Just In
- 13 hrs ago
வார ராசிபலன் (22.05.2022-28.05.2022) - இந்த வாரம் இந்த ராசிக்காரங்களாம் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்...
- 14 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் தங்கள் ரகசியங்களை பிறருடன் பகிர்வதைத் தவிர்க்கவும்..
- 23 hrs ago
மட்டன் தால்சா
- 24 hrs ago
உங்கள் ஆயுளை அதிகரிக்க நெய்யுடன் இந்த பொருட்களில் ஒன்றை சேர்த்து சாப்பிடுங்கள் போதும்...!
Don't Miss
- Movies
பிரபல நடிகைகளை ஒட்டகங்களுடன் ஒப்பிட்ட அதிதி ராவ்.. ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
- News
பொறுத்தது போதும் பொங்கி எழு! சுண்டியிழுத்த பிரியாணி வாசம்! ரணகளமான ஓ.பி.எஸ்.நிகழ்ச்சி!
- Sports
இந்திய டி-20 அணி அறிவிப்பு.. அணிக்கு திரும்பிய தினேஷ் கார்த்திக்.. கேப்டனாக ராகுல் நியமனம்
- Finance
இலங்கையை போன்று மற்ற நாடுகளிலும் பிரச்சனை வரலாம்.. எச்சரிக்கும் ஐஎம்எஃப்..!
- Automobiles
டொயோட்டா ஃபார்ச்சூனர் என்ன ஆகப்போகுதோ? ஜீப் மெரிடியன் காரின் டெலிவரி பணிகள் விரைவில் தொடக்கம்!
- Technology
லுக் வேற லெவல்: புதிய எமரால்டு பிரவுன் வண்ண விருப்பத்தில் சாம்சங் கேலக்ஸி எம்33, எம்53 5ஜி!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஓமிக்ரான் உங்களுக்கு வரக்கூடாதா? அப்ப இனிமேல் இத ஃபாலோ பண்ணுங்க...
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒட்டுமொத்த உலகமும் கொரோனா என்னு வைரஸ் தாக்கத்தால் பேரழிவை சந்தித்து வருகிறது. என்ன தான் இந்த வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், கொரோனா வைரஸ் குறிப்பிட்ட காலத்தில் பின் உருமாற்றமடைந்து தாக்கி வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு கொரோனாவின் டெல்டா மாறுபாடு இந்தியாவில் இரண்டாம் அலையை ஏற்படுத்தி குறுகிய காலத்தில் பல உயிர்களைப் பறித்தது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாடு வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் மனதில் மீண்டும் அச்சம் அதிகரிக்கிறது.
எதுவாயினும், ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருந்தால், எப்பேற்பட்ட வைரஸையும் எதிர்த்துப் போராடலாம். இந்த ஓமிக்ரான் மாறுபாடும் கொரோனாவைப் போன்றே காய்ச்சல், சளி, மூச்சுத் திணறல், மூக்கு ஒழுகல் மற்றும் தொண்டைப் புண் போன்ற அறிகுறிகளைக் கொண்டுள்ளதால், மிகவும் கவனமாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஆகவே ஓமிக்ரானை எதிர்த்துப் போராடும் அளவில் நோயெதிர்ப்பு சக்தியைப் பெற ஒருவர் தினமும் தவறாமல் மேற்கொள்ள வேண்டிய சில பழக்கங்களை பட்டியலிட்டுள்ளோம். இதைப் பின்பற்றினால், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக வைத்துக் கொள்ளலாம்.

பழக்கம் #1
கோவிட்-19 வைரஸ் அல்லது ஓமிக்ரான் மாறுபாட்டின் தாக்கத்தைத் தடுக்க ஒருவர் முதலில் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான பழக்கம் என்னவென்றால், அது தினமும் நீரை நன்கு கொதிக்க வைத்து வெதுவெதுப்பான நிலையில் குடிப்பது தான்.

பழக்கம் #2
ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலத்தை எப்போதுமே வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள நெல்லிக்காய் ஜூஸ், கற்றாழை ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை குடிக்க வேண்டும்.

பழக்கம் #3
தினமும் வழக்கமாக குடிக்கும் நீரில் சிறிது துளசி சாற்றினை அல்லது துளசி இலைகளைப் போட்டு குடித்து வந்தால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, எப்போதும் வலிமையாக இருக்கும். இதனால் எப்பேற்பட்ட வைரஸ் அல்லது பாக்டீரியாவும் அவ்வளவு எளிதில் உடலினுள் சென்று உயிர் வாழ முடியாது.

பழக்கம் #4
நாம் அன்றாட சமையலில் சேர்க்கும் ஓர் மசாலா பொருள் தான் மஞ்சள். இந்த மஞ்சள் ஆன்டி-வைரல் போன்று செயல்பட்டு, நோய்த்தொற்றில் இருந்து உடலைப் பாதுகாக்கும். இத்தகைய மஞ்சளை அன்றாட உணவில் சேர்ப்பதோடு, தினமும் வெதுவெதுப்பான பாலில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குடித்து வாருங்கள். இதனால் நோயெதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும்.

பழக்கம் #5
பழங்காலம் முதலாக நமது உடலில் ஏதேனும் பிரச்சனை என்றால், நம் அம்மாக்கள் அல்லது பாட்டிமார்கள் செய்து தரும் ஓர் பானம் தான் கசாயம். அதுவும் கொரோனா பரவ ஆரம்பித்த காலத்தில், நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர், இஞ்சி மஞ்சள் கிராம்பு கசாயம் என பலவிதமான கசாயங்களை தயாரித்து குடித்து வந்தோம். அதை ஓமிக்ரான் பரவும் காலத்திலும் தவறாமல் குடித்து வந்தால், நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக வைத்துக் கொள்ளலாம்.

பழக்கம் #6
5 துளசி இலைகள், 4 மிளகு, 3 கிராம்பு, ஒரு துண்டு இஞ்சி ஆகியவற்றை 1 டம்ளர் நீரில் போட்டு அடுப்பில் வைத்து, கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் சேர்த்து தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்.

பழக்கம் #7
நீங்கள் ஒரு டீ பிரியராக இருந்தால், ஓமிக்ரான் பரவும் இக்காலத்தில் தினமும் பால் டீ குடிப்பதற்கு பதிலாக, எலுமிச்சை பாதியை வெட்டி, 2 டம்ளர் நீரில் போட்டு, அத்துடன் 2 கிராம்பு, சிறிது இஞ்சி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு ஒரு டம்ளராக சுண்ட காய்ச்சி வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து குடியுங்கள். இதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பழக்கம் #8
நம் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்வது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் முக்கியமானது. குறிப்பாக சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக் கொண்டால், சுவாச பிரச்சனைகளைத் தடுக்கலாம். அதற்கு வேப்பிலைகள், குக்குலு, பிசின், தேவதாரு மற்றும் 2 கற்பூரங்களை ஒன்றாக வைத்து எரித்து, அந்த புகையை வீடு முழுவதும் பரப்புங்கள். இதனால் காற்றில் உள்ள நச்சுக்கிருமிகள் அழிந்துவிடும்.