For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க நைட் இப்படி தூங்குறீங்களா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்தான கல்லீரல் நோய் வர வாய்ப்பிருக்காம்...!

கொழுப்பு கல்லீரல் நோய் என்பது ஒருவரின் கல்லீரலில் கூடுதல் கொழுப்பை உருவாக்கும் ஒரு நிலை, அதனால் இது ஹெபடிக் ஸ்டீடோசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

|

கொழுப்பு கல்லீரல் நோய் என்பது ஒருவரின் கல்லீரலில் கூடுதல் கொழுப்பை உருவாக்கும் ஒரு நிலை, அதனால் இது ஹெபடிக் ஸ்டீடோசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. வழக்கமாக, இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த அறிகுறிகளையும் காட்ட மாட்டார்கள், எனவே கடுமையான பிரச்சனைகளை அனுபவிப்பதில்லை, எனவே தாமதமான நோயறிதல் மோசமான கல்லீரல் பாதிப்புக்கு வழிவகுக்கிறது. கொழுப்பு கல்லீரல் நோய், மது அருந்துபவர்கள் மற்றும் குடிக்காதவர்கள் என யாருக்கும் வரலாம்.

sleep-habits-that-increase-fatty-liver-disease-risk-in-tamil

ஆல்கஹால் தூண்டப்பட்ட கொழுப்பு கல்லீரல் நோய், அதிக குடிப்பழக்கத்தால் மக்கள் இந்த நிலையை உருவாக்கும் வகையாகும், அதேசமயம் அதிக குடிப்பழக்கம் இல்லாதவர்களுக்கு ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) இருக்கலாம். இந்த இரண்டுமே உங்கள் உயிருக்கு ஆபத்தானது மற்றும் சிகிச்சை தேவைப்படும் நிலையாகும். உங்கள் ஆபத்து காரணிகளைப் பொறுத்து, உங்கள் வாய்ப்புகளை குறைக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உடல் பருமன், அடிப்படை சுகாதார நிலைமைகள் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் ஆகியவை நோயின் முக்கிய ஆபத்து காரணிகளில் சில என்றாலும், உங்கள் தூக்கப் பழக்கம் உங்களுக்கு அதிக ஆபத்தில் உள்ளதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும் என்று சமீபத்திய ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
'நீங்கள் எப்படி தூங்குகிறீர்கள்' என்பது கொழுப்பு கல்லீரல் நோயின் அபாயத்தை பாதிக்குமா?

'நீங்கள் எப்படி தூங்குகிறீர்கள்' என்பது கொழுப்பு கல்லீரல் நோயின் அபாயத்தை பாதிக்குமா?

தூக்கம் என்பது நம் வாழ்வின் இன்றியமையாத பகுதியாகும், இது நம்மை ஆற்றல் நிறைந்ததாக இருக்க உதவுகிறது. தூக்கம் இல்லாமல், நாம் எப்போதும் சோர்வாக இருப்போம், அது நம்மீது உளவியல் தாக்கத்தை கூட ஏற்படுத்தலாம். ஆனால் சுவாரஸ்யமாக, எண்டோகிரைன் சொசைட்டியின் ஒரு அறிக்கையின் படி, ஒருவர் தூங்குவது கொழுப்பு கல்லீரல் நோயை உருவாக்கும் அபாயத்தை எவ்வாறு பாதிக்கலாம் என்று தெரிவிக்கிறது. சில தூக்கப் பழக்கங்கள் நமது உடல் மற்றும் சில உறுப்புகளின் செயல்பாட்டை பாதிக்கும் என்று ஆய்வில் ஈடுபட்டவர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆய்வு என்ன வெளிப்படுத்துகிறது?

ஆய்வு என்ன வெளிப்படுத்துகிறது?

கொழுப்பு கல்லீரல் நோய் என்பது கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பை உருவாக்குவதாகும், இது பெரும்பாலும் மோசமான உணவு தேர்வுகள் மற்றும் உட்கார்ந்த வாழ்க்கை முறையின் விளைவாகும். ஆய்வின் படி தூக்கம், குறட்டை மற்றும் தாமதமாக இந்த நோயின் அபாயத்தை அதிகரிப்பதில் ஒரு பங்கை வகிக்கிறது. "மோசமான இரவு தூக்கம் மற்றும் நீண்ட பகல் தூக்கம் உள்ளவர்கள் கொழுப்பு கல்லீரல் நோயை உருவாக்கும் அதிக ஆபத்தில் உள்ளனர். தரமான தூக்கம் கொழுப்பு கல்லீரல் நோய்க்கான ஆபத்தில் 29 சதவிகிதம் குறைப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.

