For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாப்பிட்டவுடன் இந்த செயல்களை தெரியாம கூட செஞ்சிராதீங்க... இல்லனா உங்களுக்குத்தான் ஆபத்து...!

|

ஆரோக்கிய வாழ்விற்கு ஆரோக்கியமான உணவுகளே அடிப்படையாகும். ஆரோக்கியமாக சாப்பிடுவது மட்டுமே உங்களை ஆரோக்கியமாகவும், ஆற்றலுடனும் வைத்திருக்க முடியும் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் எண்ணம் முற்றிலும் தவறாகும். நம்முடைய உணவுக்கு முந்தைய மற்றும் உணவுக்குப் பிந்தைய நடவடிக்கைகள் நமது உடல் நடந்து கொள்ளும் விதத்தை பெரிதும் பாதிக்கும்.

நன்றாக சாப்பிட்டவுடன் நாம் செய்யும் சில காரியங்கள் நம்முடைய ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும். உணவு வேகமாக ஜீரணிக்க வேண்டுமென்று நாம் செய்யும் சில செயல்கள் முற்றிலும் எதிர்மறையாக செயல்பட்டு செரிமான மண்டலத்தை சீர்குலைக்கும். இந்த பதிவில் சாப்பிட்டவுடன் நீங்கள் செய்யும் எந்தெந்த செயல்கள் உங்களுக்கு ஆபத்தாக மாறுகிறது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புகைப்பிடித்தல் அறவே கூடாது

புகைப்பிடித்தல் அறவே கூடாது

உணவுக்குப் பிறகு புகைபிடிப்பதைப் பற்றி நீங்கள் யோசிக்கவேக் கூடாது. ஆனால் பெரும்பாலான ஆண்கள் இதனை தங்களின் வழக்கமாக கொண்டுள்ளனர். பொதுவாகவே புகைப்பிடித்தல் என்பது ஆபத்தான பழக்கமாகும், அதுவும் சாப்பிட்டவுடன் புகைப்பிடிப்பது பத்து மடங்கு அதன் ஆபத்தைஅதிகரிக்கும். இதில் குறைந்தது 60 கார்சிஜோன்கள் உள்ளது. இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி அதனை தவிர்ப்பதுதான்.

குளிக்கக்கூடாது

குளிக்கக்கூடாது

உணவுக்குப் பிறகு குளிக்க வேண்டாம். நன்றாக சாப்பிட்டப் பிறகு குளிப்பதற்கு 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியது அவசியமாகும். செரிமானத்திற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது, நீங்கள் குளிக்கும்போது, இரத்த நாளங்கள் சருமத்தின் ஓட்டத்தை திசை திருப்புகின்றன, இது குளிர்ந்த நீரின் தாக்கத்தை சமாளிக்கிறது. இதனால் செரிமானத்தில் சிக்கல்கள் ஏற்படுகிறது.

டீ மற்றும் காபியை தவிர்க்கவும்

டீ மற்றும் காபியை தவிர்க்கவும்

உணவுக்குப் பிறகு நீங்கள் தேநீர் அல்லது காபி எடுத்துக் கொள்ளும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் அதனை இனிமேல் செய்யாதீர்கள். தேநீர், காபி இரண்டிற்குமே தனித்தனி நன்மைகள் இருப்பது உண்மைதான். ஆனால் தவறான நேரத்தில் அவற்றை எடுத்துக் கொள்வது அதனை ஆபத்தான பொருளாக மாற்றும். சுகாதார வல்லுநர்களின் கூற்றுப்படி, எந்தவொரு உணவிற்கும் ஒரு மணி நேரத்திற்குப் பிறகுதான் தேநீர் அல்லது காபி உட்கொள்ள வேண்டும்.

MOST READ: ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளின் ரகசியம்... அவர்கள் நீண்ட காலம் பூமியில் வசிக்க காரணம் இதுதான்...!

பழங்கள் சாப்பிடக்கூடாது

பழங்கள் சாப்பிடக்கூடாது

உணவுக்குப் பிறகு நீங்கள் ஒரு பழத்தை சாப்பிடும்போது, அது உணவோடு கலந்துவிடும், இதனால் குடல்களுக்கு சரியான நேரத்தில் பயணிக்காது,இதனால் அது கெட்டுப்போக வாய்ப்புள்ளது, இதன் விளைவாக உணவையும் செரிமானம் அடையாமல் தடுக்கிறது.

நடைப்பயிற்சியை தவிர்க்கவும்

நடைப்பயிற்சியை தவிர்க்கவும்

பொதுவாக, உணவை எளிதில் ஜீரணிக்க இது உதவும் என்ற எண்ணத்துடன் மக்கள் சாப்பிட்டு முடித்தவுடனேயே நடைபயிற்சிக்குச் செல்கிறார்கள். ஆனால், இது ஒரு கட்டுக்கதை. உணவுக்குப் பிறகு நீங்கள் ஒரு நடைக்குச் செல்லலாம், நிச்சயமாக, ஆனால் குறைந்தது 30 நிமிடங்களுக்குப் பிறகுதான் இதனை செய்ய வேண்டும்.

தூங்கக்கூடாது

தூங்கக்கூடாது

சாப்பிட்டு முடிந்த உடனேயே தூங்குவது ஒரு மோசமான யோசனையாகும். இதற்குப் பதிலாக நீங்கள் மிகவும் விரும்பும் செயல்களில் ஈடுபட முயற்சிக்க வேண்டும், தொலைக்காட்சி, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அரட்டை அடிப்பது போன்றவற்றை செய்யலாம். ஆனால் உடனடியாக தூங்குவதைத் தவிர்க்கவும், ஏனென்றால் நீங்கள் படுத்துக் கொள்ளும்போது, பல செரிமான சாறுகள் எதிர் திசையில் பயணிக்கின்றன, இதன் விளைவாக முழு செரிமான செயல்முறையும் மோசமாக பாதிக்கப்படுகிறது.

MOST READ: இந்த ராசிக்காரங்க கல்யாணமே பண்ணிக்கிட்டாலும் சிறந்த நண்பர்களாத்தான் இருப்பாங்களாம்...!

பெல்ட்டை தளர்த்துவது

பெல்ட்டை தளர்த்துவது

உணவுக்குப் பிறகு பெல்ட்டை தளர்த்துவது நீங்கள் தேவைப்பட்டதை விட அதிகமாக சாப்பிட்டதற்கான அறிகுறியாகும், சுருக்கமாக, இது உங்களுக்கு மோசமானது. எனவே இந்த நிலைமையைத் தவிர்ப்பதே சிறந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things You Should Never Do After the Meal

Check out the list of things you should never do immediately after the meal.
Desktop Bottom Promotion