For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹை பிபி உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

கோவிட்-19 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என்று கண்டறியப்பட்டாலும், உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.

|

அனைவருமே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்வது முக்கியம் என்றாலும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நாள்பட்ட சமாளிக்க முடியாத இரத்த அழுத்த நிலைகள் போன்ற ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள் போட்டுக் கொள்வது அதிக நன்மைகளைத் தரும். ஏனெனில் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு கொரோனா தாக்குவதற்கான அபாயம் அதிகம் உள்ளதோடு, மிகவும் தீவிர விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் தடுப்பூசி போட்டுக் கொள்வது கொரோனாவுடன் தொடர்புடைய பல அபாயங்களான நோய்த்தீவிரம், இறப்பு மற்றும் சிக்கல்களைக் குறைக்கிறது.

Coronavirus Vaccination: Things People Suffering From Hypertension Must Know About Getting The COVID-19 Vaccine

கோவிட்-19 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என்று கண்டறியப்பட்டாலும், உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவை என்னவென்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோவிட்-19 மற்றும் உயர் இரத்த அழுத்தம் எவ்வளவு ஆபத்தானது?

கோவிட்-19 மற்றும் உயர் இரத்த அழுத்தம் எவ்வளவு ஆபத்தானது?

உயர் இரத்த அழுத்தம் உள்ள ஒருவருக்கு பக்கவாதம், மாரடைப்பு, உடல் பருமன், சுவாசக் கோளாறுகள் போன்ற கடுமையான ஆரோக்கிய பிரச்சனைகளை உருவாக்கும் அபாயத்தை விட அதிகமாக கோவிட்-19 தாக்குவதற்கான வாய்ப்புள்ளது. பொதுவாக உயர் இரத்த அழுத்தம் உடலில் அழற்சியின் அளவை அதிகமாக வைத்திருக்கும். அதோடு இது உடலில் ACE தடுப்பான்கள் மற்றும் ஆஞ்சியோடென்சின் ஏற்பி தடுப்பான்களை (ARB) அதிகரிக்கும். இந்த நொதிகளைத் தான் SARS-COV-2 வைரஸ் தன்னுடன் இணைத்து உடலைத் தாக்குகிறது. இந்த ஏற்பிகள் மற்றும் தடுப்பான்கள், உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளால் இயற்கையாகவே உடலில் அதிகரிக்கிறது. ஆகவே தான் இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு கொரோனா தாக்குவதற்கான மற்றும் தீவிரத்தன்மை அதிகரிப்பதற்கான அபாயம் உள்ளது,

அதோடு ஏற்கனவே இவர்கள் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டிருப்பதால், அவர்களுக்கு கொரோனா தொற்று பிடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஆய்வுகளும் உயர் இரத்த அழுத்த பிரச்சனை கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும், அதிக இறப்புகள் ஏற்படுவதற்கும் முன்னணி காரணங்களுள் ஒன்றாகும் என்பதை நிரூபித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி பெறுவதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

கொரோனா தடுப்பூசி பெறுவதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

சிக்கல்களுடன் தொடர்புடைய அபாயத்தைக் கொண்ட உயர் இரத்த அழுத்த நோயாளிகள் கோவிட்-19 தடுப்பூசி பெறுவதில் ஒருபோதும் தாமதம் செய்யக்கூடாது. இருப்பினும், கோவிட்-19 தடுப்பூசி பயன்பாட்டிற்கு பாதுகாப்பானதாக இருக்குமா அல்லது மோசமான பக்கவிளைவுகளுக்கு வழிவகுக்குமா என்பது பற்றிய கவலை எழுவது இயல்பானது.

மருத்துவ ரீதியாக கோவிட் தடுப்பூசிகள் பாதுகாப்பானவையாக கண்டறியப்பட்டாலும், தீவிர உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் முதலில் மருத்துவரை சந்தித்து சோதனை செய்து கொள்ள வேண்டும். அதோடு எந்த தடுப்பூசியைப் போடலாம் என்பதையும் கேட்டுக் கொள்ளலாம். ஏனெனில் தற்போது பல கோவிட் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

தற்போது, உயர் இரத்த அழுத்தம் அல்லது இதய நோய்களைக் கொண்டவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி பாதுகாப்பானவை அல்ல என்பதற்கு எவ்வித சான்றும் இல்லை. ஆகவே இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அச்சமின்றி கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். குறிப்பாக தடுப்பூசி போடுவதற்கு முன்பு நன்கு சாப்பிட்டு, நீரேற்றத்துடன் இருக்க வேண்டும். அதோடு தடுப்பூசிக்கு பின்பு மறக்காமல் முகமூடிகளை அணிவது, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது போன்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உயர் இரத்த அழுத்தம் தடுப்பூசியின் செயல்திறனை பாதிக்குமா?

உயர் இரத்த அழுத்தம் தடுப்பூசியின் செயல்திறனை பாதிக்குமா?

நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும் சில குறிப்பிட்ட நோய்கள் அல்லது நிலைமைகள் கோவிட்-19 தடுப்பூசியின் நோயெதிர்ப்பு சக்தியில் இடையூறு ஏற்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது. தற்போது நமக்கு கிடைக்கும் அனைத்து தடுப்பூசிகளுக்கும் பொருந்தாது என்றாலும், உயர் இரத்த அழுத்த பிரச்சனை, தடுப்பூசியால் உருவாக்கப்படும் ஆன்டிபாடிகள் அல்லது தடுப்பூசியின் செயல்திறன் சிறிது நேரத்திற்கு பின் குறையும் ஆபத்துக்கள் உள்ளன.

