Just In
- 5 hrs ago
ஆந்திரா ஸ்பெஷல் புனுகுலு
- 5 hrs ago
உங்க குழந்தையோட ராசிப்படி... நீங்க அவர்கள இப்படி வளர்த்தாதான் பெரிய ஆள வருவாங்களாம் தெரியுமா?
- 6 hrs ago
உலகம் முழுவதும் பெரும்பாலான ஆண்களுக்கு மரணம் ஏற்பட இந்த 5 நோய்கள்தான் காரணமாக உள்ளதாம்... ஜாக்கிரதை!
- 6 hrs ago
இந்த உணவுகளை சாப்பிட்டா முடி அதிகமா கொட்டி சீக்கிரம் வழுக்கை வந்துடுமாம்..
Don't Miss
- News
சோகத்தின் உச்சம்.. ஆந்திராவில் அறுந்து விழுந்த மின்கம்பி.. ஆட்டோவில் சென்ற 8 பேர் உடல் கருகி சாவு
- Movies
நடிகர் சிம்புவின் 'பத்துதல' ரிலீஸ் எப்போது?.. சுடசுட வெளியான தகவல்!
- Sports
Breaking - ரோகித் சர்மா விலகல்.. பும்ரா, ரிஷப் பண்ட்க்கு புதிய பதவி.. பிசிசிஐ அதிரடி முடிவு
- Finance
கணவனை வாடகைக்கு விட்ட மனைவி.. அடபாவிகளா.. இப்படி கூடவா பண்ணுவாங்க..?!
- Automobiles
சொன்னபடியே 2வது காரையும் விற்பனைக்கு அறிமுகப்படுத்திட்டாங்க... இதுவும் மேட்-இன்-சென்னை தயாரிப்புதாங்க!
- Technology
Lenovo Tab P11 Plus விரைவில் அறிமுகம்.. விலை இதுவாக கூட இருக்கலாமா? அடேங்கப்பா!
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
சுயஇன்பத்தால் பெண்களுக்கு கிடைக்கும் புதிய ஆச்சரியமான நன்மைகள் என்ன தெரியுமா? ஆண்களுக்கும் நன்மைகள் இருக்கு!
ஒருவரின் பிறப்புறுப்புகளைத் தூண்டும் செயல், அல்லது வெறுமனே சுயஇன்பம், ஒரு ஆரோக்கியமான பழக்கமாகும், ஆனால் இது சமூகரீதியாக மிகவும் தவறான ஒன்றாக கருதப்படுகிறது, குறிப்பாக பெண்களுக்கான சுயஇன்பம் என்று வரும்போது அது மிகவும் வெறுக்கக்கூடிய மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாததாக கருதப்படுகிறது.
ஒருவரின் கை அல்லது செக்ஸ் பொம்மைகளைப் பயன்படுத்தி ஒருவர் சுயஇன்பம் செய்யலாம். இந்த செயல் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, ஒரு நபரின் மன நிலைக்கும் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. உங்கள் உறவின் நிலை, வயது, பாலினம் அல்லது பாலின அடையாளம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், பல ஆச்சரியமான ஆரோக்கிய நன்மைகளுடன் உங்கள் உடலைப் பற்றி மேலும் அறிய இது ஒரு ஆரோக்கியமான வழியாகும். சுயஇன்பத்தின் பரவலாக அறியப்பட்ட சில நன்மைகளை இந்த பதிவில் பார்க்கலாம், பெரும்பாலும் இவை உங்களுக்குத் தெரியாததாக இருக்க வாய்ப்புள்ளது.

உடல்நலம்
சுயஇன்பம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஒரு நபரின் உடல் ஆரோக்கியம் அவர்களின் மன ஆரோக்கியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் சுயஇன்பம் இரண்டையும் பராமரிப்பதை உறுதி செய்கிறது.

உடலைப் பற்றிய நேர்மறை எண்ணம்
உங்கள் உடலுடன் நீங்கள் தொடர்ந்து ஈடுபடும்போது, அது ஒரு குறிப்பிட்ட அளவிலான வசதியை உருவாக்குகிறது. குறிப்பாக பெண்களுக்கு சுயஇன்பத்தின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று உடல் நேர்மறை. ஒருவர் சுத்த இன்ப உணர்வை உடலுடன் தொடர்புபடுத்தும்போது, அது ஆரோக்கியமான உடல் உருவத்தை உருவாக்கி, சுய-அன்பின் உணர்வுகளை ஊக்குவிக்கிறது.

உச்சக்கட்டம்
சுயஇன்பம் பெண்களுக்கு பல நன்மைகளை அளிப்பதாக அறியப்படுகிறது. மாதவிடாய் பிடிப்புகளை நிவர்த்தி செய்வதோடு, பிரசவ செயல்முறையை விரைவுபடுத்தவும் ஆர்கஸம் உதவுகிறது. உச்சியின் போது கருப்பை சுருங்கி விரைவாக ஓய்வெடுக்கிறது. இது ஆக்ஸிடாஸின் சுரக்க வழிவகுக்கிறது, இது உடலில் மகிழ்ச்சியையும் தளர்வையும் ஊக்குவிக்கும் காதல் ஹார்மோன் ஆகும்.

பாதுகாப்பான உடலுறவு
இது கேட்பதற்கு வினோதமாக இருக்கலாம். ஆனால் சுயஇன்பம் என்பது பாதுகாப்பான உடலுறவின் ஒரு வடிவம். நீங்கள் உங்களுடன் மட்டுமே ஈடுபடும் போது, பாலியல்ரீதியாக பரவும் நோய் அல்லது எந்தவிதமான தொற்று நோய்களும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. சுயஇன்பத்தின் போது எந்த கருத்தடைகளும் தேவையில்லை என்பதையும் குறிப்பிட தேவையில்லை.

மனநல நன்மைகள்
சுயஇன்பம் பல மனநல நன்மைகளைக் கொண்டுள்ளது, ஏனெனில் இது ஆக்ஸிடாஸின் போன்ற ஹார்மோன்களின் வெளியீட்டைத் தூண்டுகிறது, இது உடலில் மகிழ்ச்சியையும் ஓய்வையும் தூண்டுகிறது. இந்த ஹார்மோன்கள் மனநலத்தை பாதிக்கிறது மற்றும் ஒரு நபர் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர உதவுகிறது.

ஆச்சரியமான நன்மைகள்
சுயஇன்பத்தின் பெரும்பாலான நன்மைகள் பிரபலமானவை மற்றும் மக்களுக்குத் தெரிந்தவை. இருப்பினும், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு நன்மை உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். சுயஇன்பம் சிறுநீர்ப்பை மற்றும் இடுப்புத் தளத்தை வலுப்படுத்த உதவுகிறது. சுயஇன்பத்தின் போது ஏற்படும் சுருக்கங்கள் இடுப்புத் தளத்தின் தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. சிறுநீர் அடங்காமை மற்றும் விறைப்புத்தன்மை போன்ற பிரச்சனைகளுக்கும் இது உதவும். சுயஇன்பம் செய்யும் ஆண்களில், புரோஸ்டேட் புற்றுநோயின் ஆபத்து கணிசமாகக் குறைக்கப்படுகிறது. விந்து வெளியேறும் போது, பெரும்பாலான நச்சுகள் உடலில் இருந்து வெளியேற்றப்படுவதால், உறுப்புகள் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.