Just In
- 18 min ago
இந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்…நீங்க எந்த ராசி?
- 3 hrs ago
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை தரிசிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
- 3 hrs ago
மிஸ் யுனிவர்ஸ் 2019 பட்டம் பெற்ற தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..
- 5 hrs ago
திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள் - எந்த ராசிக்காரர்கள் எந்த லிங்கத்தை கும்பிடணும் தெரியுமா?
Don't Miss
- Sports
நான் தலைவராக தொடர மாட்டேன் .. பிடிவாதம் பிடிக்கும் ஐசிசி தலைவர்.. ஷாக்கிங் காரணம்!
- Movies
சன்னி லியோனை பின்னுக்குத் தள்ளிய சோனாக்ஷி.. இந்த ஆண்டு ட்விட்டரை கலக்கிய டாப் 10 பெண்கள் இவங்கதான்!
- Automobiles
போதையில் டிரிபிள் ரைடு சென்ற இளைஞர்கள்... திடீரென மாயமாகிய அதிர்ச்சி.. வைரல் வீடியோ..!
- News
தாய்ப்பால் ஊட்டும் வாலிபால் வீராங்கணை.. வைரலாகும் போட்டோ.. சல்யூட் அடித்த அமைச்சர்
- Finance
பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளரா நீங்க.. உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..!
- Education
பி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம்! தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்!
- Technology
அட்டகாசமான ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உடலுறவிற்கு பின் பெண்கள் இந்த செயல்களை கண்டிப்பாக செய்யணும்... இல்லனா பிரச்சினைதான்...!
ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி இருவருமே உடலுறவில் ஆர்வமாகத்தான் இருப்பார்கள். ஆண், பெண் உறவை பொறுத்தவரையில் அவர்களின் உறவை அடுத்தநிலைக்கு எடுத்துச் செல்வது என்பது தாம்பத்யம்தான். தாம்பத்யத்தில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ அதே அளவிற்கு ஆபத்துகளும் இருக்கிறது.
பெரும்பாலும் வைரஸ்களும், பாக்டீரியாக்களும் உடலுறவு மூலம் எளிதில் பரவக்கூடும். இதனால் ஏற்படும் பாதிப்பு ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு அதிகமாக இருக்கும். எனவே பெண்கள் உடலுறவில் ஈடுபடும் போதும், ஈடுபட்ட பிறகும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த பதிவில் உடலுறவில் ஈடுபட்ட பிறகு பெண்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது ஏ என்பதை பார்க்கலாம்.

சுத்தப்படுத்திக் கொள்ளவும்
உடலுறவில் ஈடுபட்ட உடனேயே நீங்கள் குளியலறைக்கு எழுந்து ஓடிஏ வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் உடலுறவுக்குப் பிறகு உங்களை மெதுவாக சுத்தம் செய்வது ஆண்களையும் பெண்களையும் சிறுநீர் பாதை (யுடிஐ) போன்ற தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கும். உங்கள் பிறப்புறுப்புகளை சுற்றியுள்ள இடத்தை வெதுவெதுப்பான நீரில் சுத்தப்படுத்தவும். பாதிப்பை ஏற்படுத்தாத சோப்புகளை பயன்படுத்தலாம், உங்களுக்கு ஏற்கனவே அலர்ஜிகள் இருந்தாலோ அல்லது மென்மையான சருமம் இருந்தாலோ சோப்பை பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஏனெனில் இது பிறப்புறுப்பை சுற்றி வறட்சியையோ அல்லது எரிச்சலையோ ஏற்படுத்தும்.

தண்ணீரை பயன்படுத்த வேண்டாம்
சில பெண்கள் பிறப்புறுப்பின் உட்பகுதியை தண்ணீர் அல்லது வேறு திரவங்களைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் இவ்வாறு செய்வது அதிக தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கும். ஏனெனில் இது பெண்களின் பிறப்புறுப்பை பாதுகாக்கும் பாக்டீரியாக்களின் இயல்பான சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்தும். உடலுறவுக்குப் பிறகு உங்கள் யோனியை கவனித்துக்கொள்வதற்கான சிறந்த வழி, அதை தனியாக விட்டுவிடுவதுதான், அது இயற்கையாகவே தன்னை சுத்தப்படுத்துகிறது.

