Just In
- 8 hrs ago
ஹை பிபி உள்ளவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!
- 9 hrs ago
உங்க கொலஸ்ட்ரால் அளவு மற்றும் பிபியை குறைக்க இந்த 3 பொருட்கள் கலந்த பானத்தை குடிச்சா போதுமாம்!
- 9 hrs ago
இந்த பொருட்களை எவ்வளவு வருஷம் வேணாலும் வைத்து சாப்பிடலாமாம் கெட்டேப்போகாதாம் தெரியுமா?
- 10 hrs ago
Karandi omelette : கரண்டி ஆம்லெட்
Don't Miss
- News
வெளியே போயிடுங்க.! இல்லைனா சாக ரெடியா இருங்க..! காஷ்மீர் பண்டிட்களுக்கு லஷ்கர் இ இஸ்லாம் மிரட்டல்..!
- Finance
இளம் வயதில் வீடு வாங்குவது ஸ்மார்ட்டான முடிவு.. ஏன் தெரியுமா?
- Movies
அக்காவால் தங்கை குடும்பத்தில் சிக்கல்… மன வேதனையில் பிரபல நடிகர் !
- Sports
ரன் ஓடும் போது நிகழ்ந்த காமெடி.. ஒரே இடத்தில் 2 பேட்ஸ்மேன்.. டெல்லி வைத்த டிவிஸ்ட்.. ரசிகர்கள் கலகல
- Technology
சரியான வாய்ப்பு., ரூ.2000 தள்ளுபடி- ரூ.4,499-க்கு ஜியோபோன் நெக்ஸ்ட் வாங்கலாம்: இதோ வழிமுறைகள்!
- Automobiles
இதை எதிர்பாக்கவே இல்ல... மாருதி நிறுவனம் பாத்து பாத்து உருவாக்கிய பாதுகாப்பான காருக்கு இப்படி ஒரு நிலைமையா?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நீங்க துணி மாஸ்க் யூஸ் பண்றீங்களா? அப்ப கட்டாயம் இத படிங்க...
நாம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸுடன் போராடி வருகிறோம். இந்த வைரஸும் இதுவரை பலவாறு உருமாற்றமடைந்துள்ளது. அதில் தற்போது உருமாற்றமடைந்துள்ள வைரஸ் விகாரம் தான் ஓமிக்ரான். இது மிகவும் வேகமாக பரவக்கூடியது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் இது அனைத்து வயதினரையும் எளிதில் தொற்றக்கூடியதாகவும் கூறப்படுகிறது. ஆகவே இந்த வைரஸில் இருந்து பாதுகாப்பாக இருக்க மாஸ்க்குகளை அணிவதும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் மிகவும் இன்றியமையாத ஒன்று என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.
மாஸ்க்குகளைப் பற்றி கூற வேண்டுமானால், பெரும்பாலான மக்கள் துணி மாஸ்க்குகளைத் தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த துணி மாஸ்க்குகள் கோவிட்-19 தொற்றில் இருந்து பாதுகாக்காது என்று பல சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் புதிய ஆராய்ச்சியின் படி, பல பிறழ்வுகளைக் கொண்ட மற்றும் வேகமாக பரவக்கூடிய ஓமிக்ரானை, துணி மாஸ்க் அணிவதன் மூலம் தடுக்க முடியாது. ஏனெனில் துணி மாஸ்க் பாதுகாப்பைத் தவிர்க்கக்கூடிய சிறிய துகள்களைக் கொண்டிருக்கலாம்.

துணி மாஸ்க் ஏன் பாதுகாப்பற்றவை?
பெரும்பாலான மக்கள் துணி மாஸ்க்குகளையே அணிய விரும்புகிறார்கள். ஏனெனில் அவை வசதியானவை. இருப்பினும், சுகாதார நிபுணர்கள் சர்ஜிக்கல் மாஸ்க் வடிவத்தைக் கொண்ட துணி மாஸ்க்குகளைப் பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர். மேலும் ஒற்றை அடுக்கு கொண்ட துணி மாஸ்க்குகள் பெரிய நீர்த்துளிகளைத் தடுக்கலாமே தவிர, சிறிய நீர்த்துளிகள் அவற்றால் தடுக்கப்படுவதில்லை. அதுவும் கொரோனா மாறுபாடு மிகவும் வேகமாக பரவக்கூடியதாக இருந்தால், துணி மாஸ்க் அல்லது சர்ஜிக்கல் மாஸ்க் இரண்டுமே பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது.
உங்களுக்கு ஓமிக்ரைனில் இருந்து சரியான பாதுகாப்பு வேண்டுமானால், துணி மாஸ்க்கை அணிய வேண்டாம் என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஏனெனில் தொற்றை உண்டாக்கும் சிறிய நீர்த்துளிகள், துணியின் பெரிய துளைகள் வழியாக நுழைந்து தொற்றை உண்டாக்கலாம்.
நீங்கள் அணியும் மாஸ்க்குகளைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.

