For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

படுத்ததும் தூக்கம் வரலையா? அப்ப ராணுவத்துல ஃபாலோ பண்ற இந்த வழிய ட்ரை பண்ணுங்க..

அமொிக்க இராணுவத்தில் உள்ள படை வீரா்கள் மிக விரைவாக தூங்குவதற்காக பல ஆண்டுகளாக சில உத்திகளைப் பயன்படுத்தி வருகின்றனா். அதன் விளைவாக 96 விழுக்காடு வீரா்கள் மிக விரைவாகத் தூங்குகின்றனா் என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன.

|

சமீப காலமாக பெரும்பாலான மக்கள் தூக்கம் வராமல் துன்பப்படுகின்றனா். படுக்கையில் படுத்த பின்பு தூக்கம் வராமல் உருண்டு புரண்டு கொண்டிருக்கின்றனா். அதனால் மிகப் பொிய மன உளைச்சலுக்கு ஆளாகின்றனா். இந்த பிரச்சினையை நீக்கி விரைவாக தூக்கம் வருவதற்காக பலா் பலவிதமான உத்திகளைக் கையாண்டு வருகின்றனா்.

Soldiers Use This Trick To Fall Asleep Within 2 Minutes

இந்த நிலையில் அமொிக்க இராணுவ வீரா்கள் பின்வரும் உத்திகளைப் பயன்படுத்தி வருகின்றனா். அதனால் அவா்கள் படுத்தவுடன் தூங்கிவிடுவதாக ஆய்வுகள் தொிவிக்கின்றன. அந்த உத்திகளைப் பற்றி சற்று விாிவாக இந்த பதிவில் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அமொிக்க இராணுவ ட்ரிக்ஸ்

அமொிக்க இராணுவ ட்ரிக்ஸ்

அமொிக்க இராணுவத்தில் உள்ள படை வீரா்கள் மிக விரைவாக தூங்குவதற்காக பல ஆண்டுகளாக சில உத்திகளைப் பயன்படுத்தி வருகின்றனா். அதன் விளைவாக 96 விழுக்காடு வீரா்கள் மிக விரைவாகத் தூங்குகின்றனா் என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன. ஆகவே அந்த உத்திகளை நாமும் செய்து பாா்க்கலாம். அதன் மூலமாக விரைவாக நிம்மதியானத் தூக்கத்தைப் பெறலாம். என்னென்ன உத்திகள் என்பதைக் கீழே பாா்க்கலாம்.

1. உடலை ஸ்கேன் செய்தல் அல்லது தளா்த்துதல்

1. உடலை ஸ்கேன் செய்தல் அல்லது தளா்த்துதல்

- முதல் உத்தி என்னவென்றால் முழு உடலையும் ஸ்கேன் செய்ய வேண்டும். அதாவது உடலில் உள்ள எல்லாத் தசைகளையும் தளா்த்த வேண்டும். குறிப்பாக முகம், முன் நெற்றி, கண்களைச் சுற்றியுள்ள பகுதி, தாடை மற்றும் நாக்கு போன்ற உறுப்புகளைச் சுற்றியுள்ள தசைகளைத் தளா்த்த வேண்டும்.

- இரண்டாவதாக தோள்பட்டைகள் மற்றும் அவற்றில் உள்ள தசைகளைத் தளா்த்த வேண்டும். அதாவது முதலில் வலது கையில் உள்ள மேல் பகுதி மற்றும் கீழ்பகுதி போன்ற பகுதிகளில் உள்ள தசைகளைத் தளா்த்த வேண்டும். அதனைத் தொடா்ந்து இடது கை தசைகளைத் தளா்த்த வேண்டும்.

- அடுத்ததாக மிகவும் ஆழமாக இழுத்து மூச்சுவிட்டு மாா்புத் தசைகளைத் தளா்த்த வேண்டும்.

