For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'இந்த' இரண்டு காய்கறிகளையும் சேர்த்த ஜூஸ் கொரோனாவிலிருந்து உங்கள பாதுகாக்குமா?

இஞ்சியில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அதனால், இந்த ஆரோக்கிய பானத்தில் இஞ்சி சேர்க்கப்பட்டுள்ளது. இஞ்சி உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

|

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை நாடு முழுவதும் மிக தீவிரமாக பரவி வருகிறது. நாளுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இறப்பு விகிதமும் அதிகரித்து வருவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த இரண்டாவது அலை நாடு முழுவதும் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது. அதனால், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருப்பது முக்கியம்.

This beetroot and carrot juice can help keep viral infection away

அதற்கான சிறந்த வழி அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களின் இயற்கை மூலங்களில் ஈடுபடுவதுதான். இதைக் கருத்தில் கொண்டு, நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய எளிதான பீட்ரூட் மற்றும் கேரட் ஜூஸ் செய்முறையை நீங்கள் இங்கே தெரிந்துகொள்ளுங்கள். மேலும் வைரஸ் தொற்றுநோய்களைத் தவிர்ப்பதற்கு இது நல்லது. செய்முறையையும் அதன் நன்மைகளையும் அறிய இக்கட்டுரையை முழுமையாக படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

கேரட்-1

பீட்ரூட்-1

கறிவேப்பிலை 8-10

இஞ்சி 1 அங்குலம்

எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி

தேவையான அளவு உப்பு

MOST READ: கொடிய கொரோனா உங்க நுரையீரல மட்டுமில்ல 'இந்த' உறுப்புகளையும் கடுமையா பாதிக்குமாம் தெரியுமா?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானம் செய்வது எப்படி?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானம் செய்வது எப்படி?

நீங்கள் செய்ய வேண்டியது கேரட் மற்றும் பீட்ரூடை நன்கு கழுவ வேண்டும். பின்னர் அவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கவும். அடுத்து, அனைத்து பொருட்களையும் ஒரு ஜூஸரில் கலந்து பின்னர் ஒரு கிளாஸில் ஊற்றி, உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்த்து கலக்கவும். இப்போது, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சுவையான பானம் தயார்.

சாற்றின் ஆரோக்கிய நன்மைகள்

சாற்றின் ஆரோக்கிய நன்மைகள்

பீட்ரூட்டில் இரும்பு மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது உடலில் ஆரோக்கியமான சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க உதவுகிறது மற்றும் தொற்றுநோய்களுக்கு எதிராக போராடுகிறது. இது உடலுக்கு ஒரு கேடயத்தை உருவாக்க உதவும் பொட்டாசியமும் நிறைந்துள்ளது. மறுபுறம், கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளன, அவை ஒன்றாக ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகின்றன மற்றும் நோயெதிர்ப்பு செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. கேரட்டில் வைட்டமின் பி 6 உள்ளது. இது ஒரு உகந்த நோயெதிர்ப்பு சக்திக்கு அவசியம்.

தொற்றுநோய்களுக்கு எதிராக போராட உதவுகிறது

தொற்றுநோய்களுக்கு எதிராக போராட உதவுகிறது

இஞ்சியில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அதனால், இந்த ஆரோக்கிய பானத்தில் இஞ்சி சேர்க்கப்பட்டுள்ளது. இஞ்சி உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளிலும் நிறைந்துள்ளது. இது தொற்றுநோய்களுக்கு எதிராக போராட உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

This beetroot and carrot juice can help keep viral infection away

Here we are talking about this beetroot and carrot juice can help keep viral infection away.
Story first published: Thursday, April 29, 2021, 17:12 [IST]
Desktop Bottom Promotion