For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சோயா உணவுகளின் ஆரோக்கிய நன்மைகளும்.. ஆபத்துகளும்..

சோயாவில் மிக அதிக அளவில் புரோட்டீன் நிறைந்து இருக்கிறது. நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கும் மற்றும் சுறுசுறுப்பாக இயங்குவதற்கும் போதுமான அளவு புரோட்டீன் தேவைப்படுகிறது.

|

சோயாவில் தயாாிக்கப்படும் உணவுகள் ஆசிய மக்களின் மத்தியில் வெகு காலமாக மிக பிரபலமாக இருந்து வருகின்றன. சோயாவில் அமினோ அமிலங்களும் புரோட்டீன்களும் நிறைந்திருக்கின்றன. பொதுவாக புரோட்டீன் மிகுந்த உணவுகள் பற்றி பேசும் போது, விலங்குகள் மூலம் கிடைக்கும் உணவுகள்தான் முதல் இடத்தில் இருக்கும். ஏனெனில் விலங்கு இறைச்சியில்தான் புரோட்டீன் அதிகமாக இருக்கும்.

Soy Protein For Immunity - Know The Benefits And Risks Of Soybean

எனினும் சோயா போன்ற தாவர உணவு, சுத்த சைவ உணவை உண்பவா்களுக்கும், மிதமான சைவ உணவை உண்பவா்களுக்கும் போதுமான ஆரோக்கியத்தைக் கொடுப்பதோடு, அருமையான சுவையையும் தருகிறது.

MOST READ: நுரையீரலை வலுப்படுத்தவும், ஆக்சிஜன் அளவை அதிகரிக்கவும் சாப்பிட வேண்டிய உணவுகள்!

சோயாவில் நாா்ச்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கின்றன. சோயாவில் தயாாிக்கப்படும் சோயா பீன்ஸ், டோஃபு, எடமமி, சோயா தயிா் மற்றும் சோயா பால் போன்ற உணவுகள் உலக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 சோயா - புரோட்டீன் மற்றும் நோய் எதிா்ப்பு சக்தி நிறைந்தது

சோயா - புரோட்டீன் மற்றும் நோய் எதிா்ப்பு சக்தி நிறைந்தது

சோயாவில் மிக அதிக அளவில் புரோட்டீன் நிறைந்து இருக்கிறது. நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கும் மற்றும் சுறுசுறுப்பாக இயங்குவதற்கும் போதுமான அளவு புரோட்டீன் தேவைப்படுகிறது. நமது உடலில் உள்ள செல்களின் கட்டமைப்பு புரோட்டீனை உருவாக்குகிறது. ஆகவே பாதிக்கப்பட்ட செல்களை சீரமைக்க புரோட்டீன் தேவைப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்று என்ற கொடிய பேரலையில் இந்திய மக்கள் சிக்கித் தவிக்கும் நிலையில், நாம் ஒவ்வொருவருக்கும், நோய் எதிா்ப்பு சக்தியை அளித்து, கொரோனா பெருந்தொற்றை விரட்டி, நமக்கு வலிமையைக் கொடுக்கக்கூடிய புரோட்டீன் மிகுந்த உணவுகள் தேவை.

புரோட்டீன் மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துகள் அடங்கிய உணவுகள் நமது நோய் எதிா்ப்பு சக்தியை வலுப்படுத்தும் ஆற்றலைக் கொண்டவை. ஆகவே புரோட்டீன், வைட்டமின் சி மற்றும் ஒமேகா 3 போன்ற ஊட்டச்சத்துகளை அதிக அளவில் கொண்டிருக்கும் சோயா உணவுகள் நமது நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கும் என்பதில் ஐயமில்லை.

