For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிகமா சாப்பிட்டதால அவஸ்தைப்படுறீங்களா? இதுல ஏதாவது ஒன்றை பண்ணுங்க.... உடனே சரியாகிடும்...!

எண்ணெயில் வறுத்த உணவுகள் எப்போதும் சுவையாகத்தான் இருக்கும், ஆனால் சுவை அதிகமாக இருப்பது போல அதனால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகளும் அதிகமாகத்தான் உள்ளது.

|

எண்ணெயில் வறுத்த உணவுகள் எப்போதும் சுவையாகத்தான் இருக்கும், ஆனால் சுவை அதிகமாக இருப்பது போல அதனால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகளும் அதிகமாகத்தான் உள்ளது. சுவை காரணமாக இதனை அதிகமாக சாப்பிடும்போது நாம் அடிக்கடி அதிகப்படியான உணவை உட்கொள்கிறோம், இது மேலும் அமைதியின்மை மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது.

Things to Do After Eating High Cholesterol Food

இந்த அசௌகரியம் தற்காலிகமானதாகத் தோன்றினாலும், நீண்ட காலத்திற்கு, அவை அதிக கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயையும் ஏற்படுத்துகின்றன. எனவே அதிகப்படியான உணவைக் குறைப்பது மற்றும் எண்ணெய் உணவைத் தவிர்ப்பது முக்கியம். ஆனால் உங்களுக்குப் பிடித்த வறுத்த உணவை நீங்கள் அதிகமாகச் சாப்பிட்டால், நீங்கள் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெதுவெதுப்பான நீரைக் குடிக்கவும்

வெதுவெதுப்பான நீரைக் குடிக்கவும்

நீங்கள் அதிகமாக சாப்பிட்டதாக உணரும் போதெல்லாம், உணவு சாப்பிட்ட 30-45 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரைக் குடிக்கத் தொடங்குங்கள். நிபுணர்களின் கூற்றுப்படி, நீர் ஊட்டச்சத்துக்கள் மற்றும் கழிவுப் பொருட்களுக்கும் ஒரு கேரியராக செயல்படுகிறது. வெதுவெதுப்பான நீர் ஊட்டச்சத்துக்களை செரிமான வடிவத்தில் உடைக்க உதவுகிறது, மேலும் நீங்கள் இலகுவாக உணரத் தொடங்குவீர்கள்.

எலுமிச்சை நீர்

எலுமிச்சை நீர்

உடலை அமைதிப்படுத்த சிறந்த வழி எலுமிச்சை தண்ணீர் குடிப்பதுதான். இந்த டிடாக்ஸ் பானம் எண்ணெய் நிறைந்த உணவுகளை உட்கொண்ட பிறகு குவிந்துள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இது எடை இழப்பிற்கும் உதவுகிறது.

சிறிய நடைப்பயிற்சி

சிறிய நடைப்பயிற்சி

வல்லுனர்களின் கூற்றுப்படி, அதிகப்படியான உணவுக்குப் பிறகு 20 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது மேலும் இது சிறந்த வயிற்று செயல்பாட்டை ஊக்குவிக்கிறது மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது.

புரோபயாடிக்குகளை சாப்பிடுங்கள்

புரோபயாடிக்குகளை சாப்பிடுங்கள்

ஒரு கனமான உணவுக்கு 20-25 நிமிடங்களுக்குப் பிறகு நீங்கள் சில புரோபயாடிக்குகளை சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். புரோபயாடிக்குகள் செரிமான ஆரோக்கியத்தை சமநிலைப்படுத்தவும் குடல் தாவரங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகின்றன. நீங்கள் எளிதில் பெறக்கூடிய மிகவும் பயனுள்ள புரோபயாடிக் தயிராகும்.

பழங்கள் சாப்பிடுங்கள்

பழங்கள் சாப்பிடுங்கள்

60 நிமிட இடைவெளிக்குப் பிறகு, நார்ச்சத்து நிறைந்த பழங்களின் ஒரு சிறிய பகுதியை எடுத்துக் கொள்ளுங்கள். அவை மலச்சிக்கலைத் தவிர்க்கவும், செரிமான அமைப்பை அதிகரிக்கவும் உதவுகின்றன. மேலும், செரிமான அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்த அடுத்த இரண்டு உணவுகளில் அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

உங்கள் உணவைக் கணக்கிடுங்கள்

உங்கள் உணவைக் கணக்கிடுங்கள்

நீங்கள் அதிகமாக சாப்பிட்டவுடன், உங்கள் அடுத்த இரண்டு உணவுகள் மிகவும் இலகுவானவையாக மற்றும் ஜீரணிக்க எளிதானவையாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். செரிமான அமைப்பை மென்மையாக்கக்கூடிய நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடலை நீரேற்றமாக வைத்திருக்க திரவ உணவைப் பின்பற்ற பரிந்துரைக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things to Do After Eating High Cholesterol Food

Here is the list of things to do after eating high cholesterol food.
Story first published: Tuesday, September 21, 2021, 17:25 [IST]
Desktop Bottom Promotion