ஆய்வு எப்படி நடத்தப்பட்டது?

ஆய்வு எப்படி நடத்தப்பட்டது?

கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட 5,011 பெரியவர்களிடமிருந்து சுய-அறிக்கை தூக்க நடத்தைகளை ஆய்வு பகுப்பாய்வு செய்தது. இந்த ஆய்வின் மூலம் தாமதமாக தூங்குவது, குறட்டை விடுவது போன்றவை இந்த நோயுடன் தொடர்புடையது என்று கண்டறியப்பட்டது. தூக்கத்தின் தரத்தில் மிதமான முன்னேற்றம் கொழுப்பு கல்லீரல் நோய்க்கான ஆபத்தில் 29 சதவிகிதம் குறைப்புடன் தொடர்புடையது என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கவனத்தில் கொள்ள வேண்டிய பிற காரணிகள்

கவனத்தில் கொள்ள வேண்டிய பிற காரணிகள்

மற்றொரு ஆய்வின் படி, அதிக எடை அல்லது பருமனாக இருப்பது, வகை 2 நீரிழிவு நோய் அல்லது வளர்சிதை மாற்ற நோய்க்குறி அல்லது சில பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக்கொள்வது கொழுப்பு கல்லீரல் நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம். நிபுணர்களின் கூற்றுப்படி, இரத்தத்தில் அதிக அளவு கொழுப்பு உள்ளவர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், ஹெபடைடிஸ் சி போன்ற நோய்த்தொற்றுகள் உள்ளவர்கள் அல்லது சில நச்சுப் பொருட்களுக்கு ஆளானவர்களும் ஆபத்தில் உள்ளனர் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கொழுப்பு கல்லீரல் நோய்க்கு சிகிச்சையளிக்க முடியுமா?

கொழுப்பு கல்லீரல் நோய்க்கு சிகிச்சையளிக்க முடியுமா?

கொழுப்பு கல்லீரல் நோய்க்கு சிகிச்சையளிக்க குறிப்பிட்ட மருந்துகள் எதுவும் இல்லை. இருப்பினும், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய சில வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்ய மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம். உங்களுக்கு எந்த வகையான கொழுப்பு கல்லீரல் நோய் உள்ளது என்பதைப் பொறுத்து, மது அருந்துவதையும் புகைப்பிடிப்பதையும் விட்டுவிடுங்கள். உடல் எடையை குறைப்பது உங்கள் முன்னுரிமையாக இருக்க வேண்டும், அதாவது நீங்கள் ஆரோக்கியமான உணவு தேர்வுகளுக்கு மாற வேண்டும் மற்றும் வழக்கமான உடல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளை கட்டுப்படுத்த சில மருந்துகளை நீங்கள் ஏற்கனவே எடுத்துக் கொண்டால், மருத்துவரின் வழிகாட்டுதலின்படி அவற்றை சரியாக எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் ஆபத்தை எவ்வாறு குறைப்பது?

உங்கள் ஆபத்தை எவ்வாறு குறைப்பது?

கொழுப்பு கல்லீரல் நோய்க்கான சிகிச்சை மற்றும் தடுப்புக்கான உங்கள் வழிகாட்டி கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. உங்கள் கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவை அதிகரிக்கக்கூடிய கொழுப்புக்கு உகந்த உணவுகளை நீக்குவதே உங்கள் ஆபத்தை குறைக்க சிறந்த வழி. ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்யவும், மது அருந்துவதைக் கட்டுப்படுத்தவும், சரியான நேரத்தில் மருந்துகளை உட்கொள்ளவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sleep Habits That Increase Fatty Liver Disease Risk in Tamil

Read to know how your sleeping habits can increase fatty liver disease risk.
Story first published: Saturday, September 10, 2022, 19:35 [IST]
Desktop Bottom Promotion