For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்ற ஆயுர்வேதப் படி நீங்க இத பண்ணா போதுமாம்!

நீங்கள் உண்ணும் உணவு செரிக்கப்படுவதையும், பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறாமல் இருப்பதையும் உறுதி செய்வதற்கான ஒரு முக்கிய வழி, உணவுக்கு இடையில் ஆரோக்கியமான இடைவெளியை கொண்டிருக்க வேண்டும்.

|

நீங்கள் சாப்பிடும் உணவுகள் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கவும் உடல்நல சிக்கல் ஏற்படுவதற்கும் உங்கள் உணவு முக்கிய காரணமாக இருக்கும். குப்பை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது முதல் சர்க்கரை கலந்த கலவைகள் மற்றும் மது அருந்துவது வரை, இந்த அன்றாட பழக்கவழக்கங்கள் அனைத்தும் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அமைதியாக பாதிக்கலாம். இந்த நச்சுகளின் படிவுகள் உங்கள் உடலிலுள்ள முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை படிப்படியாக பாதிக்கும். உணவு, சுற்றுச்சூழல் மற்றும் தோல் போன்ற நச்சுகளை உடலில் குவிப்பதற்கு பல வழிகள் உள்ளன.

These Ayurvedic detox tips can help in removing toxins in tamil

இருப்பினும், நச்சுகளை அகற்றுவதற்கான வழிகள் குறைவாகவே உள்ளன. எனவே உடல் நச்சுகளை அகற்றவும் ஊட்டச்சத்து இழப்பை சரி செய்யவும் எளிய வழிகளைப் பின்பற்றுவது அவசியம். ஆயுர்வேதத்தின்படி உடலிலுள்ள நச்சுக்களை நீக்கவும் அகற்றவும் உதவும் சில எளிய வழிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காய்கறிகள் மற்றும் மூலிகைகள்

காய்கறிகள் மற்றும் மூலிகைகள்

உங்கள் உடலிலுள்ள நச்சுகளை அகற்றுவதற்கான சிறந்த வழி திரவங்களுடன் நாளைத் தொடங்குவதாகும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், மினரல்கள் அடங்கிய வீட்டில் தயாரிக்கப்பட்ட ஜூஸ் அல்லது டிரிங்க் அல்லது டிடாக்ஸ் தண்ணீருடன் உங்கள் நாளைத் தொடங்குவது உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும், நச்சுகளை வெளியேற்றவும் உதவும் எளிதான வழியாகும்.

என்ன சாப்பிட வேண்டும் அல்லது குடிக்க வேண்டும்?

என்ன சாப்பிட வேண்டும் அல்லது குடிக்க வேண்டும்?

நச்சுத்தன்மையை நீக்க என்ன சாப்பிடுவது அல்லது குடிப்பது என்பது பற்றி குழப்பமாக இருக்கலாம். ஆனால் ஆயுர்வேத நிபுணர்களின் கூற்றுப்படி, நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரோபயாடிக்குகள் ஆகியவற்றின் சரியான சமநிலையைக் கொண்ட உணவை சாப்பிடுவது நச்சுகளை அகற்றுவதற்கான சிறந்த வழியாகும். சர்க்கரை மற்றும் அதிகப்படியான உப்பு அல்லது சேர்க்கைகள் கொண்ட உணவுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இது இயற்கையான நச்சுத்தன்மையின் வாய்ப்புகளை அழிக்கக்கூடும்.

ஜீரணிக்க அதிக நேரம்

ஜீரணிக்க அதிக நேரம்

நீங்கள் உண்ணும் உணவு செரிக்கப்படுவதையும், பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறாமல் இருப்பதையும் உறுதி செய்வதற்கான ஒரு முக்கிய வழி, உணவுக்கு இடையில் ஆரோக்கியமான இடைவெளியை கொண்டிருக்க வேண்டும். உடலுக்கு ஜீரணிக்கத் தேவையான நேரத்தைக் கொடுக்க, இரவு 7 மணிக்குள் இரவு உணவை உண்ண அறிவுறுத்தப்படுகிறது.

புரோபயாடிக்குகளை சேர்க்கவும்

புரோபயாடிக்குகளை சேர்க்கவும்

மதிய உணவு அல்லது காலை உணவின் போது புரோபயாடிக்குகளைச் சேர்ப்பது அமில எதிர்வினைகளை அமைதிப்படுத்த உதவுகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தையும் குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. தயிர், மோர் அல்லது கொம்புச்சா போன்ற புளித்த உணவில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் செரிமானத்திற்கு நல்லது. மேலும், இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனால் ஆரோக்கியமான எடையை நீங்கள் நிர்வகிக்கலாம்.

உணவு மற்றும் மசாலா

உணவு மற்றும் மசாலா

பெருஞ்சீரகம், கேரம் விதைகள், இலவங்கப்பட்டை போன்ற மசாலாப் பொருட்களை உங்கள் உணவில் சிறிய அளவில் சேர்த்துக் கொள்வது சிறந்த நச்சுத்தன்மைக்கு உதவும். அதேபோல, சுரைக்காய், வெள்ளரி, எலுமிச்சை போன்ற உணவுகளும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

These Ayurvedic detox tips can help in removing toxins in tamil

Here are we are talking about These Ayurvedic detox tips can help in removing toxins in tamil.
Story first published: Friday, August 19, 2022, 12:33 [IST]
Desktop Bottom Promotion