிகளை தெரிந்து வைத்திருப்பதன் மூலம், மாரடைப்பின் அபாயத்தைக் குறைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரோக்கியத்தில் வைட்டமின் கே சத்தின் பங்கு

ஆரோக்கியத்தில் வைட்டமின் கே சத்தின் பங்கு

உடலில் இரத்தம் உறைதல், காயங்களை குணப்படுத்துவது மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஓர் சத்து தான் வைட்டமின் கே. இந்த வைட்டமின் கே ஃபைலோகுவினோன் என்றும் அழைக்கப்படுகிறது. அதோடு இது வைட்டமின் கே2 அல்லது மெனாகுவினோன் என இரண்டு வகைகளில் வருகிறது. வைட்டமின் கே சத்தின் இந்த இரண்டு வகைகளும் இரத்த உறைதலில் ஈடுபடும் புரோட்டீன்களை உருவாக்குகின்றன. ஆய்வு ஒன்றின் படி, வைட்டமின் கே என்பது இரத்த உறைதல், எலும்பு வளர்ச்சி மற்றும் இருதய ஆரோக்கியம் ஆகியவற்றில் ஈடுபட்டும் கொழுப்பில் கரையக்கூடிய சேர்மங்களின் குழுவைக் குறிக்கிறது. மேலும் வைட்டமின் கே குறைபாடு இரத்தப் போக்கு, மோசமான எலும்பு வளர்ச்சி, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.

வைட்டமின் கே இதய நோயின் அபாயத்தை குறைக்குமா?

வைட்டமின் கே இதய நோயின் அபாயத்தை குறைக்குமா?

நியூ எடித் கோவன் பல்கலைக்கழகத்தின் (ECU) ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஆய்வில், வைட்டமின் கே நிறைந்த உணவுகளை உட்கொள்பவர்களுக்கு பெருந்தமனி தடிப்பு போன்ற இதய நோயின் அபாயம் 34% குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பெருந்தமனி தடிப்பு நோய் மற்றும் பிற இதய நோயை எதிர்த்துப் பாதுகாப்பு அளிப்பதற்கு அதிக வைட்டமின் கே நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும் என்றும் இந்த ஆய்வின் மூத்த எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதய நோய்களின் ஆபத்தை அதிகரிக்கும் காரணிகள்

இதய நோய்களின் ஆபத்தை அதிகரிக்கும் காரணிகள்

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஆரோக்கியமற்ற உணவு, உடலுழைப்பு இல்லாமை, புகையிலை பயன்பாடு மற்றும் ஆல்கஹால் பழக்கம் போன்றவை இதய நோய் மற்றும் பக்கவாதத்தின் அபாயத்தை அதிகரிக்கும் காரணிகளாகும். ஏனென்றால் இவை அனைத்தும் ஒருவரின் இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதோடு, இரத்த சர்க்கரை அளவு, இரத்த கொழுப்பு அளவு போன்றவற்றை அதிகரிக்கிறது மற்றும் உடல் பருமனை உண்டாக்குகிறது.

இருப்பினும், புகையிலை பயன்பாட்டை நிறுத்துவது, உணவில் உப்பைக் குறைப்பது, அதிக காய்கறிகள் மற்றும் பழங்களை உண்பது, அன்றாட உடற்பயிற்சி மற்றும் மது அருந்துவதைத் தவிர்ப்பது போன்றவை இதய நோயின் அபாயத்தைக் குறைப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

வைட்டமின் கே குறைபாட்டின் அறிகுறிகள்

வைட்டமின் கே குறைபாட்டின் அறிகுறிகள்

வைட்டமின் கே குறைபாட்டின் அறிகுறிகள் பல உள்ளன. அவற்றில் மிகவும் பொதுவானவை அதிகப்படியான இரத்தப்போக்கு. பிற அறிகுறிகள் பின்வருமாறு:

* அடிக்கடி மற்றும் எளிதில் காயங்கள் ஏற்படுவது

* நகங்களுக்கு அடியில் சிறு இரத்த உறைவு

* உடலில் உள்ள சளிச் சவ்வுகளில் இரத்தப் போக்கு

* கருமை நிறத்தில் மலம், சில சமயங்களில் இரத்தம் கலந்த மலம்

வைட்டமின் கே நிறைந்த உணவுகள்

வைட்டமின் கே நிறைந்த உணவுகள்

உடலுக்கு வேண்டிய வைட்டமின் கே சத்தை சமச்சீரான உணவுகளை உண்பதன் மூலம் பெற முடியும். இந்த வைட்டமின் கே சத்தானது பச்சை இலைக் காய்கறிகளான கேல், பசலைக்கீரை, லெட்யூஸ், வெஜிடேபிள் ஆயில், பழங்களில் ப்ளூபெர்ரி, அத்திப்பழம் மற்றும் முட்டைகள், சீஸ், ஆட்டு ஈரல், கொண்டைக்கடலை, சோயா பீன்ஸ் மற்றும் க்ரீன் டீ போன்றவற்றில் அதிக அளவில் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

This Vitamin Deficiency Increase Your Heart Disease Risk

Did you know sufficient intake of vitamin K may help reduce your risk of heart diseases. Read on to know more...
Story first published: Tuesday, June 28, 2022, 13:13 [IST]
Desktop Bottom Promotion