அதிலும் நாள்பட்ட உயர் இரத்த அழுத்தம் நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தலாம். இதனால் தடுப்பூசி பயனுள்ளதாக இல்லாமல் போகலாம். ஏனெனில் இரத்த அழுத்த பிரச்சனைக்கு போடப்படும் மருந்துகள் தடுப்பூசியின் செயல்திறனைத் தடுக்கலாம். எனவே தடுப்பூசி போடுவது மிகவும் முக்கியம் என்றாலும், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் இருமடங்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசிக்கு பின் இரத்த அழுத்தம் அதிகரிக்க அல்லது குறைய வாய்ப்புள்ளதா?

கொரோனா தடுப்பூசிக்கு பின் இரத்த அழுத்தம் அதிகரிக்க அல்லது குறைய வாய்ப்புள்ளதா?

கொரோனா தடுப்பூசி போட்ட பின் காய்ச்சல் வருவது, சிறிது உடல் பலவீனமாக இருப்பது மிகவும் சாதாரணம். ஆனால் மிகவும் அரிதான பக்கவிளைவாக சிலருக்கு இரத்த அழுத்த அளவுகளில் மாற்றம் ஏற்படும். அதுவும் எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளைப் பெறுபவர்களிடமும், இந்தியர்களிடமும் இம்மாதிரியான விளைவு ஏற்படுகிறது.

இது பட்டியலிடப்பட்ட கொரோனா தடுப்பூசியின் பக்கவிளைவு அல்ல என்றாலும், இரத்த அழுத்த மாற்ற நிகழ்வு உயர் இரத்த அழுத்த அல்லது இதய நோயாளிகளுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. தடுப்பூசி போட்டவர்களிடம் இம்மாதிரியான விளைவு ஏற்படுவதற்கான சாத்தியமான காரணத்தை அறிய தொடர்ந்து முயற்சிக்கையில், நிபுணர்கள் உயர் இரத்த அழுத்தமானது தடுப்பூசியுடன் தொடர்புடைய மன அழுத்தத்தின் விளைவாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

வழக்கமான மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ளலாமா?

வழக்கமான மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ளலாமா?

உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோயாளிகள் ஒவ்வொரு நாளும் எடுக்கப்பட வேண்டிய மருந்துகளை முக்கிய செயல்பாட்டை ஆதரிப்பதற்கும், அளவீடுகளை உறுதிப்படுத்துவதற்கும் எடுத்துக் கொள்கிறார்கள். எனவே எக்காரணம் கொண்டும் தினமும் எடுக்கும் மருந்துகளை தவிர்க்கக்கூடாது. தடுப்பூசியின் செயல்திறனுக்கு இடையூறு விளைவிக்கும் சில மருந்துகள் இருந்தாலும், உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் எந்த மருந்தையும் தவிர்க்கக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அவ்வாறு செய்வது, பாதுகாப்பற்றது மற்றும் ஆபத்தானது.

முன்னணி மருத்துவர்களின் கூற்றுப்படி, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற நிலைகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மருந்துகள் உண்மையில் கோவிட்-19 தடுப்பூசியின் செயல்பாட்டை குறைக்காது. ஏனென்றால் நோயாளிகள் நேரடியாக உட்கொள்ளும் மருந்துகள் பாதிக்கப்பட்ட உறுப்புகளில் வேலை செய்கின்றன. மேலும் எந்த வகையிலும், இது தடுப்பூசியின் வேலையை பாதிக்காது.

இருப்பினும், தடுப்பூசி போட வேண்டிய தேதியின் போது உங்களுக்கு கட்டுப்பாடற்ற இரத்த அழுத்தம் இருந்தால், நீங்கள் தடுப்பூசி போடுவதை தள்ளி வைத்துவிட்டு, முதலில் மருத்துவரை அணுக வேண்டும்.

வேறு என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்?

வேறு என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்?

உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோயாளிகள் சிறிதும் தயக்கம் கொள்ளாமல் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அதோடு ஒருசில கூடுதல் நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு குறிப்புகள், தடுப்பூசி அனுபவத்தை பாமுகாப்பானதாக்கும்.

* நல்ல உணவு மற்றும் நீரேற்றத்துடன் இருப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை நன்கு தயார்படுத்தும். எக்காரணம் கொண்டும் வெறும் வயிற்றில் தடுப்பூசி போடாதீர்கள்.

* தடுப்பூசியால் சந்திக்கும் லேசான மற்றும் மிதமான பக்கவிளைவுகள் குறித்து நன்கு அறிந்து கொள்ளுங்கள். இதனால் உடனடி நடவடிக்கைகளை எடுக்கலாம்.

* உங்கள் இரத்த அழுத்தத்தை அடிக்கடி கண்காணிக்கவும் மற்றும் தினமும் எடுக்கும் மருந்துகளை தவறாமல் எடுக்கவும்.

* ஒருவேளை உங்களுக்கு கடுமையான ஆரோக்கிய பிரச்சனை இருந்தால், தடுப்பூசி போடும் முன்னும், பின்னும் உங்கள் மருத்துவருடன் தொடர்பில் இருங்கள்.

* உங்களுக்கு ஏதேனும கோவிட்-19 அறிகுறிகள் இருந்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Coronavirus Vaccination: Things People Suffering From Hypertension Must Know About Getting The COVID-19 Vaccine

Here are some things people suffering from hypertension must know about getting the vaccine. Read on...
Desktop Bottom Promotion