Latest Updates
-
இராவணனுக்கு 10 தலைகள் கிடைத்ததற்கு பின்னால் உள்ள கதை என்ன தெரியுமா? அந்த 10 தலைகளின் அர்த்தம் என்ன தெரியுமா? -
3/4 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி கெட்டி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
பொரி மிச்சமிருந்தா இந்த மாதிரி மொறுமொறுனு வடை சுடுங்க - டீ, காபியோட சாப்பிட சூப்பரா இருக்கும் -
லென்ஸ் போட்டிருக்கீங்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க.. பார்வைக்கே ஆபத்தாயிடும் - எச்சரிக்கும் கண் டாக்டர்! -
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் உலகத்தில் நடக்கப்போகும் மாற்றங்களும், அழிவுகளும் - ஷாக் ஆகாதீங்க -
நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
நாயர் கடை வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதாம் -
புதன் உதயத்தால் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
November Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. நவம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
திருமணமான ஆண்கள் இந்த பொருட்களை தினமும் சாப்பிடுவது அவர்களின் செக்ஸ் வாழ்க்கையை சூப்பராக்குமாம்...!
திருமணமான ஆண்கள் தங்களின் பாலியல் உந்துதலை அதிகரிக்க தங்கள் அன்றாட உணவில் சில பொருட்களை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பொதுவாகவே மனிதர்கள் ஆரோக்கியமான உணவைக் காட்டிலும் சுவையான உணவிற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். சுவையான உணவிற்கு அடிமையாக இருப்பதில் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக திருமணமான புதிதில் பெரும்பாலும் ஆண்கள் தங்கள் மனைவியின் சமையலுக்கு அடிமையாக இருப்பார்கள்.

திருமணத்திற்கு பிறகு கணவரின் மனதில் இடம்பிடிக்க மனைவிகள் சுவையான உணவை சமைப்பதில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இது ஆண்களின் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கிறது, குறிப்பாக பாலியல் செயல்பாடுகளில் பல தாக்கத்தை ஏற்படுத்துகிறது. திருமணமான ஆண்கள் தங்களின் பாலியல் உந்துதலை அதிகரிக்க தங்கள் அன்றாட உணவில் சில பொருட்களை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த உணவுகள் கணவர்களின் பாலியல் செயல்திறனை ஊக்குவிக்கும்.

சாக்லேட்
சாக்லேட் பண்டைய காலத்திலிருந்தே மனநிலை மாற்றும் கட்டுப்படுத்தியாகவும், மகிழ்ச்சியான ஹார்மோன்களை வெளியிடும் ஒரு மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சாக்லேட் டோபமைன் ஹார்மோனை வெளியிட உதவும் ஃபைனிலெதிலாமைன் என்ற வேதியியல் கலவை கொண்டது. இந்த ஹார்மோன் மகிழ்ச்சியின் உணர்வை உருவாக்கி பாலியல் விழிப்புணர்வை அதிகரிக்கும்.

வாழைப்பழம்
வாழைப்பழத்தில் அதிக அளவு கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி 6 ஆகியவை உள்ளன, அவை உடலின் வலிமை மற்றும் சுறுசுறுப்பை மேம்படுத்துவதில் சிறந்தவை. இந்த ஊட்டச்சத்து நிரம்பிய பழத்தின் கூடுதல் நன்மை என்னவென்றால், அவை காதல் ஹார்மோன்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதால், அவை சக்தி நிறைந்த பாலியல் செயல்திறனை வழங்க உதவும். திருமணமான ஆண்கள் தினமும் தங்கள் உணவில் வாழைப்பழத்தை சேர்த்துக் கொள்வது அவசியமானது.

பூண்டு
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றுவதற்கும் சிறந்த உணவாக இருப்பதுடன், உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த பூண்டு ஒரு சக்திவாய்ந்த மூலப்பொருள் ஆகும். இந்த மேம்படுத்தப்பட்ட இரத்த ஓட்டத்திற்கு காரணம் இதிலிருக்கும் அல்லிசின் ஆகும், இது உங்களின் தாம்பத்ய வாழ்க்கையை சிறப்பானதாக மாற்றும். தினமும் உணவில் பூண்டை பச்சையாகவோ அல்லது வேறுவடிவிலோ அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கீரை
கீரை நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவும் பொருள் மட்டுமல்ல, வயாகரா எடுத்துக்கொள்வதில் இருந்து கிடைக்கும் அளவிற்கான நன்மைகளை வழங்கக்கூடும். இந்த பச்சை இலை காய்கறி பல ஊட்டச்சத்துக்களின் நன்மைக்காக பயன்படுத்தப்படுகிறது, இது இரத்த ஓட்டத்தை உச்சநிலைக்கு அதிகரிக்க உதவுகிறது. தினமும் கீரை சேர்த்துக் கொள்ள இயலாவிட்டாலும் வாரத்திற்கு மூன்று முறையாவது கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சிவப்பு இறைச்சி
பொதுவாக ஆண்களுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் இறைச்சி கண்டிப்பாக இருக்கும். பிடித்த உணவு என்பதைக் காட்டிலும் ஆண்களின் பாலியல் திறனை பன்மடங்கு அதிகரிக்க இறைச்சியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிவப்பு இறைச்சியில் இருக்கும் எல்-கார்னைடைன் எனப்படும் பாலியல் செயல்திறனைத் தணிக்கும் மிக சக்திவாய்ந்த ஊட்டச்சத்து உள்ளது. இது உங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவை சரியான உந்துதலைக் கொடுக்கும் முக்கிய கூறுகளில் ஒன்றாகும்.

வெண்ணிலா
படுக்கையறை சுற்றுப்புறத்தின் நறுமணமும் உங்களைத் தூண்டிவிடுகிறது, ஆனால் நீங்கள் நறுமணமுள்ள மற்றும் சத்தான ஒன்றைக் கொண்டிருக்கும்போது, அதன் விளைவு அற்புதமானதாக இருக்கும். பழங்காலத்திலிருந்தே, வெண்ணிலா வாசனை பாலியல் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டது, ஆனால் புதிய மருத்துவ ஆய்வுகள் வெண்ணிலா சுவையுடன் உணவை உட்கொள்வது ஆண்களின் பாலியல் செயல்திறனை மேம்படுத்த விரும்பும் நபர்களுக்கு மிகவும் சாதகமானது என்பதை நிரூபித்துள்ளது.

சிப்பிகள்
திருமணமான ஒவ்வொரு ஆணும் சிப்பிகளை வழக்கமாக உட்கொள்ள வேண்டும், ஏனெனில் அவை பாலியல் ஹார்மோன்களின் சுரப்பு மற்றும் ஓட்டத்தை மேம்படுத்தும் ஆற்றலுக்காக அறியப்படுகின்றன. இந்த கடல் உணவில் அதிக அளவு ஜிங்க் உள்ளது, இது ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க உதவுகிறது. இது ஆண்களின் பாலியல் வாழ்க்கையை பலமடங்கு அதிகரிக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications
