For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடிக்கடி வாய்ப்புண் வந்து பாடாய் படுத்துதா? அப்ப இந்த கிச்சன் பொருட்களை இப்படி யூஸ் பண்ணுங்க...

வாய்ப்புண்ணிற்கு மருந்துகளை கடைக்கு சென்று வாங்கி முயற்சிப்பதற்கு பதிலாக, வீட்டு சமையலறையில் உள்ள சில மருத்துவ குணம் கொண்ட பொருட்களைப் பயன்படுத்தினால் இன்னும் விரைவில் குணமாகும்.

|

நாம் ஒவ்வொருவருமே நமது வாழ்வில் ஒரு முறையாவது வாய்ப்புண்ணால் அவதிப்பட்டிருப்போம். வாயில் வரும் இந்த வலிமிகுந்த கொப்புளங்களால் நம்மால் எதையும் சரியாக சாப்பிட முடியாது. சில சமயங்களில் பேசுவது கூட சிரமமாக இருக்கும். இத்தகைய வாய்ப்புண் ஒருவருக்கு வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் இது மாறுபடும். ஆனால் பொதுவான காரணங்கள் என்றால், அத்தியாவசிய வைட்டமின்கள் குறைபாடு, நீரிழப்பு மற்றும் குறிப்பிட்ட உணவுகள் ஒருவருக்கு செட் ஆகாமல் இருந்தாலும் வரக்கூடும்.

Simple Kitchen Remedies For Mouth Ulcers In Tamil

இந்த வாய்ப்புண்ணை சரிசெய்வதற்கு என்று பிரத்யேகமாக பல அயின்மெண்டுகள் மற்றும் மருந்துகள் கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் அந்த மருந்துகளை கடைக்கு சென்று வாங்கி முயற்சிப்பதற்கு பதிலாக, வீட்டு சமையலறையில் உள்ள சில மருத்துவ குணம் கொண்ட பொருட்களைப் பயன்படுத்தினால் இன்னும் விரைவில் குணமாகும். இப்போது வாய்ப்புண்ணை சரிசெய்யும் அந்த சமையலறைப் பொருட்கள் என்னவென்பதையும், அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் விரிவாக காண்போம். அடுத்த முறை உங்களுக்கு வாய்ப்புண் வந்தால், இந்த வழிகளைப் பின்பற்றி சரிசெய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மஞ்சள் தூள்

மஞ்சள் தூள்

மஞ்சளில் உள்ள மருத்துவ குணங்களால், இது எந்த வகையான உட்காயங்களையும் விரைவில் குணப்படுத்தும். இந்த அற்புதமான மசாலாப் பொருளில் தொற்றுக்களை எதிர்த்துப் போராடும் திறன் உள்ளது மற்றும் இது வாயில் உள்ள புண்களை சீக்கிரம் ஆற்றும்.

பயன்படுத்தும் முறை:

சிறிது மஞ்சள் தூளை எடுத்து, நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, வாய்ப்பு உள்ள இடத்தில் தடவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு முறை செய்தால் விரைவில் வாய்ப்புண் சரியாகும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் புண்கள் குணமாவதை வேகப்படுத்தும் மற்றும் இது வாய்ப்புண்ணிற்கு காரணமான வாயில் உள்ள கிருமிகளை எதிர்த்துப் போராடுகிறது.

பயன்படுத்தும் முறை:

ஒரு சிறிய கப்பில் வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை சிறிது வாயில் ஊற்றி கொப்பளிக்க வேண்டும். இப்படி இந்த கரைசல் காலியாகும் வரை வாயைக் கொப்பளித்த பின், சுத்தமான நீரால் வாயைக் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் செய்து வந்தால், வாய்ப்புண் விரைவில் குணமாகும்.

தேங்காய் பால்

தேங்காய் பால்

தேங்காய் பால் குளிர்ச்சியானது மற்றும் காயங்களை ஆற்றும் திறன் கொண்டது. வாய்ப்புண் இருக்கும் சமயத்தில் இதைப் பயன்படுத்தினால் நற்பலனைப் பெறலாம். ஆனால் அதற்கு குளிர்ச்சியான தேங்காய் பாலை பயன்படுத்த வேண்டும்.

பயன்படுத்தும் முறை:

குளிர்ச்சியான தேங்காய் பாலை வாயில் ஊற்றி சிறிது நேரம் கொப்பளித்து துப்ப வேண்டும். அதுவும் இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வந்தால், வாய்ப்புண் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். வேண்டுமானால் தேங்காய் பாலை வாயில் ஊற்றி நிரப்பி, 5 நிமிடம் அப்படியே வைத்து துப்பலாம்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டதால், இது வாய்ப்புண் தொற்றுக்களை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது. இதில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் வாயில் வரும் புண்களை இயற்கையாகவே குணமடையச் செய்துவிடும்.

பயன்படுத்தும் முறை:

தினமும் இரவு தூங்கும் முன் வாய்புண்ணில் தேங்காய் எண்ணெயைத் தடவுவதன் மூலம், சீக்கிரம் வாய்ப்புண் சரியாகும். முக்கியமாக இது கடைகளில் விற்கப்படும் ஆயின்மெண்டுகளை விட சிறப்பாகவும், வேகமாகவும் வேலை செய்யும். மேலும் வாய்ப்புண் வலிக்கும் போது தேங்காய் எண்ணெயை வைத்தால், உடனே வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

தேன்

தேன்

தேனில் உள்ள மருத்துவ மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் காயங்களை உடனடி சரிசெய்ய உதவுகிறது. அதுவும் தேன் வாயில் உள்ள புண்ணை சரிசெய்வதோடு, அப்பகுதியைச் சுற்றியுள்ள பகுதியை பாதுகாத்து, மேலும் தொற்றுகள் ஏற்படாதவாறு பாதுகாக்கிறது.

பயன்படுத்தும் முறை:

சிறிது தேனை எடுத்து வாய்ப்புண்ணின் மேல் தடவ வேடும். இதன் இனிப்புச் சுவையால், பலரும் அதை அப்படியே சாப்பிட்டுவிட நேரிடலாம். அதற்காக கவலைப்பட வேண்டியதில்லை, தொடர்ந்து இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை அப்பகுதியில் தேனை தடவி வாருங்கள். இப்படி செய்வதால் ஒரு நல்ல தீர்வை விரைவில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Simple Kitchen Remedies For Mouth Ulcers In Tamil

Here are some simple kitchen remedies for mouth ulcers. Read on to know more...
Story first published: Monday, July 11, 2022, 8:13 [IST]
Desktop Bottom Promotion