For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களின் கன்னித்தன்மை போனவுடன் அவர்களின் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

முதல் உடலுறவிற்குப் பிறகு பெண்களுக்கு அவர்களின் உடல் மீது பல மாற்றங்களும், கவலைகளும் தோன்றலாம்.

|

பெண்களின் கன்னித்தன்மை என்பது நமது நாட்டில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக நம் நாட்டை பொறுத்தவரையில் திருமணத்திற்கு முன் கன்னித்தன்மையை இழப்பது என்பது மிகப்பெரிய பிரச்சினையாகக் கருதப்படுகிறது. முதல் உடலுறவிற்குப் பிறகு பெண்களுக்கு அவர்களின் உடல் மீது பல மாற்றங்களும், கவலைகளும் தோன்றலாம்.

Things That Happen To Girls Body After Losing Virginity?

கன்னித்திரை உடைவது மட்டுமின்றி பெண்களின் உடலில் முதல் முறை உறவிற்கு பிறகு பல மாற்றங்கள் ஏற்படலாம். இந்த பதிவில் முதல் முறை உடலுறவிற்கு பிறகு பெண்களின் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யோனி மாற்றங்கள்

யோனி மாற்றங்கள்

பெண்கள் உடலுறவு கொள்ள ஆரம்பித்த பிறகு உங்கள் யோனியின் நெகிழ்ச்சி மாறுகிறது. உங்கள் உடலுக்கு நீங்கள் அறிமுகப்படுத்திய இந்த புதிய செயலுக்கு யோனி இன்னும் பழகி வருவதால், யோனி ஊடுருவுவதற்குப் பழகுவதற்கு சிறிது நேரம் ஆகும். இருப்பினும் இது காலப்போக்கில் சிறப்பாகும். உங்கள் யோனி எவ்வாறு உயவூட்டுகிறது என்பது கூட ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் மாறும்.

கிளிட்டோரிஸ் மற்றும் கருப்பை எப்போது சுருங்கி விரிவடையும் என்பதை அறிவார்கள்

கிளிட்டோரிஸ் மற்றும் கருப்பை எப்போது சுருங்கி விரிவடையும் என்பதை அறிவார்கள்

விழிப்புணர்வு நிலையில் இருக்கும்போது, உங்கள் பெண்குறிமூலம் வீங்கி, கருப்பை சற்று உயரும். சிறிது நேரம் கழித்து, உங்கள் உடல் உடலுறவுக்குப் பழகும், நீங்கள் பாலியல் உணர்வு கொள்ளும் ஒவ்வொரு முறையும் கிளிட்டோரிஸ் மற்றும் கருப்பை ஆகியவை இந்த மாற்றங்களின் வழியாகச் சென்று இயல்பு நிலைக்குத் திரும்பும்.

மார்பகங்கள் உறுதியாக மாறும்

மார்பகங்கள் உறுதியாக மாறும்

உடலுறவின் போது மற்றும் அதற்குப் பிறகு, உங்கள் மார்பகத்தின் திசுக்கள் வீங்கி, இரத்த நாளங்கள் நீண்டு உறுதியான மார்பகங்களுக்கு வழிவகுக்கும். ஆனால் இது மீண்டும் பழைய நிலைக்கே சென்றுவிடும் ஏனெனில் இது ஒரு தற்காலிக நிலை மட்டுமே.

MOST READ: 900 பேரை கொடூரமாக கொன்ற இந்தியாவின் ஆபத்தான தொடர் கொலைகாரன்... இரத்தத்தை உறையவைக்கும் வரலாறு...!

வாஸ்கோகாங்கெஷனை அனுபவிப்பார்கள்

வாஸ்கோகாங்கெஷனை அனுபவிப்பார்கள்

வாஸோகாங்கெஷன் என்பது உண்மையில் உடல் திசுக்களின் வீக்கமாகும், இது அதிகரித்த வாஸ்குலர் இரத்த ஓட்டத்தால் ஏற்படுகிறது, இது மார்பகம், மார்பகக்காம்புகள், லேபியா மற்றும் பெண்குறிமூலம் விரிவடைய வழிவகுக்கிறது. இந்த பாலியல் தூண்டுதலின் போது உங்கள் பிறப்புறுப்புகள் மற்றும் மார்பகங்களுக்கு நன்கு ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தம் வழங்கப்படுகிறது. இதன் விளைவாக வெளிப்புற உதடுகள் உட்புற உதடுகள் மற்றும் பெண்குறிமூலம் வீக்க ஆரம்பிக்கலாம் மற்றும் உங்கள் இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தமும் சிறிது நேரத்தில் அதிகரிக்கக்கூடும்.

