Just In
- 1 hr ago
வார ராசிபலன் (03.06.2022-09.07.2022) - இந்த வாரம் திருமண வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும்.....
- 2 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு சில முக்கியமான நிதி முடிவுகளை எடுக்க நேரிடலாம்...
- 12 hrs ago
இந்த வயசுக்கு மேல ஆண்களுக்கு இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு ரொம்ப அதிகமாம்.. ஜாக்கிரதை!
- 14 hrs ago
தினமும் இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்துக் கொள்வது உங்களுக்கு புற்றுநோய் வராமல் தடுக்குமாம் தெரியுமா?
Don't Miss
- News
"பூனைக்குட்டி" வெளியே வருகிறது.. பாஜகவில் இணைகிறார் அமரீந்தர் சிங்.. குடியரசு துணை தலைவர் வேட்பாளரா?
- Technology
'இதைப் பார்த்துக் கொண்டிருந்தால், நான் இறந்துவிட்டேன் என அர்த்தம்': 23 வயதில் இறந்த பிரபல Youtuber!
- Sports
"ஒரே கல்லில் 2 மாங்காய்" ஒரே இன்னிங்ஸில் தோனி - சச்சின் சாதனை தகர்த்த ரிஷப் பண்ட்.. எப்படி தெரியுமா
- Movies
மகன் விஜய் வரல.. மனைவி ஷோபாவுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர்!
- Finance
ஒரு கப் டீ 20, சேவை கட்டணம் ரூ.50.. மொத்த கட்டணம் ரூ.70.. சதாப்தி ரயில் பயணிகள் ஷாக்!
- Automobiles
டாடாவிற்கு பக்கத்துல கூட யாரும் வர முடியாது! மாருதிலாம் சீன்லயே இல்ல! விஷயத்தை கேக்கும்போதே ஆச்சரியமா இருக்கு!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
ஆயுர்வேதத்தின்படி 'இந்த' 3 சத்தான உணவு பொருட்கள அதிகமா எடுத்துக்கூடாதாம்... இல்லனா பிரச்சனை தானாம்!
கொரோனா தொற்று பரவி வரும் இக்காலத்தில் நம் உடல்நலம் மீதும் உணவின் மீதும் மிகுந்த அக்கறையையும் விழிப்புணர்வையும் கொண்டுள்ளோம். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை நாம் புரிந்துகொண்டுள்ளோம். சூப்பர்ஃபுட் என்பது கடந்த ஆண்டுகளில் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி உலகில் மிகவும் பிரபலமடைந்த ஒரு சொல். குறைந்தபட்ச கலோரிகளில் அதிகபட்ச ஊட்டச்சத்து நன்மைகளை வழங்கும் உணவுகளைக் குறிப்பிடுவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது. தேர்வு செய்ய பல சூப்பர்ஃபுட்கள் உள்ளன. ஆனால், எந்தவொரு உணவையும் அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது, நாம் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
சில உணவுகளை அதிகமாக உட்கொள்ளக் கூடாது. அவ்வாறு செய்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஆயுர்வேத முறைப்படி, நீங்கள் அதிகமாக உட்கொள்ளக் கூடாத மூன்று சூப்பர்ஃபுட்களை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

திப்பிலி அல்லது நீண்ட மிளகு
திப்பிலி ஒரு கவர்ச்சியான மூலிகையாகும். இது உணவுகளை சுவைக்க மற்றும் ஆயுர்வேத மருந்துகளை தயாரிப்பதற்கு பரவலாக பயன்படுத்தப்படுகிறது. கிளைகோசைடுகள், யூஜெனால்கள், ஆல்கலாய்டுகள், டெர்பெனாய்டுகள் மற்றும் பிற இயற்கை சேர்மங்களால் இது நிரம்பியுள்ளது. திப்பிலி உங்களுக்கு விரிவான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இந்த சூப்பர்ஃபுட்டை உணவில் சேர்ப்பதன் மூலம் லிபிடோவை அதிகரிக்கவும், இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கவும், எடையை குறைக்கவும், மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்யவும் உதவும். மேலும், செரிமானத்தை ஊக்குவிக்கவும் மற்றும் வயிற்றுப்போக்கை தடுக்கவும் முடியும்.

உடல்நல பிரச்சனைகள்
திப்பிலி மூலிகையை அதிகமாக உட்கொள்வதும், கபா அல்லது பொடி வடிவில் நீண்ட நேரம் உட்கொள்வதும் மூன்று தோஷங்களான - வாத, பித்த, கபா அனைத்தையும் சமநிலையில் வைக்கும். இது அஜீரணம், வயிற்று வலி, அரிப்பு, தோல் சிவத்தல் மற்றும் தோல் வீக்கம் ஆகிய உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

ஆப்பிள் சைடர் வினிகர்
ஆப்பிள் சைடர் வினிகர் அல்லது ஏசிவி தற்போதைய காலத்தின் மிகவும் பிரபலமான சூப்பர்ஃபுட் ஆகும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் எடையை குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், இரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவைக் குறைக்கவும் மக்கள் இதை உட்கொள்கிறார்கள். ஆனால், ஆப்பிள் சைடர் வினிகரை அதிகமாக எடுத்துக்கொள்வது உங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

வயிற்று புண்
ஆப்பிள் சைடர் வினிகரை அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது, அதன் மோசமான பக்க விளைவுகளை நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். புளிக்கவைக்கப்பட்ட பானம் அமிலம் மற்றும் புளிப்பு, இது அனைத்தும் வதா, பிட்டா மற்றும் கபாவை பாதிக்கிறது. நீர்த்த சாறு செரிமான சாறுகளின் உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் உங்களை அமிலமாக உணர வைக்கிறது. இதனை அதிகமாக உட்கொள்வதால், சருமத்தில் எரிச்சல் மற்றும் வயிற்றில் புண்கள் ஏற்படும்.

உப்பு
உப்பு ஒரு பொதுவான சாதகமான முகவர், உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. சமையலில் மிகவும் இன்றியமையாத பொருள் உப்பு. பெரும்பாலான நாடுகளில், உப்பு அயோடின் மூலம் செறிவூட்டப்பட்டுள்ளது. இது ஒரு சுவடு கனிமமாகும். இது கோவிட்டை தடுக்கவும் ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுக்கவும் உதவுகிறது. ஆனால் உப்பில் சோடியம் உள்ளது. இது அதிகமாக உட்கொண்டால் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

இரத்த கொதிப்பு
ஆயுர்வேதத்தின்படி, அதிகப்படியான உப்பு உட்கொள்வது இரத்த கொதிப்பு, அதிக தாகம், சுயநினைவின்மை, எரியும் உணர்வு மற்றும் தோல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஒரு சராசரி வயது வந்தவருக்கு, ஒரு நாளைக்கு 5 கிராம் உப்பை எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. அதற்கு மேல் எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. தவிர, சாப்பாட்டு மேஜையில் உங்கள் உணவின் மேல் கூடுதல் உப்பு சேர்க்க வேண்டாம்.