For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸில் இருந்து மீண்டாலும் இதையெல்லாம் கண்டிப்பா பண்ணனும்... இல்லனா ஆபத்துதான்...!

கொரோனா நோய் மூளை மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தையும் தாக்கக்கூடும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. கொரோனாவில் இருந்து மீண்ட பிறகும் உங்களின் வாழ்க்கை சகஜ நிலைக்கு திரும்ப சில காலமாகும்.

|

கொரோனா மீதான மக்களின் பயம் குறைந்து விட்டாலும் இப்பொழுதும் கொரோனாவின் பரவும் வேகம் இன்னும் குறைந்த பாடில்லை. உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸைப் பற்றி ஒவ்வொரு நாளும் தொடர்ந்து புதிய விஷயத்தை கற்றுக் கொண்டாலும், COVID-19 இன் நீண்டகால தாக்கங்களுக்கு இன்னும் தெளிவான பதில் இல்லை.

Things Must Do After Recovering From Coronavirus

COVID-19 ஒரு புதுமையான நோய் மற்றும் வழக்கமான வைரஸ் காய்ச்சலிலிருந்து மிகவும் வேறுபட்டது என்பதால், நோயின் நீண்டகால விளைவுகளை அடிக்கோடிட்டுக் காட்டும் போதுமான ஆய்வுகள் இல்லை. COVID-19 இலிருந்து மீள்பவர்கள் மூச்சுத் திணறல், சோர்வு, தலைவலி மற்றும் குழப்பம் உள்ளிட்ட பல நீண்டகால பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்று வெளிவரும் சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன.நோய்த்தொற்று எவ்வளவு அதிகமாக உள்ளதோ அதேயளவிற்கு நோயில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொரோனாவிற்கு பிறகான வாழ்க்கை

கொரோனாவிற்கு பிறகான வாழ்க்கை

ஒரு COVID-19 நோயாளி வழக்கமாக 3 வாரங்களில் குணமடைகிறார், ஆய்வுகள் சிறுநீரகம், நுரையீரல் மற்றும் இதய நோய்களால் பாதிக்கப்படலாம் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. COVID-19 இன் பிற நீண்டகால தாக்கங்கள் நரம்பியல் நிலைமைகள் மற்றும் மனநலப் பிரச்சினைகள் ஆகியவை அடங்கும், ஏனெனில் இந்த நோய் மூளை மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தையும் தாக்கக்கூடும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. கொரோனாவில் இருந்து மீண்ட பிறகும் உங்களின் வாழ்க்கை சகஜ நிலைக்கு திரும்ப சில காலமாகும். சகஜ வாழ்க்கைக்கு திரும்ப என்ன செய்ய வேண்டுமென்று மேற்கொண்டு பார்க்கலாம்.

உங்களுக்கு சிறிது காலம் எடுத்துக்கொள்ளுங்கள்

உங்களுக்கு சிறிது காலம் எடுத்துக்கொள்ளுங்கள்

நீங்கள் வீடு திரும்பியவுடன் அல்லது நோய்க்கு நெகட்டிவ் என சோதித்தவுடன் உங்கள் முந்தைய வாழ்க்கைக்குத் உடனே திரும்புவீர்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம். எனவே, உங்கள் பழைய வழக்கத்தை மெதுவாக சரிசெய்ய சிறிது நேரம் ஒதுக்குங்கள். நினைவில் வைத்து கொள்ளுங்கள், நீங்கள் ஒரு மோசமான நோயை எதிர்த்துப் போராடியுள்ளீர்கள், நேராக பழைய வாழ்க்கைக்கு திரும்புவதை விட, படிப்படியாக உங்கள் பழைய நடவடிக்கைகளில் இறங்குவது நல்லது.

