For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகில் ஆரோக்கியமாக இருக்கும் எல்லோருக்குமே ஆச்சரியமளிக்கும் வகையில் இந்த பழக்கங்கள் இருக்கிறதாம்...!

ஆரோக்கியமானவர்களிடையே நடத்தபட்ட ஆய்வில் ஆச்சரியமளிக்கும் வகையில் அவர்களின் வாழ்க்கை முறையிலும், உணவுப்பழக்கத்திலும் பெரும்பாலான ஒற்றுமைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

|

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருப்பது நியாமானதுதான். ஆனால் அதற்க்கேற்றார் போல ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை நாம் வாழ்கிறோமா என்பதை முதலில் நாம் உறுதிசெய்து கொள்ள வேண்டும். ஏனெனில் நமது ஆரோக்கியம் கெடுவதில் சுற்றுசூழலைக் காட்டிலும் நமது தனிப்பட்ட தவறுகளும், வாழ்க்கை முறையும்தான் முக்கிய காரணம்.

things the world’s healthiest people have in common

உலகில் ஆரோக்கியமாக வாழ்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருகிறது. ஆரோக்கியமானவர்களிடையே நடத்தபட்ட ஆய்வில் ஆச்சரியமளிக்கும் வகையில் அவர்களின் வாழ்க்கை முறையிலும், உணவுப்பழக்கத்திலும் பெரும்பாலான ஒற்றுமைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த பதிவில் உலகின் ஆரோக்கியமானவர்களுக்கு இடையே காணப்படும் ஒற்றுமைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புகைப்பழக்கம் இன்மை

புகைப்பழக்கம் இன்மை

இது அனைவரும் அறிந்த ஒன்றுதான். உலகின் ஆரோக்கியமான பலரிடமும் புகைப்பழக்கம் என்பது அறவே இல்லை. நீங்கள் புகைப்பிடிப்பவராக இருந்தால் உடனே அதனை நிறுத்தி விடுங்கள். புகைப்பழக்கம் இல்லாதவர்களின் ஆயுள் கிட்டதட்ட 8 ஆண்டுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று ஆய்வுகள் கூறுகிறது.

சாப்பிடாமல் இருப்பது

சாப்பிடாமல் இருப்பது

விரதமிருப்பது அல்லது சாப்பிடாமல் இருப்பது முக்கியமான ஆரோக்கியமான பழக்கங்களில் ஒன்றாகும். இந்த பழக்கம் உள்ளவர்கள் அதிக காலம் வாழ்வதாக ஆய்வுகள் கூறுகிறது, மேலும் அடிக்கடி சாப்பிடாமல் இருப்பவர்கள் நோயில் விழும் வாய்ப்பும் குறைகிறது. மேலும் அடிக்கடி உணவு உண்ணாமல் இருப்பவர்கள் நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு சாப்பிடாமல் இருப்பது கலோரிகள் அதிகம் எடுத்துக்கொள்வதை தடுப்பதுடன், உடலமைப்பையும் பாதுகாக்கிறது.

ஏதாவது ஒரு உடற்பயிற்சியை தினமும் செய்கிறார்கள்

ஏதாவது ஒரு உடற்பயிற்சியை தினமும் செய்கிறார்கள்

இது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ஒன்றல்ல. ஏனெனில் ஆரோக்கியமாக இருக்க விரும்பும் அனைவருமே கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். எந்தவித உடல் செயல்பாடுகளும் இல்லமால் இருப்பவர்களை விட ஏதாவது செயலில் ஈடுபட்டு உடலை அசைத்து கொண்டே இருப்பவர்கள் பூமியில் வாழப்போகும் காலம் அதிகமாகும். ஜிம்மில் கடினமாக உடற்பயிற்சி செய்வது, தினமும் நடைப்பயிற்சி செய்வது போன்ற செயல்கள் கூட தேவையில்லை, நண்பர்களுடன் டென்னிஸ், கிரிக்கெட், கபடி போன்றவை விளையாடுவது, அருகிலிருக்கும் இடங்களுக்கு நடந்து செல்வது அல்லது சைக்கிளில் செல்வது கூட போதுமானதுதான்.

அதிக மீன் சாப்பிடுகிறார்கள்

அதிக மீன் சாப்பிடுகிறார்கள்

மீன்களில் காணப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உலகின் சக்திவாய்ந்த ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். குறிப்பாக இதய நோய், சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதுடன் ஆயுளை அதிகரிக்கும் வேலையையும் செய்கிறது. ஆரோக்யமானவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் அவர்கள் வாரத்திற்கு ஒரு முறையாவது மீன் சாப்பிடுவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் இறைச்சியை அதிகம் சேர்த்துக் கொள்வதில்லை.

