For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மக்களே! உஷார்... இன்னும் 6 முதல் 8 வாரத்தில் கொரோனா மூன்றாம் அலை வரப்போகுதாம்... இந்த அலை எப்படி இருக்கும்?

தினசரி கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், கொரோனாவின் மூன்றாம் அலையை தவிர்க்க முடியாது மற்றும் இது இந்தியாவை இன்னும் 6-8 வாரங்களில் தாக்கக்கூடும் என்று எய்ம்ஸ் தலைவர் எச்சரித்துள்ளார்.

|

தினசரி கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், கொரோனாவின் மூன்றாம் அலையை தவிர்க்க முடியாது மற்றும் இது இந்தியாவை இன்னும் 6-8 வாரங்களில் தாக்கக்கூடும் என்று அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா எச்சரித்துள்ளார்.

Third COVID-19 Wave May Hit India In 6 To 8 Weeks: AIIMS Chief

இதுக்குறித்து ஊடகம் ஒன்றுடன் பேசிய குலேரியா, "கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாம் அலைக்கு இடையில் என்ன நடந்தது என்பதை இன்னும் மக்கள் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை. ஏனெனில் இன்னும் மக்கள் கூட்டம் கூடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை மீண்டும் உயரத் தொடங்க சிறிது காலம் ஆகும். அதுவும் அடுத்த 6-8 வாரங்களுக்குள் நிகழக்கூடும்" என்றார்.

MOST READ: 29 நாடுகளில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா 'லாம்ப்டா' - அதன் அறிகுறிகள் என்ன? தடுப்பூசி இதை தடுக்குமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூன்றாம் அலை நடத்தையைப் பொறுத்தது

மூன்றாம் அலை நடத்தையைப் பொறுத்தது

கொரோனா மூன்றாம் அலையானது நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளும் விஷயங்களைப் பொறுத்தது என்று எய்ம்ஸ் தலைவர் குலேரியா கூறினார். கொரோனாவின் புதிய அலை தாக்குவதற்கு மூன்று மாதங்கள் வரை ஆகக்கூடும் என்று கூறப்பட்டாலும், பல்வேறு காரணிகளைப் பொறுத்து இது இன்னும் வேகமாக கூட தாக்கலாம் என்றும் குலேரியா கூறினார்.

கொரோனா பரவலை குறைக்கும் நெறிமுறைகள்

கொரோனா பரவலை குறைக்கும் நெறிமுறைகள்

நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 5 சதவீதம் மக்கள் முழுமையாக தடுப்பூசியைப் போட்டுள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் 130 கோடிக்கும் மேற்பட்ட மக்களில் 108 கோடிக்கு கோவிட் தடுப்பூசி போடுவதை இந்திய அரசு நோக்கமாக கொண்டுள்ளது.

சரியான சுகாதாரத்தைப் பராமரிப்பது, மாஸ்க்குகளை அணிவது போன்ற கொரோனா பரவலைக் குறைக்கும் விதிமுறைகளை மக்கள் பின்பற்றாமல் இருந்தால், கொரோனா மூன்றாவது அலை மிக விரைவில் ஏற்படக்கூடும் என்று பல நிபுணர்களும் கூறுகின்றனர்.

கடுமையான கண்காணிப்பு அவசியம்

கடுமையான கண்காணிப்பு அவசியம்

கோவிட்டின் பொருத்தமான நடத்தையைத் தவிர, கடுமையாக கண்காணிப்பும் தேவை. கடந்த முறை, புதிய கொரோனா மாறுபாடானது குறுகிய காலத்தில் பல கொரோனா வழக்குகளுக்கு வழிவகுத்தது. இந்த வைரஸ் இன்னும் காலம் செல்ல செல்ல தொடர்ந்து மாறுபடும் என்பதால், அதிக தொற்றுள்ள பகுதிகளில் கடுமையான கண்காணிப்பு மிகவும் அவசியம் என்று எய்ம்ஸ் தலைவர் கூறினார்.

தடுப்பூசி மிகவும் அவசியம்

தடுப்பூசி மிகவும் அவசியம்

கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளாமல் இருந்தால், வரும் மாதங்களில் கொரோனா தொற்றால் மிகவும் கடுமையாக பாதிக்கப்படக்கூடும். எனவே கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள அனைவரும் கட்டாயம் முயல்வதோடு, அரசாங்கமும் மக்களுக்கு தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படாதவாறு வழி செய்தால் தான், மூன்றாம் அலையால் பேரழிவு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

வேகமான வைரஸ் உருமாற்றம்

வேகமான வைரஸ் உருமாற்றம்

கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த பின், இன்று வரை பலவாறு உருமாற்றம் அடைந்து கொண்டிருக்கிறது மற்றும் இரண்டு அலைகளுக்கு இடையிலான இடைவெளியும் குறைந்து வருகிறது. இதனால் இது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள் என்றால், அது கொரோனாவின் நெறிமுறைகளை பின்பற்றுவதோடு, தடுப்பூசி போட்டுக் கொள்வது தான்.

மூன்றாவது அலையின் தீவிரத்தைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்?

மூன்றாவது அலையின் தீவிரத்தைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்?

மூன்றாவது அலையின் தீவிரத்தைத் தவிர்ப்பதற்கு நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய கோவிட் நெறிமுறைகள் பின்வருமாறு:

* 2 வயதிற்கும் குறைவானவர்கள் மற்றும் வயதானவர்கள் வெளியே செல்லும் போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். அதுவும் இரட்டை மாஸ்க் அணிந்து கொள்வது மிகவும் நல்லது மற்றும் பாதுகாப்பானது.

* மாஸ்க் அணிவதோடு, 6 அடி இடைவெளியைப் பராமரிக்க வேண்டும். குறிப்பாக உங்களுக்கு தெரியாதவர்களுக்கு இடையே இடைவெளி மிகவும் அவசியம்.

* உங்கள் கைகளை அடிக்கடி கழுவுங்கள் அல்லது சானிடைசரைப் பயன்படுத்துங்கள்.

* மாஸ்க் அணியும் போது, அந்த மாஸ்க் மூக்கு மற்றும் வாய் பகுதியை நன்கு மறைத்துள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

* தேவையில்லாமல் வெளியே செல்லாதீர்கள். குறிப்பாக கூட்டமான இடங்களுக்கு செல்ல வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Third COVID-19 Wave May Hit India In 6 To 8 Weeks: AIIMS Chief

A third COVID-19 wave may hit India in less than 6-8 weeks, AIIMS chief Dr. Randeep Guleria told the media. Read to know everything.
Desktop Bottom Promotion