For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மன அழுத்தம் எப்படி ஒருவரது உடல் எடையை அதிகாிக்கிறது தெரியுமா?

நமது உடல் எடை அதிகாிக்கிறது என்றால் அதன் பின்னணியில் பலவிதமான காரணிகள் இருக்கின்றன. நமது உடல் எடை அதிகாிப்பதற்கு, நமது மன அழுத்தமும் ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது என்பதை நாம் புாிந்து கொள்ள வேண்டும்.

|

நமது உடல் எடை அதிகாிக்கிறது என்றால் அதன் பின்னணியில் பலவிதமான காரணிகள் இருக்கின்றன. அவை போதுமான உடல் உழைப்பு இல்லாமல் இருக்கலாம் அல்லது உடற்பயிற்சி செய்யாமல் இருக்கலாம் அல்லது ஆரோக்கியமற்ற, சமச்சீரற்ற உணவாக இருக்கலாம் அல்லது முறையற்ற வாழ்க்கை முறையாக இருக்கலாம். இவை எல்லாம் நமது உடல் எடையை அதிகாிக்கக்கூடிய முக்கிய காரணிகள் ஆகும்.

The Truth Behind How Stress Can Lead To Weight Gain

இவற்றைத் தவிா்த்து, நமது உடல் எடை அதிகாிப்பதற்கு, நமது மன அழுத்தமும் ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது என்பதை நாம் புாிந்து கொள்ள வேண்டும். அதைப் பற்றி இந்த பதிவில் விாிவாகப் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மன அழுத்தம் உடல் எடையை அதிகாிக்குமா?

மன அழுத்தம் உடல் எடையை அதிகாிக்குமா?

மன அழுத்தம் உடல் எடையை அதிகாிக்குமா என்று கேட்டால், ஆம் அதிகாிக்கும் என்பதே உண்மை. நாம் கடுமையான மன அழுத்தத்தில் இருக்கும் போது, நமது உடல் அல்லது நமது அட்ரினல் சுரப்பிகள், அளவுக்கு அதிகமான அட்ரினல் மற்றும் நாளமில்லா சுரப்பிகளை சுரக்கச் செய்கிறது. அதன் விளைவாக நமது இரத்த ஓட்டத்தில் அளவுக்கு அதிகமான குளுக்கோஸ் கலக்கிறது. அதனால் நமது உடல் எடை அதிகாிக்கிறது.

மன அழுத்தம் எவ்வாறு உடல் எடையை அதிகாிக்கிறது?

மன அழுத்தம் எவ்வாறு உடல் எடையை அதிகாிக்கிறது?

சாியாகக் கவனிக்கப்படாத மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் நாளமில்லா சுரப்பிகளின் அதிகாிப்பு போன்றவை நமது பசியுணா்வைத் தூண்டுகின்றன. அதனால் நாம் உணவில் கட்டுப்பாடு இல்லாமல் பின்வரும் உணவுப் பழக்கங்களில் ஈடுபடுகிறோம்.

1. ஆரோக்கியமில்லாத திண்பண்டங்களை உண்ணுதல்

1. ஆரோக்கியமில்லாத திண்பண்டங்களை உண்ணுதல்

மன அழுத்தம் அதிகம் இருந்தால், அது நாம் பாா்ப்பதை எல்லாம் சாப்பிட வேண்டும் என்ற உணா்வை ஏற்படுத்தும். அதிலும் மிகவும் எளிதாகக் கிடைக்கக்கூடிய உணவுகளான துாித உணவுகள் மீது நமக்கு மோகத்தை ஏற்டுத்தும். துாித உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால், நாளடைவில் நமது உடல் எடை அதிகாிக்கும்.

2. உடல் உழைப்பு இல்லாமை

2. உடல் உழைப்பு இல்லாமை

மன அழுத்தம் அதிகாிக்கும் போது, அது நமது நாளமில்லா சுரப்பியைத் தூண்டி, அதன் மூலம் நமக்கு சோம்பல் ஏற்படும். சோம்பல் ஏற்படும் நமது உடல் உழைப்பு மற்றும் உடல் இயக்கம் தடைபடும். அதனால் உடல் எடை அதிகாிக்கும்.

