For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நெய்யுடன் இந்த எளிய பொருட்கள சேர்த்து சாப்பிடுவது உங்க உடலில் நம்ப அதிசயங்களை நிகழ்த்துமாம் தெரியுமா?

நெய் ஒரு பொதுவான சமையலறைப் பொருளாகும், இது அநேகமாக இந்தியாவின் ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தப்படுகிறது.

|

நெய் ஒரு பொதுவான சமையலறைப் பொருளாகும், இது அநேகமாக இந்தியாவின் ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. தான் சேர்க்கப்படும் அனைத்து உணவிற்கும் தனித்துவமான சுவையையும், அரோமாவையும் வழங்கும் குணம் நெய்க்கு உள்ளது.

Things to Add With Ghee to Make It More Healthier

நெய் உணவில் கூடுதல் சுவையை சேர்ப்பது மட்டுமல்லாமல் எண்ணற்ற நன்மைகளையும் வழங்குகிறது. ஆனால் நீங்கள் நெய்யில் அதிக அளவு ஆரோக்கியத்தை எடுக்க விரும்பினால், அதனுடன் சில பொருட்களை சேர்த்து சாப்பிடலாம். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது பொதுவான நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது மற்றும் வயிற்று பிரச்சனைகளில் இருந்து கூட நிவாரணம் அளிக்கும். இலவங்கப்பட்டை நெய் தயாரிக்க, ஒரு கடாயில் நெய் சேர்த்து, அதில் 2 இலவங்கப்பட்டை வதக்கவும். நெய்யை 4-5 நிமிடம் மிதமான தீயில் சூடாக்கி, பின் முழுமையாக ஆற விடவும். இது நெய்யில் இலவங்கப்பட்டை சுவைகயை ஊற வைக்கும். நீங்கள் வீட்டில் வெண்ணெயில் இருந்து நெய் தயாரிக்கிறீர்கள் என்றால், வெண்ணெய் கொதிக்கும் போது இலவங்கப்பட்டையை சேர்க்கவும், பின்னர் கலவையை வடிகட்டி சுத்தமான நெய்யை பிரித்தெடுக்கவும்.

மஞ்சள்

மஞ்சள்

நெய்யுடன் கலந்த மஞ்சள் பல ஊட்டச்சத்து நிபுணர்களால் ஆரோக்கியவாழ்வு மற்றும் எடை இழப்புக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இந்த கலவை புதிய இரத்த நாளங்களை உருவாக்க உதவுகிறது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக உடலில் வீக்கத்தை குறைக்கிறது. இதன் பொருள் மஞ்சள்-நெய் கலவையானது இயற்கையாகவே வீக்கத்திற்கு சிகிச்சையளிப்பதன் மூலம் உடலில் உள்ள அனைத்து வகையான வலிகளையும் குறைக்கும். மஞ்சள் சுவையுள்ள நெய் தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் 1 கப் நெய் சேர்க்கவும். 1 தேக்கரண்டி மஞ்சள், ½ தேக்கரண்டி கருப்பு மிளகு தூள் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை காற்று புகாத டப்பாவில் சேமித்து வைத்து தினமும் பயன்படுத்தவும். மஞ்சளில் குர்குமின் உள்ளது, இது வீக்கத்திற்கு சிகிச்சையளிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது, அதே நேரத்தில் கருப்பு மிளகு தூள் சேர்த்து குர்குமினை உறிஞ்ச உதவுகிறது.

துளசி

துளசி

நீங்கள் அடிக்கடி வீட்டில் வெண்ணெயில் இருந்து நெய் செய்தால், கொதிக்கும் போது அது வெளியிடும் வாசனை வெளியேறும் என்பதை நீங்கள் அறிவீர்கள். கொதிக்கும் வெண்ணெயின் வலுவான வாசனையை குறைக்க, சில துளசி இலைகளை எடுத்து கொதிக்கும் வெண்ணெயில் சேர்க்கவும். இது வாசனையை குறைப்பது மட்டுமின்றி செயல்பாட்டை துரிதப்டுத்தும். துளசி நெய்யில் ஒரு தனித்துவமான மூலிகை வாசனையை சேர்க்கும். துளசி என்பது எளிதில் கிடைக்கும் மூலிகையாகும், இது குறிப்பிடத்தக்க நன்மைகளைக் கொண்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், இரத்தத்தை சுத்தப்படுத்துதல் மற்றும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், பொதுவான காய்ச்சலைக் குணப்படுத்துதல், சுவாசப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளித்தல் மற்றும் இரத்த சர்க்கரையை குறைத்தல் வரை, துளசி அனைத்தையும் செய்ய முடியும்.

கற்பூரம்

கற்பூரம்

கற்பூரமானது கசப்பான இனிப்பு சுவை கொண்டது மற்றும் வாதா, பித்தா மற்றும் கபா ஆகிய மூன்று தோஷங்களையும் சமநிலைப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இது செரிமான சக்தியை அதிகரிக்கலாம், குடல் புழுக்களுக்கு சிகிச்சையளிக்கலாம், காய்ச்சலைத் தடுக்கலாம், இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தலாம் மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு கூட பயனளிக்கும். கற்பூரம் சேர்க்கப்பட்ட நெய் தயாரிக்க, நெய்யில் 1-2 சமையல் கற்பூரத்தை சேர்த்து 5 நிமிடங்கள் சூடாக்கவும். இப்போது நெய்யை ஆறவைத்து பின்னர் காற்று புகாத டப்பாவில் வடிகட்டவும்.

பூண்டு

பூண்டு

பூண்டு வெண்ணெய் போலவே, பூண்டு நெய்யும் சுவை மற்றும் நறுமணத்துடன் இருக்கும். நீங்கள் ஒரு பூண்டு பிரியராக இருந்தால், இந்த பூண்டு சேர்க்கப்பட்ட நெய் நீங்கள் கண்டிப்பாக முயற்சிக்க வேண்டும். பூண்டு ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகக் கூறப்படுகிறது, இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல் உயர் இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும். பூண்டு நெய் தயாரிக்க, நறுக்கிய பூண்டு கிராம்புடன் ஒரு பாத்திரத்தில் சிறிது நெய் சேர்க்கவும். தீயை குறைவாக வைத்து 4-5 நிமிடங்கள் கிளறவும். நெய் போதுமான அளவு சூடானதும், நெருப்பை அணைத்து, கடாயை ஒரு மூடியால் மூடி, நெய் அனைத்து பூண்டு சுவைகளையும் ஊற விடவும். இப்போது ஒரு கண்ணாடி ஜாடி மீது ஒரு மஸ்லின் துணி அல்லது வடிகட்டியை வைத்து அதில் நெய்யை வடிகட்டவும். ஜாடி காற்று புகாதவாறு பார்த்துக் கொள்ளவும். உங்கள் பூண்டு கலந்த நெய் இப்போது பயன்படுத்த தயாராக உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things to Add With Ghee to Make It More Healthier

Here is the list of things to add with ghee to make it more healthier.
Story first published: Monday, September 20, 2021, 17:05 [IST]
Desktop Bottom Promotion