சருமம் ஒளிர ஆரம்பிக்கும்

சருமம் ஒளிர ஆரம்பிக்கும்

இது உண்மையில் உங்கள் கன்னித்தன்மையை இழப்பதன் மறைக்கப்பட்ட மற்றும் உண்மையிலேயே ஆச்சரியமான நன்மைகளில் ஒன்றாகும். நீங்கள் முதன்முறையாக உடலுறவில் ஈடுபடும்போது, அது உங்கள் முகத்தில் உள்ள பளபளப்பில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும், குறிப்பாக இந்த செயல் ஒரு உச்சக்கட்டத்துடன் முடிந்தால். இதற்கு பின்னால் உள்ள லாஜிக் நீங்கள் உடலுறவில் ஈடுபடும்போது, இது உங்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இது உங்கள் சருமத்திற்கு ஆக்ஸிஜனை செலுத்த உதவுகிறது, இது இளமை பிரகாசத்தை அளிக்கிறது. மேலும் நீங்கள் உடலுறவில் ஈடுபடும்போது, உங்கள் மூளை செரோடோனின் மற்றும் ஆக்ஸிகோன்டின் போன்ற மகிழ்ச்சியான ஹார்மோன்களை வெளியிடுகிறது, இது மன அழுத்த அளவைக் குறைக்க உதவுகிறது மற்றும் நீங்கள் நிம்மதியாக உணர உதவுகிறது.

மார்பகக் காம்புகள் அதிக உணர்திறன் பெறும்

மார்பகக் காம்புகள் அதிக உணர்திறன் பெறும்

பெண்கள் உடலுறவில் ஈடுபட ஆரம்பித்ததும், உங்கள் உடல் பல்வேறு புதிய அனுபவங்களை அனுபவிக்கிறது. இதற்கு காரணம் உங்கள் மார்பகக்காம்புகளைச் சுற்றியுள்ள இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது மற்றும் தசை பதற்றம் அதிகரிக்கிறது, அவை வழக்கத்தை விட மென்மையாகின்றன.

MOST READ: கோடிக்கணக்கான மக்களைக் கொன்ற உலகின் கொடூரமான சர்வாதிகாரிகள் இறுதியில் எப்படி இறந்தனர் தெரியுமா?

மகிழ்ச்சியான ஹார்மோன்கள்

மகிழ்ச்சியான ஹார்மோன்கள்

பிரகாசமான சருமத்திற்க்கு மகிழ்ச்சியான ஹார்மோன்கள் காரணம். இதன் விளைவாக, உங்கள் உடலின் மகிழ்ச்சியான ஹார்மோனான செரோடோனின் சுரக்கிறது. இது தவிர நீங்கள் புணர்ச்சியில் ஈடுபடும்போது, இது ஆக்ஸிடாஸின் எனப்படும் மற்றொரு ஹார்மோனை வெளியிடுகிறது, இது பெண்களை மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வைத்திருக்கும்.

தாமதமான மாதவிடாய்

தாமதமான மாதவிடாய்

உங்கள் ஹார்மோன்கள் செயல்பாடுகளில் இருப்பதால், உங்கள் மாதவிடாய் தாமதமாக வாய்ப்புகள் உள்ளன. இதற்காக பயப்பட வேண்டாம், இது கர்ப்ப எச்சரிக்கை அல்ல, மாறாக உங்கள் உடலில் மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை உணர்த்தும் அறிகுறியாகும்.

MOST READ: இந்த குணம் இருப்பவர்களை ஒருபோதும் காதலிக்காதீங்க... இவங்க செக்ஸ் அடிமையா இருக்க வாய்ப்பிருக்கு...!

உணர்ச்சி மாற்றங்கள்

உணர்ச்சி மாற்றங்கள்

பெண்கள் கன்னித்தன்மையை இழந்துவிட்டால், அவர்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் சோகமான உணர்ச்சிகள் அதிகமாக இருக்கலாம். இதற்கு காரணம் ஹார்மோன் மாற்றங்களாகும் இதனால் இந்த உணர்ச்சிகளில் ஏதேனும் ஒன்றைஅவர்கள் பெறுவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things That Happen To Girl's Body After Losing Virginity?

Read to know the things that happen to a girl's body after losing virginity.
Desktop Bottom Promotion