For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மன அழுத்தத்தால் தற்கொலை செய்த நடிகர் சுஷாந்த் சிங்: இந்த மன அழுத்தத்தை சமாளிக்கும் எளிய வழிகள்!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணத்திற்கு மனச்சோர்வு ஒரு முக்கிய காரணம் என்றும் நம்பப்படுகிறது. சுஷாந்த் சிங் 2020 ஜூன் 14 அன்று மும்பையின் பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

|

தற்கொலை என்பது இளைஞர்களின் மரணத்திற்கு இரண்டாவது முக்கிய காரணியாக மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மன அழுத்தம்/மனச்சோர்வு தற்கொலை எண்ணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணத்திற்கு மனச்சோர்வு ஒரு முக்கிய காரணம் என்றும் நம்பப்படுகிறது. நடிகர் சுஷாந்த் சிங் 2020 ஜூன் 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மும்பையின் பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பிரபல நடிகரின் இறந்த செய்தி ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதுடன், மனச்சோர்வு/மன அழுத்தம் மற்றும் அது தொடர்பான நோய்கள் பற்றிய பிரச்சனையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

Sushant Singh Rajput Was Under Depression: Way To Deal With This Common Mental Disorder

உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, உலகெங்கிலும் உள்ள அனைத்து வயதினரில் சுமார் 264 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மனச்சோர்வு என்பது மனநிலை, எண்ணங்கள், உடல் ஆரோக்கியம் மற்றும் அன்றாட வாழ்க்கை செயல்பாட்டை பாதிக்கும் ஒரு மனநல கோளாறு ஆகும். மனச்சோர்வு என்பது தற்கொலைக்கு வழிவகுக்கக்கூடியது. வாழ்வின் சில கஷ்டமான நேரங்களில் நாம் சோர்வாக உணர்வோம். ஆனால் வழக்கமான அடிப்படையில் ஒருவர் நம்பிக்கையற்றவராக உணர்ந்தால், அவர் மனச்சோர்வில் இருக்கிறார் என்று அர்த்தம்.

MOST READ: 2021 கேது பெயர்ச்சியால் உங்க ராசிக்கு எப்படி இருக்கப் போகுதுன்னு தெரிஞ்சுக்கணுமா?

மனச்சோர்விற்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது மோசமடைந்து எடை அதிகரிப்பு அல்லது இழப்பு, உறவு பிரச்சனைகள், சமூக தனிமைப்படுத்தல், தற்கொலை எண்ணங்கள் மற்றும் தன்னைத் தானே காயப்படுத்துதல் போன்ற கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். மருத்துவ சிகிச்சைகள் மற்றும் வாழ்க்கை முறை சிகிச்சைகள் ஆகிய இரண்டின் மூலமும் மனச்சோர்வின் அறிகுறிகளை நிர்வகிக்கவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவும். கீழே மனச்சோர்வை சமாளிப்பதற்கான சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இணைந்திருக்கவும்

இணைந்திருக்கவும்

நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் சமூக இணைப்புகள் முக்கிய பங்காற்றுகிறது. சமூகத்துடன் ஒன்றிணைந்து இருப்பது மனநிலையை மேம்படுத்துவதுடன், பாதுகாப்பு மற்றும் ஆதரவு உணர்வைக் கொடுக்கும். எனவே மக்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் மற்றும் சமூக நடவடிக்கைகளில் பங்கு கொள்ளுங்கள். முக்கியமாக தனிமையாக இருப்பதை உணரும் போது, உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பேசுங்கள்.

சிறிது உடற்பயிற்சி செய்யவும்

சிறிது உடற்பயிற்சி செய்யவும்

உடற்பயிற்சி உடலில் எண்டோர்பின்களின் உற்பத்தியை அதிகரிக்கும். இது மனநிலையை மேம்படுத்தும், பதட்டத்தைக் குறைக்கவும் உதவும் ஹார்மோன்களாகும். உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது ஹிப்போகாம்பஸில் உள்ள நரம்பு செல்கள் வளர்ச்சியை ஊக்குவித்து, நரம்பு செல் இணைப்புகளை மேம்படுத்தி, மனச்சோர்வை போக்க உதவுகிறது. எனவே தான் வாரத்தில் 3 முதல் 5 நாட்கள் 30 நிமிட உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பயத்தை வெல்ல முயற்சிக்கவும்

பயத்தை வெல்ல முயற்சிக்கவும்

மனச்சோர்வு ஒருவரை தனிப்படுத்த செய்யும் மற்றும் செய்ய கடினமாக இருக்கும் விஷயங்களைத் தவிர்க்க வைக்கும். அதோடு வெளியே செல்வது, வாகனம் ஓட்டுவது அல்லது பயணம் மேற்கொள்வது குறித்த விஷயங்களிலும் உங்களின் நம்பிக்கை இழக்க வைக்கும். ஆனால் இதற்கு தவிர்ப்பது ஒரு தீர்வல்ல. உங்களின் பயத்தை போக்க சூழ்நிலையை எதிர்கொள்ளுங்கள். அது தானாக மனச்சோர்வில் இருந்து வெளியேற உதவும்.

மதுவைத் தவிர்க்கவும்

மதுவைத் தவிர்க்கவும்

மது அருந்துவது மனச்சோர்வை மோசமாக்கும். ஆல்கஹால் மூளையில் ஒரு மயக்க மருந்தாக செயல்படுகிறது. ஒரு டம்ளர் ஒயின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், நிம்மதியாகவும் அமைதியாகவும் உணர உதவலாம். ஆனால் உண்மையில் ஆல்கஹால் உங்களை அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும். எனவே மது பழக்கத்தை மேற்கொள்ளக்கூடாது.

ஆரோக்கியமாக சாப்பிடவும்

ஆரோக்கியமாக சாப்பிடவும்

மன அழுத்தத்தில் இருக்கும் போது, ஒருவர் பசியின்மை அல்லது அளவுக்கு அதிகமான பசியை உணரக்கூடும். ஆய்வாளர்களின் கூற்றுப்படி, பழங்கள் காய்கறிகள், மீன் மற்றும் முழு தானியங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை உண்பது மன அழுத்தத்தின் அறிகுறிகளை குறைக்க உதவும்.

செல்லப்பிராணியை வளர்க்கவும்

செல்லப்பிராணியை வளர்க்கவும்

மன அழுத்தத்தில் இருக்கும் மக்கள், ஒரு நாய் அல்லது பூனையை செல்லப் பிராணியாக வளர்ப்பதால் நிறைய நன்மையைப் பெறலாம். செல்லப்பிராணிகள் ஒரு நல்ல தோழமையை வழங்கும் மற்றும் தனிமை உணர்வைப் போக்கும். வீட்டில் நாயை செல்லப் பிராணியாக வளர்த்தால், அதை வெளியே வாக்கிங் அழைத்து செல்ல அதிக வாய்ப்புள்ளது. இது ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்ள வைத்து, மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sushant Singh Rajput Was Under Depression: Way To Deal With This Common Mental Disorder

Sushant Singh Rajput was found dead in his room at his residence in Mumbai's Bandra on 2020 June 14. According to reports, he was struggling with depression which led him to end his own life.
Story first published: Monday, June 14, 2021, 13:25 [IST]
Desktop Bottom Promotion