For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 3 விஷயங்களை ஃபாலோ பண்ணுனா... கொரோனா வந்தாலும் அது தீவிரமாகாதாம்...

கொரோனாவை எதிர்த்துப் போராடும் இந்த போரில், நம் ஒவ்வொருவரும் ஒருசில விதிகளை தவறாமல் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இந்த விதிகளை ஒருவர் தவறாமல் பின்பற்றி வந்தால், கொரோனா வந்தாலும் தீவிரமாகாமல் தடுக்கலாம்.

|

கொரோனாவைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் சிறப்பாக இருக்கிறோம் என்று சொல்லிவிட முடியாது. தற்போது என்ன தான் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றமடைந்து கொண்டிருக்கின்றன. இதனால் தற்போது போடப்பட்டு வரும் தடுப்பூசிகள் கொரோனாவை எதிர்த்து சிறப்பாக செயல்படுமா என்ற கேள்வி மனதில் எழுகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கும் கொரோனா வருவதோடு, அவர்களும் கொரோனாவை பரப்புகிறார்கள்.

Things That Now Can Prevent COVID From Getting Worse

இம்மாதிரியான சூழ்நிலையில் கொரோனாவை எதிர்த்துப் போராடும் இந்த போரில், நம் ஒவ்வொருவரும் ஒருசில விதிகளை தவறாமல் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இந்த விதிகளை ஒருவர் தவறாமல் பின்பற்றி வந்தால், கொரோனா வந்தாலும் அது தீவிரமாகாமல் தடுக்கலாம். இப்போது கொரோனாவிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டிய 3 விஷயங்கள் என்னவென்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தடுப்பூசி போட்டுக் கொள்வது முக்கியம்

தடுப்பூசி போட்டுக் கொள்வது முக்கியம்

தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் அதன் பின்விளைவுகள் குறித்து ஆன்லைனில் பல தவறான தகவல்கள் பரவி வருகின்றன. அதனாலேயே பலர் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் கொள்கின்றனர். இது தவிர தற்போது உலகம் முழுவதும் போடப்பட்டு வரும் தடுப்பூசி உருமாற்றமடைந்த வைரஸில் அவ்வளவு பயனுள்ளதாக இல்லை என்ற தகவல்களும் உள்ளன. ஆனால் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இந்த நேரத்தில், தடுப்பூசி மட்டுமே நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைக்கவும் மற்றும் நீண்ட கோவிட் வாய்ப்புகளை குறைக்கவும் செய்கின்றன.

தடுப்பூசி போட்டுக் கொள்வதால் தொற்று நோயில் இருந்து நீங்கள் பாதுகாப்பாக இருப்பது மட்டுமல்லாமல், உங்களைச் சுற்றியிருப்பவர்களும் பாதுகாப்பாக இருப்பார்கள். கொரோனாவை எதிர்க்கும் போரில் தடுப்பூசிப் போட்டுக் கொள்வதை விட மாற்று வழி வேறு எதுவும் இல்லை. எனவே தடுப்பூசி போட தகுதியுள்ள அனைவருமே விரைவில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.

பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடரவும்

பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடரவும்

கொரோனா பெருந்தொற்று இன்னும் முடியவில்லை. ஆகவே கவனக்குறைவாக இருக்கக்கூடாது என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த 4 முக்கிய விஷயங்கள் உள்ளன. அவை தடுப்பூசி போட்டுக் கொள்வது, மாஸ்க் அணிவது, சோதனை செய்வது மற்றும் சிறந்த உட்புற காற்றோட்டம் ஆகியவை. தடுப்பூசி போட்டுக் கொள்வதுடன், அதிக நபர்களை சோதிப்பதன் மூலமும், அவற்றைக் கட்டுப்படுத்த சரியான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமும், செயலில் உள்ள வழக்குகளை அடையாளம் காண்பதும் மிகவும் முக்கியம். ஏனெனில் டெல்டா மற்றும் ஆல்பா போன்ற பல தொற்று வைரஸ்கள் எதிர்காலத்தில் பெரிய வெடிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் வலியுறுத்தவில்லை

மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் வலியுறுத்தவில்லை

மற்றொரு முக்கியமான விஷயம் மந்தை நோயெதிர்ப்பு சக்தியைப் பெறுவது பற்றியது. மந்தை நோயெதிர்ப்பு சக்தியைப் பெறுவது என்பது எளிதானது அல்ல. வைரஸிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தியை இரண்டு வழிகளில் மட்டுமே அடைய முடியும்- தடுப்பூசி அல்லது தொற்று. ஒன்று மக்கள் தொகையில் ஒரு பெரிய பகுதி மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும். குறிப்பாக நகர பகுதிகளில் கொரோனா தொற்றுநோய்க்கான ஆபத்து அதிகமாக உள்ளது மற்றும் இறப்புக்கான வாய்ப்பும் உள்ளது. ஆகவே இறப்பு விகிதத்தைக் குறைக்க தொற்றுநோயை உருவாக்குவதை விட தடுப்பூசியில் இருந்து நோயெதிர்ப்பு சக்தியைப் பெறுவதே சிறந்தது. இதன் மூலம் அதிகமான மக்கள் தங்கள் உயிரை இழக்காமல் பாதுகாக்க முடியும்.

முடிவு

முடிவு

மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த மூன்று விஷயங்களைத் தவிர, மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, வெளியே அதிகம் சுற்றாமல் வீட்டிற்குள்ளேயே இருப்பது, மாஸ்க் அணிவது மற்றும் ஆரோக்கியமான சுகாதார பழக்கங்களைப் பின்பற்றுவதும் முக்கியம். குறிப்பாக, குழந்தைகளுக்கு தடுப்பூசி கிடைக்கும் வரை நாம் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things That Now Can Prevent COVID From Getting Worse

Here are some things that now can prevent COVID from getting worse as per an expert. Read on...
Story first published: Monday, September 20, 2021, 15:02 [IST]
Desktop Bottom Promotion