For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எச்சரிக்கை! உங்க டூத் பேஸ்ட்ல இது இருக்கான்னு பாருங்க.. ஏன்னா அது உங்க குடலையே அழிச்சிடுமாம்...

புதிய ஆய்வு ஒன்றில், நாம் தினமும் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டில் உள்ள ஒரு பொதுவான பொருள் குடல் அழற்சிக்கு வழிவகுப்பது கண்டறியப்பட்டுள்ளது.

|

குடல் அழற்சி நோய் (Inflammatory Bowel Disease/IBD) என்பது குடல் வீக்கமடைந்திருக்கும் நிலையைக் குறிக்கும் சொல்லாகும். பொதுவாக இது ஒரு ஆட்டோ இம்யூன் நோயாக கருதப்படுகிறது. ஆனால் புதிய ஆய்வு ஒன்றில், தொடர்ச்சியான அழற்சியானது உடலை எதிர்த்துப் போராடும் நோயெதிர்ப்பு அமைப்பு காரணமாக ஏற்படவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. மாறாக, இது நோயெதிர்ப்பு அமைப்பானது குடலில் உள்ள தீங்கு விளைவிக்காத வைரஸ், பாக்டீரியா அல்லது உணவைத் தாக்கும் போது இது நிகழ்கிறது. இதன் விளைவாக வீக்கம் மற்றும் குடல் சேதம் ஏற்படுகிறது.

ஒருவருக்கு உணவு பழக்கம், அதிகளவு மன அழுத்தம் போன்றவைகள் காரணமாக குடல் அழற்சி ஏற்படலாம். ஆனால் புதிய ஆய்வு ஒன்றில், நாம் தினமும் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டில் உள்ள ஒரு பொதுவான பொருள் குடல் அழற்சிக்கு வழிவகுப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குடல் அழற்சியை ஏற்படுத்தும் 'அந்த' பொருள் என்ன?

குடல் அழற்சியை ஏற்படுத்தும் 'அந்த' பொருள் என்ன?

நேச்சர் கம்யூனிகேஷன்ஸில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், டூத் பேஸ்ட்டில் குடல் அழற்சியைத் தூண்டும் ஆன்டி-மைக்ரோபியல் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் டூத் பேஸ்ட்டில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பொருளான ட்ரைக்ளோசன், குடல் அழற்சியை ஊக்குவிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

சர்வதேச ஆய்வு குழு கண்டுபிடிப்பு

சர்வதேச ஆய்வு குழு கண்டுபிடிப்பு

டூத் பேஸ்ட்டில் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பு கலவையான ட்ரைக்ளோசன் எவ்வாறு குடல் அழற்சியை ஏற்படுத்தும் என்பதை சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு நிரூபித்துள்ளது. சாப்பல் ஹில்லில் உள்ள நார்த் கரோலினா பல்கலைக்கழகம், மாசசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஹாங்காங் பாப்டிஸ்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தலைமையிலான இந்த ஆய்வு குறித்து சமீபத்தில் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் வெளியிடப்பட்டது.

எலி மீதான ஆய்வு

எலி மீதான ஆய்வு

எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில், ஆராய்ச்சியாளர்களால் ட்ரைக்ளோசனின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை செயல்படுத்தும் பாக்டீரியா மற்றும் சில குறிப்பிட்ட நொதிகளை அடையாளம் காண முடிந்தது. இது பொம்மைகள் மற்றும் ஆயிரக்கணக்கான பிற தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பாக்டீரியா என்சைம்கள் குடல் பாதிப்பை உண்டாக்காமல் தடுக்கலாம் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.

சாப்பல் ஹில்லில் உள்ள நார்த் கரோலினா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையின்படி, தீங்கு உண்டாக்கும் பாக்டீரியாவை அடையாளம் காண்பதன் மூலம் குடல் அழற்சி நோய்களைக் கண்டறிதல், தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு புதிய அணுகுமுறைகளை உருவாக்க முடியும் என்று ஆய்வு ஆசிரியர் மேத்யூ ரெடின்போ கூறினார்.

அதே வேளையில், புதிய ஆய்வு ட்ரைக்ளோசனின் நச்சுத்தன்மை மற்றும் குடல் நுண்ணுயிரியில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி தெளிவாக கூறுகிறது.