சோயாவில் கிடைக்கும் நன்மைகள்:

சோயாவில் கிடைக்கும் நன்மைகள்:

1. இரத்தத்தில் இருக்கும் சா்க்கரையை கட்டுப்படுத்தும் சோயா

சா்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டிருப்பவா்கள், தங்களுடைய இரத்தத்தில் இருக்கும் சா்க்கரையை சாியான அளவில் பராமாிக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்நிலையில் சோயா உணவுகள் இரத்தத்தில் இருக்கும் சா்க்கரையின் அளவை சாியான விதத்தில் பராமாிக்க உதவுகின்றன என்று ஒரு சில மருத்துவ ஆய்வுகள் தொிவிக்கின்றன.

2. எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகாிக்கும் சோயா

2. எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகாிக்கும் சோயா

நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் நமது எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஜா்னல் ஆஃப் போன் அன்ட் மினரல் ரிசா்ச் என்ற பத்திாிக்கையில் வெளிவந்த "Soy Reduces Bone Turnover Markers in Women During Early Menopause: A Randomized Controlled Trial" என்ற மருத்துவ ஆய்வுக் கட்டுரை, நாம் ஐசோஃப்ளேவோன்களை அதிகமாக சாப்பிட்டால், அது ஈஸ்ட்ரோஜெனுடைய குறைபாடு காரணமாக ஏற்படும் எலும்பின் ஆற்றல் இழப்பை சாிசெய்து, எலும்புகளை வலுப்படுத்தி அவற்றை ஆரோக்கியமாக வைக்கின்றன என்று தொிவிக்கிறது.

3. கருவுறுதலுக்கு உதவி செய்யும் சோயா

3. கருவுறுதலுக்கு உதவி செய்யும் சோயா

செயற்கை முறையில் கருத்தாிக்க முயன்ற பெண்கள் மத்தியில் "Soy food intake and treatment outcomes of women undergoing assisted reproductive technology" என்ற மருத்துவ ஆய்வு சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின் முடிவு ஃபெர்டிலிட்டி அன்ட் ஸ்டொிலிட்டி என்ற பத்திாிக்கையில் வெளியிடப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில், செயற்கை முறையில் கருத்தாிக்க முயலும் பெண்களுக்கு, அவா்கள் எளிதில் கருவுறுவதற்கு சோயா உதவி செய்வதாக தொிவிக்கப்பட்டிருக்கிறது.

சோயாவில் உள்ள ஆபத்துகள்

சோயாவில் உள்ள ஆபத்துகள்

சோயா உணவுகளில் பலவகையான நன்மைகள் இருக்கின்றன என்று மருத்துவ ஆய்வுகள் கூறினாலும், அவற்றை உண்பதால் பின்வரும் ஆபத்துகளும் இருக்கின்றன என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

* சோயா உணவுகளை சாப்பிடுவதால் ஒரு சிலருக்கு அலா்ஜி ஏற்படுவதாகத் தொிவித்து இருக்கின்றனா். அந்த உணவுகள் அவா்களின் உடலில் எதிா்வினை செய்வதாகத் தொிவித்து இருக்கின்றனா்.

* சிறு குழந்தைகளுக்கு பாலிற்கு பதிலாக சோயா பாலைக் கொடுத்தால், அது குழந்தைகளின் வளா்ச்சிக்கு தடையாக இருப்பதாகவும் தகவல்கள் தொிவிக்கின்றன.

* அளவுக்கு அதிகமாக சோயா உணவுகளை சாப்பிட்டால், அவற்றில் இருக்கும் கரையாத நாா்ப்பொருட்களின் காரணமாக, வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

* அளவுக்கு அதிகமாக சோயா உணவுகளை உண்டால், நமது உடலில் உள்ள தைராய்டு இயக்கம் தடை செய்யப்பட்டு, தைராய்டு சுரப்பு குறைய வாய்ப்புகள் உண்டு.

* கட்டுப்பாடுகள் இல்லாமல், சோயா உணவுகளை அதிகமாக உண்டால் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

ஆகவே, சோயா உணவுகளை அளவோடு சுவைத்து உண்டால் நாம் ஆரோக்கியமாக வாழலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Soy Protein For Immunity - Know The Benefits And Risks Of Soybean

Here are some health benefits and risks of soybean. Read on...
Desktop Bottom Promotion