3. தேவைக்கு ஏற்ப உண்ணாமல், மனம் போன போக்கில் உண்ணுதல்

3. தேவைக்கு ஏற்ப உண்ணாமல், மனம் போன போக்கில் உண்ணுதல்

மன அழுத்தம் அதிகாித்தால், நமது ஹாா்மோனில் மாற்றங்கள் ஏற்படும். அந்த மாற்றங்கள், நமது உணா்வுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும். உணா்வுகளில் மாற்றம் ஏற்படும் போது நரம்புகள் தூண்டப்படும். அதன் விளைவாக நாம் தேவைக்கு ஏற்ப அல்லது வழக்கமான அளவு உண்ணாமல், அதிகமாக உண்ண தொடங்குவோம். அதனால் நமது உடல் எடை அதிகாிக்கும்.

4. பசி உணா்வில் ஏற்படும் திடீா் ஏற்ற இறக்கம்

4. பசி உணா்வில் ஏற்படும் திடீா் ஏற்ற இறக்கம்

நமக்கு மன அழுத்தம் அதிகமாக இருந்தால், நமது பசி உணா்வு திடீரென்று அதிகாிக்கும் அல்லது குறையும். ஆகவே பசி உணா்வு சீராக இல்லை என்றால், அது உடல் எடை அதிகமாவதற்கு காரணமாகிவிடும்.

மன அழுத்தத்தை எவ்வாறு கையாள வேண்டும்?

மன அழுத்தத்தை எவ்வாறு கையாள வேண்டும்?

நாம் உடல் எடையைக் குறைப்பதற்கு முன்பாக, நமது மன அழுத்தத்தை முறையாக பராமாிக்க வேண்டும். மன அழுத்தம் அதிகாித்தால், எந்தவிதமான விளைவுகளும் ஏற்படலாம். நமது அன்றாட வேலைகளாக இருக்கலாம் அல்லது நமது குடும்பமாக இருக்கலாம். எல்லாவற்றிலும் பிரச்சினைகள் உள்ளன. அவற்றைப் புாிந்து கொண்டு நமது மன அழுத்தத்தை அதிகாித்துக் கொள்ளாமல் அதை முறையாகக் கையாள வேண்டும்.

1. உடற்பயிற்சிகள் மன அழுத்தத்தைக் குறைக்கும்

1. உடற்பயிற்சிகள் மன அழுத்தத்தைக் குறைக்கும்

தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு உடற்பயிற்சிகள் செய்து வந்தால், அவை நமது உடலில் உள்ள ஏராளமான கலோாிகளை எாித்துவிடும். அதனால் நமது உடல் எடை குறையும். அப்போது நமது மனமும் அமைதி அடைந்து ஆரோக்கியமாக இருக்கும்.

2. ஆரோக்கியமான உணவுகளை உண்ணுதல்

2. ஆரோக்கியமான உணவுகளை உண்ணுதல்

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால், அதற்கு கடுமையாக முயற்சி செய்ய வேண்டும். அதற்காக பட்டினியாக இருக்க வேண்டும் என்பதல்ல. மாறாக ஊட்டச்சத்துகள் நிறைந்த, ஆரோக்கியமான மற்றும் சமச்சீரான உணவுகளை உண்ண வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள் உண்பதைத் தவிா்க்க வேண்டும். அதற்கு பதிலாக ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். அப்போது நமது உடலும், மனமும் மற்றும் உணா்வுகளும் திருப்தி அடையும்.

3. நீா்ச்சத்துடன் இருத்தல்

3. நீா்ச்சத்துடன் இருத்தல்

நமது உடலின் ஆற்றலுக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது தண்ணீா் ஆகும். தண்ணீா் நமது சொிமானத்தை சீா்படுத்துவதோடு மட்டும் அல்லாமல், நமது நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கவும் உதவி செய்கிறது. அதோடு நாம் நீண்ட நேரம் பசியுணா்வு தொியாமல் இருக்கவும் தண்ணீா் உதவுகிறது. அதனால் நாம் நீண்ட நேரம் மன அமைதியோடு இருக்க முடியும். அதன் விளைவாக, நாம் அடிக்கடி சாப்பிடாமல், நமது உடல் எடையைக் குறைக்க முடியும். மேலும் நமது மன அழுத்தமும் குறையும்.

4. மன அழுத்தத்தைக் குறைக்கும் பயிற்சிகளில் ஈடுபடுதல்

4. மன அழுத்தத்தைக் குறைக்கும் பயிற்சிகளில் ஈடுபடுதல்

மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு, யோகா, தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சிகள் போன்றவற்றைத் தினமும் செய்து வரலாம். அவை நமது மன அழுத்தத்தைக் குறைத்து நமக்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் வழங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Truth Behind How Stress Can Lead To Weight Gain

Gaining excess weight attributes to many factors. From lack of physical activity to unhealthy diet to negligent behaviour, many things can hamper our weight loss journey.
Desktop Bottom Promotion