நினைவக பயிற்சிகள்

நினைவக பயிற்சிகள்

உங்கள் நினைவகம் மற்றும் கவன நிலைகளை படிப்படியாக திரும்பப் பெற, உங்கள் மூளையைத் புதுப்பிக்க புதிர்கள், நினைவக விளையாட்டுகள் மற்றும் பயிற்சிகளை விளையாடுவதில் தினமும் சிறிது நேரம் முதலீடு செய்யுங்கள். மெதுவாக செய்தாலும், இந்த பயிற்சிகள் ஒவ்வொரு நாளும் உங்கள் மனதிற்கு நன்மை செய்கிறது.

MOST READ: மாவீரர் அசோகரின் மரணம் எப்படி நடந்தது தெரியுமா? இந்தியாவையே ஆண்ட அரசருக்கு மனைவியால் நேர்ந்த துயரம்!

எச்சரிக்கை அறிகுறிகளில் கவனம் செலுத்துங்கள்

எச்சரிக்கை அறிகுறிகளில் கவனம் செலுத்துங்கள்

மோசமான தலைவலி அல்லது மூச்சுத் திணறல் என எதுவாக இருந்தாலும் உங்கள் உடல் சரியாக இல்லை என்பதை உணர்த்தும் எந்த எச்சரிக்கை அறிகுறிகளுக்கும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கொரோனாவில் இருந்து மீண்ட பிறகும் இதுபோன்ற ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

மருந்துகளை சரிபார்க்கவும்

மருந்துகளை சரிபார்க்கவும்

உங்களுக்கு ஏதேனும் நாள்பட்ட நோய் இருந்தால், அதற்கான வழக்கமான மருந்துகளை நீங்கள் எடுத்துக் கொண்டால், உங்கள் அறிகுறிகளை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் (இரத்த அழுத்தம், சர்க்கரை அளவுகள் போன்றவற்றைச் சரிபார்க்கவும்) மற்றும் அளவைத் திருத்தம் தேவைப்பட்டால் உங்கள் சுகாதார மருத்துவரை அணுகவும்.

 கொரோனாவை எதிர்க்கும் சக்தி உங்களிடம் இல்லை

கொரோனாவை எதிர்க்கும் சக்தி உங்களிடம் இல்லை

உங்களுக்கு கொரோனாவை எதிர்க்கும் நோயெதிர்ப்பு சக்தி இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கொரோனா வைரஸ் தாக்கம் உங்கள் உடலுக்கு நோயிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுத்திருக்கலாம், ஆனால் ஆய்வுகள் இது பெரும்பாலும் தற்காலிகமானது என்று கூறுகின்றன. எனவே பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து சமூக தூரத்தை கண்டிப்பாக கடைப்பிடிக்கவும்.

ஆற்றலை சேமியுங்கள்

ஆற்றலை சேமியுங்கள்

நீங்கள் மீட்பு காலத்தில் இருப்பதால் மிக முக்கியமான பணிகளுக்கு மட்டும் முன்னுரிமை அளிப்பது மற்ற வேலைகளை தவிர்ப்பது முக்கியம். உங்கள் ஆற்றலை முடிந்தவரை பாதுகாத்து, தேவையற்ற பணிகளை பின்னர் தேதிக்கு ஒத்திவைக்கவும்.

MOST READ: இந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் எவ்வளவு பெரிய காயமாக இருந்தாலும் சீக்கிரம் சரியாகிரும் தெரியுமா?

உதவியை நாடுங்கள்

உதவியை நாடுங்கள்

உங்களைப் போல மீண்டும் உணர உங்களுக்கு சரியான கவனிப்பும் ஓய்வும் தேவை என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனவே, உங்களுக்கு தேவையான போதெல்லாம் உதவியை நாடுங்கள், ஏனெனில் இது உங்கள் ஆற்றலையும், நோய்க்கு எதிராக பாதுகாக்க உதவும். சாதாரண வேலையாக இருந்தாலும் உங்கள் உடல் பழைய நிலைக்கு திரும்பும்வரை உங்களுக்கு உதவி தேவை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things Must Do After Recovering From Coronavirus

Check out the list of things must do after recovering from Coronavirus.
Desktop Bottom Promotion