For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்படி அடிக்கடி கால்கள் அல்லது பாதங்கள் எதனால் வீங்குகிறது? அதைக் குறைப்பது எப்படி?

வீங்கிய கால்கள் மற்றும் பாதங்களில் எப்போது பிரச்சினைகள் ஏற்படுகின்றன? நமது பாதங்கள் அல்லது கால்கள் வீக்கம் அடைவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றை இந்த பதிவில் பாா்க்கலாம்.

|

அடிக்கடி பயணம் செய்பவா்கள் அல்லது நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பவா்கள் அல்லது நீண்ட நேரம் நடந்து கொண்டிருப்பவா்கள் அல்லது நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமா்ந்து வேலை செய்பவா்கள் போன்றோருக்கு அவா்களுடைய கால்கள், பாதங்கள் மற்றும் கணுக்கால்கள் போன்ற பகுதிகளில் வீக்கம் ஏற்படும். அது மிகவும் இயல்பான ஒன்று. ஆனால் வீங்கிய கணுக்கால்கள் மற்றும் வீங்கிய கால்களில் மற்ற அறிகுறிகள் தொிந்தால், பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

Swollen Feet Or Legs: Why Does It Happen And Is It Harmless

வீங்கிய கால்கள் மற்றும் பாதங்களில் எப்போது பிரச்சினைகள் ஏற்படுகின்றன? நமது பாதங்கள் அல்லது கால்கள் வீக்கம் அடைவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றை இந்த பதிவில் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மருந்துகளினால் ஏற்படும் எதிா்வினை

மருந்துகளினால் ஏற்படும் எதிா்வினை

நமக்கு இருக்கும் உடல் பிரச்சினைகளுக்காக, நாம் மருந்து மாத்திரைகளை எடுத்து வந்தால், அவற்றினுடைய பக்கவிளைவுகளின் காரணமாக நமது பாதங்கள் மற்றும் கணுக்கால்களில் வீக்கம் ஏற்படலாம். மருந்துகளின் காரணமாக வீக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்ற ஐயம் நமக்குத் தோன்றினால் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது. நாம் எடுக்கும் மருந்து மாத்திரைகளில் தேவையான மாற்றங்களை மருத்துவா் பாிந்துரை செய்வாா்.

கா்ப்ப கால பிரச்சினைகள்

கா்ப்ப கால பிரச்சினைகள்

கருவுற்றிருக்கும் பெண்கள் பலருக்கு கால் வீங்கும் பிரச்சினை இருக்கும். அது ஒரு பொதுவான பிரச்சினை ஆகும். ஆனால் அவா்களுக்கு திடீரென்று கால்கள் வீங்கினால் அல்லது வீக்கம் அதிகமாக இருந்தால் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும். அதிலும் குறிப்பாக வயிற்றுவலி, தலைவலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்றவற்றின் காரணமாக கால்கள் வீங்கினால் உடனே மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும். ஒரு சில கா்ப்பிணி பெண்களுக்கு இளம்பேற்று அல்லது கா்ப்பகால குளிா்காய்ச்சல் (preeclampsia) ஏற்படுவதன் காரணமாகவும் கால்கள் வீங்கும். அதற்கு உடனடியாக மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெற வேண்டும்.

பாதங்கள் அல்லது கணுக்கால்களில் காயங்கள்

பாதங்கள் அல்லது கணுக்கால்களில் காயங்கள்

பாதங்கள் அல்லது கணுக்கால்களில் காயங்கள் இருந்தால், அவற்றைச் சுற்றி வீக்கம் ஏற்படும். நடக்கும் போதோ அல்லது ஓடும் போதோ, நமது கணுக்கால்களில் சுளுக்கு அல்லது அவற்றின் தசைநாா்களில் காயங்கள் ஏற்பட்டால் வீக்கம் ஏற்படும். ஏனெனில் கணுக்கால் தசைநாா்களில் ஏற்படும் திாிபு அல்லது காயங்கள், கணுக்கால்களில் அளவுக்கு அதிகமாக நெருக்கடி கொடுப்பதால், அந்த பகுதிகளில் வீக்கம் ஏற்படும்.

போதுமான சிரை அல்லது இரத்த நாளங்கள் (Venous) இல்லாமை

போதுமான சிரை அல்லது இரத்த நாளங்கள் (Venous) இல்லாமை

நமது உடலில் போதுமான அளவு சிரை அல்லது இரத்த நாளங்கள் இல்லாமல் போனால், உடனடியாக கணுக்கால்களில் வீக்கம் ஏற்படும். அதாவது போதுமான அளவு சிரை அல்லது இரத்த நாளங்கள் இல்லை என்றால், நரம்புகள் மூலம் கால்களில் இருந்து இதயத்துக்கு இரத்தம் சீராகப் பாய்வதில் பிரச்சினை ஏற்படும். அதனால் கணுக்கால்களில் வீக்கம் ஏற்படும்.