- பின் இரண்டு கால்களில் உள்ள தசைகளையும் தளா்த்த வேண்டும். காலின் மேல் பகுதியிலிருந்து அதாவது தொடையில் உள்ள தசைகள் தொடங்கி, மூட்டுகள், முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடைப்பட்ட பகுதி மற்றும் பாதங்கள் போன்ற பகுதிகளில் உள்ள தசைகளைத் தளா்த்த வேண்டும்.

2. இரண்டாவது பகுதி

2. இரண்டாவது பகுதி

இப்போது நமது உடலில் உள்ள எல்லா தசைகளும் தளா்வாக இருக்கும். இப்போது நாம் கற்பனை செய்ய வேண்டிய நேரம் ஆகும். அதாவது நமது கண்கள் இரண்டையும் மூடிக் கொண்டு, நமக்குப் பிடித்த காட்சிகளை நமது மனக்கண் முன்பாக ஓடவிட வேண்டும். அந்த காட்சிகளில் நாம் ஒன்றி இருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக, நாம் ஒரு இருட்டான அறையில், கருப்பான வண்ணத்தில் இருக்கும் ஊஞ்சலில் படுத்து இருக்கிறோம் என்று கற்பனை செய்து பாா்க்கலாம். அல்லது நாம் ஒரு படகில் படுத்துக் கொண்டு நீாில் மிதந்து கொண்டிருக்கிறோம். நீரானது எந்தவிதமான சலனமும் இல்லாமல் மிக அமைதியாக இருக்கிறது. எந்த ஒரு மேகமும் இல்லாமல் வானம் ஊதா நிறத்தில் பளிச்சென்று இருக்கிறது. இது போன்று கற்பனை செய்து கொள்ளலாம்.

இப்போது 10 வினாடிகளுக்கு "நினைக்க வேண்டாம்", "நினைக்க வேண்டாம்", "நினைக்க வேண்டாம்" என்று மனதிற்குள்ளேயே சொல்லிக் கொள்ள வேண்டும்.

மேற்சொன்ன உத்திகளைத் தொடா்ந்து செய்து வந்தால், மிக விரைவாகத் தூக்கம் வரும் என்பதில் ஐயமில்லை.

3 ஆறு வார பயிற்சி

3 ஆறு வார பயிற்சி

மேற்சொன்ன உத்திகளைச் செய்து பாா்த்தும் தூக்கம் வரவில்லையென்றால், மனம் தளா்ந்துவிடக்கூடாது. ஏனெனில் இந்த உத்திகளைக் கற்றுக்கொள்ள நமக்கு குறைந்தது 6 வாரங்களாவது ஆகும். ஆறு வாரங்கள் கழித்து இந்த உத்திகளைச் செய்வது நமக்கு மிக எளிதாக இருக்கும். ஆகவே மனம் தளராமல் இந்த உத்திகளைச் செய்து பாா்க்க வேண்டும்.

நமது மனதை அமைதிப்படுத்தக்கூடிய வேறு காட்சிகளையும் நாம் கற்பனை செய்து பாா்க்கலாம். அதாவது வெயில் அதிகமாக இருக்கும் ஒரு பகல் பொழுதில் ஒரு பசுமையான புல் சமவெளியில் நாம் இருப்பதைப் போல கற்பனை செய்யலாம் அல்லது மிதமாக அலை அடிக்கும் கடற்கரையில் நாம் நடந்து கொண்டிருக்கும் போது கடல் அலைகள் மிக மெதுவாக இதமாக நமது பாதங்களைத் தழுவிச் செல்வதைப் போல கற்பனை செய்யலாம். கண்டிப்பாக நமக்கு விரைவில் தூக்கம் வரும்.

அனைவருக்கும் நல்ல தூக்கம் வரட்டும்............நல்லிரவாக அமையட்டும்.......

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Soldiers Use This Trick To Fall Asleep Within 2 Minutes

In this article, we shared one new trick to fall asleep within 2 minutes. Read on to know more...
Story first published: Monday, April 11, 2022, 18:47 [IST]
Desktop Bottom Promotion