துணி மாஸ்க்
துணி மாஸ்க்கின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று, அதை ஒருமுறை பயன்படுத்திய பின் தூக்கி எறியும் மாஸ்க்குகளைப் போலின்றி, துவைத்து மீண்டும் பயன்படுத்தலாம். இந்த மாஸ்க் மற்றவர்களுடன் பேசும் போது மற்றும் மூடிய இடத்தில் ஒருவருடன் நேரத்தை செலவிடும் போது, அவர்களின் நீர்த்துளிகள் மேலே படாமல் இருக்க துணி மாஸ்க்கைப் பயன்படுத்த வேண்டும்.

சர்ஜிக்கல் மாஸ்க்
சர்ஜிக்கல்/அறுவை சிகிச்சை மாஸ்க்குகள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இவை ஒரு தளர்வான மற்றும் பொருத்தமான பாதுகாப்பு சாதனமாகும். இந்த மாஸ்க்கானது அணிபவரின் உதடுகள் மற்றும் மூக்குக்கு இடையே ஒரு தடையை உருவாக்குகிறது மற்றும் தீங்கு விளைவிக்கும் சூழலில் இருந்து உடனடி பாதுகாப்பளிக்கிறது.

துணி மற்றும் சர்ஜிக்கல்
சர்ஜிக்கல் மாஸ்க்குகள் பொருட்களை நன்கு வடிகட்டக்கூடிய ஒரு பொருளால் ஆனது. ஆனால் அவை மெலிதாக இருக்கும். எனவே அதன் மேல் ஒரு காட்டன் மாஸ்க்கை வைப்பது, கசிவைத் தடுக்கிறது. இரண்டாவது அடுக்கை சேர்ப்பது வடிகட்டலை அதிகரிக்கிறது. இதில் ஒரு அடுக்கு 50% துகள்களை வடிகட்டினால், இரண்டாவது அடுக்கு அதோ இணைத்து 75% துகள்களை வடிகட்டுகின்றன.

N-95
அமெரிக்க மாநாட்டின் அரசாங்க தொழில்துறை சுகாதார நிபுணர்களின் படி, நோய்வாய்ப்பட்ட நபர் மாஸ்க் அணியவில்லை என்றால், தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதற்கு குறைந்தது 2.5 மணிநேரம் ஆகும். ஆனால் இருவரும் N-95 முகமூடிகளை அணிந்திருந்தால், வைரஸ் பரவுவதற்கு 25 மணிநேரம் ஆகும்.

WHO வழிகாட்டுதல்களின் படி மாஸ்க் எவ்வாறு அணிய வேண்டும்?
* உங்கள் மாஸ்க்கை அணியும் முன்பும், அகற்றுவதற்கும் முன்பும் பின்பும் மற்றும் ஒவ்வொரு முறை மாஸ்க்கை தொடர்பு கொள்ளும் போதும் கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
* நீங்கள் அணியும் மாஸ்க் மூக்கு, வாய் மற்றும் தாடை ஆணிய பகுதிகளை நன்கு மூடப்பட்டிருக்க வேண்டும்.
* மாஸ்க்கை அகற்றும் போது, அதை ஒரு சுத்தமான பிளாஸ்டிக் பையில் வைக்க வேண்டும். அதுவே துணி மாஸ்க் என்றால் தினமும் அதை துவைக்க வேண்டும். ஒருவேளை சர்ஜிக்கல் மாஸ்க்காக இருந்தால், அதை தூக்கி எறிய வேண்டும்.
* வால்வுகளைக் கொண்ட மாஸ்க்குகளைப் பயன்படுத்தக்கூடாது.

நினைவில் கொள்ள வேண்டியவை:
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மக்கள் கூட்டத்தைத் தவிர்ப்பது, மாஸ்க் அணிவது, கைகளைக் கழுவுவது மற்றும் இருமலின் போது முழங்கை அல்லது டிஸ்வைப் பயன்படுத்துவது போன்ற எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். முடிந்தவரை, வெளியே அதிகம் சுற்றாமல் வீட்டிலே இருக்க முயலுங்கள்.