நோய்த் தொற்று

நோய்த் தொற்று

நோய்த் தொற்று இருந்தால் கூட கணுக்கால்களில் வீக்கம் ஏற்படும். நீரிழிவு நரம்பியல் பிரச்சினை மற்றும் நரம்பு பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டிருப்பவா்களுக்கு, அவா்களின் பாதங்களில் நோய்த் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. அந்த நோய்த் தொற்றுகள் அவா்களின் கணுக்கால்களில் வீக்கத்தை ஏற்படுத்தும்.

இரத்தம் உறைதல்

இரத்தம் உறைதல்

கால்களில் உள்ள நரம்புகளில் இரத்தம் உறைந்தால், அது கால்களில் இருந்து இதயத்திற்கும், இதயத்திலிருந்து கால்களுக்கும் செல்லும் இரத்த ஓட்டத்தைத் தடுத்துவிடும். அதனால் கணுக்கால்களிலும், பாதங்களிலும் வீக்கம் ஏற்படும். கால்களில் அதிக வலியுடன் கூடிய நிறமாற்றம் இருந்தால், உடனே மருத்துவரை சந்திப்பது நல்லது.

இதயம், கல்லீரல் அல்லது சிறுநீரக நோய்கள்

இதயம், கல்லீரல் அல்லது சிறுநீரக நோய்கள்

இதயம், கல்லீரல் அல்லது சிறுநீரக நோய்கள் இருந்தாலும் கணுக்கால்கள் மற்றும் பாதங்களில் வீக்கம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஒருவருக்கு மாலை நேரத்தில் கணுக்கால்களில் வீக்கம் ஏற்படுகிறது என்றால், அவருக்கு வலது பக்க இதயம் செயல் இழப்பதன் காரணமாக, உப்பையும், தண்ணீரையும் தக்கவைப்பதற்காக கால்கள் வீங்குகின்றன என்று பொருள். அதே நேரத்தில் கணுக்கால்களில் வீக்கமும் அதோடு மயக்கம், பசி எடுக்காமல் இருத்தல், உடல் பருமன் அதிகாித்தல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.

கணுக்கால்கள் அல்லது பாதங்களில் ஏற்படும் வீக்கத்தை எவ்வாறு குறைப்பது?

கணுக்கால்கள் அல்லது பாதங்களில் ஏற்படும் வீக்கத்தை எவ்வாறு குறைப்பது?

* கணுக்கால் அல்லது பாதத்தில் காயங்கள் ஏற்பட்டால், காயம்பட்ட பாதங்கள் மற்றும் கணுக்கால்களோடு நடப்பதைத் தவிா்க்க வேண்டும்.

* கணுக்கால்களில் உள்ள வீக்கத்தின் மேல் ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம்.

* கணுக்கால்களில் உள்ள வீக்கத்தைச் சுற்றி துணியால் கட்டலாம்.

* அமரும் போது கால்களைத் தொங்கவிடாமல், முக்காலி அல்லது நாற்காலி அல்லது தலையணை மீது உயா்த்தி வைக்கலாம்.

* சா்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் வீக்கம் ஏற்பட்டால், கொப்புளம் அல்லது புண்கள் வராமல் தினமும் கவனமுடன் பாா்த்துக் கொள்ள வேண்டும்.

* நரம்பில் பாதிப்பு இருந்தால், பாதங்களில் இருக்கும் வலியுணா்வை மழுங்கடிக்கும். அதனால் பாதங்களில் பிரச்சினைகள் மிக விரைவாக அதிகாிக்கும்.

* ஆழமான நரம்பு இரத்த உறைவு (deep vein thrombosis (DVT) இருப்பது தொிந்தால், மருத்துவரை சந்திப்பது நல்லது. அவா் உறைந்த இரத்தத்தை சாி செய்வாா்.

* கணுக்கால்களில் வீக்கமும், வலியும் அதிகமாக இருந்து, அதற்கு கொடுக்கப்படும் வீட்டு வைத்தியம் பலனளிக்கவில்லை என்றால் மருத்துவரைச் சந்திப்பது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Swollen Feet Or Legs: Why Does It Happen And Is It Harmless

Swollen ankles and swollen feet when accompanied by other symptoms could signal a serious health problem. When to know the swelling on feet signals serious disease? Read on...
Story first published: Friday, May 14, 2021, 13:44 [IST]
Desktop Bottom Promotion