ட்ரைக்ளோசன் குடல் அழற்சியை எவ்வாறு ஏற்படுத்துகிறது?

ட்ரைக்ளோசன் குடல் அழற்சியை எவ்வாறு ஏற்படுத்துகிறது?

இந்த புதிய ஆய்வில் ட்ரைக்ளோசன் சில நொதிகளின் உதவியுடன் குடலில் அழிவை ஏற்படுத்துகிறது என்பது கண்டறியப்பட்டது. இதில் விஞ்ஞானிகள் குடல் நுண்ணுயிர் பீட்டா-குளுகுரோனிடேஸ் (GUS) புரதங்கள் போன்ற சில குடல் நுண்ணுயிர் நொதிகளை ட்ரைக்ளோசனுடன் இணைத்து, இந்த கலவை குடலில் எவ்வாறு வீக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நிரூபித்துக் காட்டினர். அதோடு எந்த பாக்டீரியா புரதங்கள் குற்றவாளிகள் என்பதை அறிந்ததால், நுண்ணுயிர்-இலக்கு தடுப்பானைப் பயன்படுத்தி குடலில் ட்ரைக்ளோசனின் செயல்முறையை ஆராய்ச்சியாளர்கள் தடுத்தனர்.

எலிகளில் செயல்முறையைத் தடுப்பதன் மூலம், ஆராய்ச்சியாளர்கள் பெருங்குடல் சேதம் மற்றும் பெருங்குடல் அழற்சியின் அறிகுறிகளைத் தடுத்தனர். இந்த கண்டுபிடிப்புகள் மிகவும் முக்கியமானவை ஏனெனில், இந்த கண்டுபிடிப்புகளின் மூலம் ஆய்வாளர்கள் குடல் அழற்சி நோயால் கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கையை எப்படி நிர்வகிக்கலாம் என்பதற்கான சில யோசனைகளை பரிந்துக்கின்றனர்.

இறுதியாக குடல் ஆரோக்கியத்தில் சுற்றுச்சூழல் இரசாயனங்களின் தாக்கம் குறித்து ஒவ்வொருவரும் நன்கு புரிந்து கொள்வது முக்கியம் என்பதையும் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.

ஏன் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சில தயாரிப்புகளில் ட்ரைக்ளோசனை தடை செய்தது?

ஏன் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சில தயாரிப்புகளில் ட்ரைக்ளோசனை தடை செய்தது?

முன்னதாக, ட்ரைக்ளோசன் ஆன்டிபாக்டீரியல் சோப்புகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், 2016 இல் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மனிதர்கள் மற்றும் மருத்துவமனை அமைப்புகளில் பயன்படுத்தப்படும் கை கழுவும் பொருட்களிலிருந்து அதை அகற்ற உத்தரவிட்டது.

இருப்பினும் ட்ரைக்ளோசன் இன்னும் அழகுசாதனப் பொருட்கள், யோகா மேட், தடகள உடைகள் மற்றும் கியர் ஆகியவற்றில் பாக்டீரியா மாசுபாட்டைக் குறைக்க ஒரு மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் டூத் பேஸ்ட்டில் பற்பசைகளில் டிரைக்ளோசனைப் பயன்படுத்த FDA ஒப்புதல் அளித்துள்ளது, ஏனெனில் இந்த கலவை ஈறுகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் ஈறு அழற்சியைத் தடுப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

எதுவாயினும், ட்ரைக்ளோசன் இரைப்பைக் குழாயில் எளிதில் உறிஞ்சப்படுவதாக ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதோடு ட்ரைக்ளோசன் மற்றும் அது தொடர்புடைய சேர்மங்களின் பாதுகாப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும் எச்சரித்தனர். ஏனெனில் எலிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், இரைப்பைக் குழாயில் ட்ரைக்ளோசனை மீண்டும் செயல்படுத்துவதன் மூலம் நுண்ணுயிர் நொதிகள் பெருங்குடல் அழற்சியைத் தூண்டுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

THIS Common Ingredient Found In Toothpaste Can Lead To Gut Inflammation

Triclosan is a common ingredient found in toothpaste that can trigger inflammation in your gut. Here's how it can wreak havoc in your gut.
Story first published: Thursday, January 13, 2022, 13:42 [IST]
Desktop Bottom Promotion