சுத்தம் செய்வதை எளிமையாக வைத்திருங்கள்
தண்ணீர் மட்டுமின்றி பிறப்புறுப்பை சுத்தம் செய்ய மருந்துகள், க்ரீம்கள், ஸ்பிரேக்கள் போன்றவையும் கடைகளில் கிடைக்கிறது. இது பெண்களை பாதுகாக்கிறது என்று அவர்கள் நினைக்கிறார்கள். இவற்றில் சில கடுமையான சோப்புகள், ஷாம்பூக்கள், வாசனை திரவியங்கள் போன்றவை பயன்படுத்தப்படுகிறது. இது பெண்களின் சருமத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். பெண்களின் பிறப்புறுப்பை சுத்தப்படுத்த வெதுவெதுப்பான நீரே போதுமானது.
MOST READ: மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா?

சிறுநீர்ப்பையை காலி செய்ய வேண்டும்
உடலுறவின் போது, உங்கள் உடலில் இருந்து சிறுநீரை வெளியேற்றும் குழாய் உங்கள் சிறுநீர்க்குழாயில் பாக்டீரியா வரலாம். இது தொற்றுநோய்க்கான வாய்ப்புகளை உயர்த்தும். நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது, அந்த கிருமிகளை வெளியேற்றுவீர்கள். எனவே உடலுறவுக்கு பிறகு சிறுநீர் செல்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

தண்ணீர் குடிக்கவும்
உடலுறவிற்கு பின் சிறுநீர் கழிக்க வேண்டியது அவசியமாக இருப்பதால் தண்ணீர் குடிப்பது சிறந்த யோசனையாக இருக்கும். உங்கள் உடலில் அதிக நீர்ச்சத்து இருக்கும்போது உங்கள் உடலில் இருந்து அதிகளவு சிறுநீர் வெளியேறும். அதாவது தொற்றுநோய்கள் வெடிப்பதற்கு முன்பு அதிக பாக்டீரியாக்கள் உங்கள் உடலில் இருந்து வெளியேறும்.

லூசான ஆடைகளை அணியவும்
சூடான, வியர்வை நிறைந்த இடங்கள் பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் பாக்டீரியா அதிகம் வளரும் இடங்களாகும். எனவே உள்ளாடைகள் மற்றும் ஆடைகளில் நல்ல காற்றோட்டம் இருக்கும்படி அணிய வேண்டும். குறிப்பாக பெண்களின் உள்ளாடைகள் இறுக்கமானதாக இருக்கக்கூடாது. காட்டன் உள்ளாடைகள் அணிவது நல்ல பலன்களை ஏற்படுத்தும். அவை சுவாசிக்கக்கூடியவை மற்றும் ஈரப்பதத்தை உறிஞ்சும். பெரும்பாலும் படுக்கைக்கு செல்லும் முன் உள்ளாடைகள் அணிவதை தவிர்ப்பது நல்லது.
MOST READ: இந்த ராசி பெண்களுக்கு இயற்கையாகாவே தைரியம் ரொம்ப அதிகமா இருக்குமாம் தெரியுமா?

கைகளை கழுவவும்
உங்கள் அல்லது உங்கள் கூட்டாளியின் பிறப்புறுப்புகளைத் தொடுவதிலிருந்து நீங்கள் எடுக்கக்கூடிய பாக்டீரியாக்களை அகற்ற இது சிறந்த வழியாகும். நோய்த்தொற்றுகள் பரவாமல் தடுக்க இது முக்கியம். சோப்பு மற்றும் தண்ணீரைக் கொண்டு கழுவவும், உடலுறவிற்கு பிறகான உங்கள் தூய்மைப்படுத்தும் பணியில் இதையும் சேர்த்துக்கொள்ளவும்.

ஈஸ்ட் தொற்று
உடலுறவிற்கு முன்னரும், பின்னரும் ஈஸ்ட் தொற்று உங்கள் துணை மூலம் உங்களுக்கு பரவலாம். எனவே பிறப்புறுப்பில் எரிச்சல், அரிப்பு, வெள்ளை நிற திரவ வெளியேற்றம் போன்ற அறிகுறிகள் இருந்தால் அடுத்தமுறை உறவு கொள்ளும் முன் மருத்துவரை அணுகுவது நல்லது.

கர்ப்பகாலம்
பொதுவாக கர்ப்பகாலத்தில் உடலுறவு கொள்வது பாதுகாப்பானதுதான். ஆனால் இந்த காலக்கட்டத்தில் UTI தொற்று ஏற்படும் வாய்ப்பு மிகவும் அதிகமாகும். எனவே கர்ப்பகால உடலுறவுக்கு பிறகு கூடுதல் எச்சரிக்கை அவசியம். பிறப்புறுப்பை சுத்தப்படுத்துதல், சிறுநீர் கழித்தல், தண்ணீர் குடிப்பது போன்றவற்றை தவறாமல் செய்ய வேண்டும்.