For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பழக்கங்கள் உங்கள் மூளையை உள்ளே இருந்து சேதப்படுத்துகிறது என்பது தெரியுமா?

இன்று நாம் மேற்கொள்ளும் சில பழக்கவழக்கங்கள் மூளைக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இப்பழக்கம் அப்படியே நீடித்தால், படிப்படியாக நமது மூளை வலுவிழந்து வேலை செய்வதை நிறுத்திவிடும்.

|

நமது உடலில் மூளை மிகவும் முக்கியமான பகுதியாகும். இது தான் நம் ஒட்டுமொத்த உடலையும் கட்டுப்படுத்துகிறது. இத்தகைய மூளை ஆரோக்கியமாக இருந்தால் தான், உடலின் மற்ற உறுப்புக்கள் சிறப்பாக செயல்பட முடியும். எனவே நாம் மூளையின் ஆரோக்கியத்தில் சற்று அதிக கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக நாம் அனைவருமே உடல் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்கிறோம். ஆனால் நம் மூளையின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள மறந்துவிடுகிறோம்.

These Bad Habits Are Damaging The Brain From Inside In Tamil

இப்படி மூளையின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளாமல் சற்று கவனக்குறைவுடன் இருந்தால், பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதுவும் இன்று நாம் மேற்கொள்ளும் சில பழக்கவழக்கங்கள் மூளைக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இப்பழக்கம் அப்படியே நீடித்தால், படிப்படியாக நமது மூளை வலுவிழந்து வேலை செய்வதை நிறுத்திவிடும். இப்போது எந்த பழக்கங்கள் மூளையை உள்ளே இருந்து சேதப்படுத்துகிறது என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போதுமான தூக்கத்தைப் பெறாமல் இருப்பது

போதுமான தூக்கத்தைப் பெறாமல் இருப்பது

நீங்கள் போதுமான அளவு தூக்கத்தைப் பெறாமல் இருந்தால், அது மூளையை மோசமாக பாதிக்கும். சரியான அளவு தூங்காமல் இருக்கும் போது, மூளை செல்களின் வளர்ச்சி நின்றுவிடும். அதே வேளையில், வாயை மூடிக் கொண்டு தூங்கினால், அது மூளைக்கு தீங்கு விளைவிக்கும். எப்படியெனில், இந்நிலையில் உடலுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காது.

அதிக மன அழுத்தம் கொள்வது

அதிக மன அழுத்தம் கொள்வது

தற்போது பெரும்பாலான மக்கள் மன அழுத்தத்துடன் வாழ்கிறது. இப்படி மன அழுத்தத்துடனேயே வாழ ஆரம்பித்தால், அது மூளையில் தான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இது நீடிக்கும் போது நினைவாற்றல் பலவீனமாகும். எனவே நீங்கள அதிக டென்சனாக இருந்தால் கவனமாக இருங்கள். மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டுமானால், உங்களை நீங்கள் பிஸியாக வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக நல்ல இசையை கேளுங்கள் மற்றும் யோகாவை தினமும் செய்யுங்கள்.

அதிக கோபம் கொள்வது

அதிக கோபம் கொள்வது

உங்களுக்கு சட்டென்று கோபம் வருமானால் அல்லது சின்ன விஷயங்களுக்கு எல்லாம் அடிக்கடி கோபம் கொண்டால், இது மூளையின் தான் எதிர்மறை விளைவை ஏற்படுத்தும். எப்படியெனில், கோபம் கொள்ளும் போது மூளைக்கு செல்லும் இரத்த நாளங்களில் அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இது மூளையின் செயல்திறனை பாதிக்கிறது. எனவே கோபம் கொள்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

பரபரப்பான வாழ்க்கை முறை

பரபரப்பான வாழ்க்கை முறை

தற்போதைய பரபரப்பான வாழ்க்கை முறையில், மக்கள் எவ்விதமான உடற்பயிற்சியையும் அன்றாடம் செய்வதில்லை. இது உடலை மட்டும் பாதிப்பதோடு மட்டுமின்றி, மனதையும் தான் பாதிக்கிறது. மூளை நன்கு சுறுசுறுப்பாக செயல்பட வேண்டுமானால், நல்ல சுறுசுறுப்பான வாழ்க்கை முறை மிகவும் அவசியம்.

காலை உணவை தவிர்ப்பது

காலை உணவை தவிர்ப்பது

வேலைக்கு செல்லும் போது அல்லது பள்ளி, கல்லூரிக்கு செல்லும் போது, நேரமாகிவிட்டது என்று பலரும் காலை உணவை தவிர்க்கிறார்கள். இப்படி காலை உணவைத் தவிர்ப்பது, பிற்காலத்தில் உடலில் மட்டுமின்றி, மூளையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எப்படியெனில், காலை உணவை தவிர்க்கும் போது, மூளைக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல், மூளையில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இதனால் நாள் முழுவதும் மிகுந்த களைப்பை உணரக்கூடும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள பழக்கங்கள் உங்களுக்கு இருந்தால், உடனே அப்பழக்கங்களைக் கைவிடுங்கள். இல்லாவிட்டால், மூளை தான் அதிகம் சேதமடையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

These Bad Habits Are Damaging The Brain From Inside In Tamil

In this article, we will tell you which habits have a bad effect on your mind. Read on to know more...
Story first published: Friday, July 1, 2022, 16:53 [IST]
Desktop Bottom Promotion