MOST READ: மற்றவர் மனதில் இருப்பதை மந்திரவாதி போல படிக்க உதவும் எளிய தந்திரங்கள் இவைதான்...!

சிறிய விஷயங்களுக்கு அதிக கவலைப்படுவதில்லை

சிறிய விஷயங்களுக்கு அதிக கவலைப்படுவதில்லை

நாள்பட்ட மன அழுத்தம் இதய நோய், சர்க்கரை நோய், புற்றுநோய் மற்றும் மனநோய்க்கான அதிக ஆபத்துடன் தொடர்புடையது. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இது நோய்களை மட்டும் ஏற்படுத்தாமல் ஆயுட்காலத்தையும் குறைக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால்ஆரோக்யமானவர்கள் இவ்வாறு மனஅழுத்தத்தை வைத்துக்கொள்வதில்லை. அவர்களுக்கு மனஅழுத்தத்தை எப்படி கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்பது பற்றி நன்றாகவே தெரிந்திருக்கிறது.

சீரான எடையை பராமரிக்கிறார்கள்

சீரான எடையை பராமரிக்கிறார்கள்

உடல் பருமனாக இருப்பது உங்களுக்கு அனைத்து வகையான ஆபத்தான நோய்களும் ஏற்பட காரணமாகிறது. எனவே உங்கள் எடையை சீராக பராமரிப்பது உங்களின் ஆயுளை அதிகரிக்கும் சிறந்த 5 வழிகளில் ஒன்றாக இருக்கிறது. உங்கள் மொத்த இடையில் 10 முதல் 15 சதவீதம் குறைப்பது உங்களுக்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது.

நிறைய தாவரங்களை சாப்பிடுகிறார்கள்

நிறைய தாவரங்களை சாப்பிடுகிறார்கள்

உலகெங்கும் பல்வேறு ஆரோக்கிய கலாச்சாரங்கள் இருக்கிறது. ஆனால் அனைத்திலும் பொதுவாக இருக்கும் ஒரு ஒன்று அதிக தாவரங்களை சாப்பிடுவது. ஆரோக்கியாமாக வாழ்பவர்கள் பெரும்பாலும் அவர்களின் உணவில் அதிக பழங்கள், காய்கறிகள், கீரைகள், தானியங்கள் போன்றவற்றை சேர்த்துக் கொள்கிறார்கள்.

அவர்களுக்கென அமைதியான நேரம் இருக்கிறது

அவர்களுக்கென அமைதியான நேரம் இருக்கிறது

நவீன வாழ்க்கைமுறை எவ்வளவு இரைச்சல்கள் நிறைந்தது என்பது உங்களுக்கு தெரியாது. ஆனால் உங்களுக்கென தினமும் குறிப்பிட்ட அளவு அமைதியான நேரத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். தினமும் தியானம் செய்வது உங்களின் அவர்களின் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது, கவனத்தை அதிகரிக்கிறது, பதட்டம், மனஅழுத்தம் போன்றவை ஏற்படுவதை குறைக்கிறது. அவர்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் மிக எளிய வழியாக இது இருக்கிறது.

MOST READ: இந்த 6 ராசிக்காரர்களுக்கு பயம்னா என்னன்னே தெரியாதாம்... பார்த்து ஜாக்கிரதையா இருங்க...!

விரைவில் படுக்கைக்கு செல்கிறார்கள்

விரைவில் படுக்கைக்கு செல்கிறார்கள்

தூக்கம் என்பது உடற்பயிற்சி, எடைகுறைப்பு மற்றும் ஆரோக்கியத்தின் மறக்கப்பட்ட அம்சமாகும். எட்டு மணி நேர தூக்கம் இல்லாதபோது நம்து உடலில் மனஅழுத்தத்தை தூண்டும் ஹார்மோனான கார்டிசோல் உற்பத்தி அதிகரிக்கிறது. இதனால் பல பக்கவிளைவுகள் ஏற்படுகிறது. ஆனால் ஆரோக்கியமாக வாழ்பவர்கள் பெரும்பாலும் 10 மணிக்கே படுக்கைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அதேசமயம் இவர்கள் 8 மணி நேரத்திற்கு அதிகமாகவும் தூங்குவதில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

things the world’s healthiest people have in common

These are the things that world’s healthiest people have in common.
Desktop Bottom Promotion