Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
உங்க பிறப்புறுப்பை சுற்றி இந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்க பாலியல் வாழ்க்கை அவ்வளவுதான்... ஜாக்கிரதை!
உணவு, பானங்கள், உரையாடல் அல்லது உடலுறவு என நாம் செய்யும் அனைத்திற்கும் நம் உடல் எதிர்வினையாற்றுகிறது.
மனித உடல் ஒரு சிக்கலான இயந்திரம். பல உறுப்புகள், தசைகள், நரம்புகள் அனைத்தும் ஒரே நேரத்தில் பல வேலைகளில் ஈடுபடுவதால், மருத்துவ அறிவில்லாதவர்கள் அது நன்றாக வேலை செய்கிறதா இல்லையா என்பதை தீர்மானிப்பது மிகவும் கடினமானதாக இருக்கும். குறிப்பாக உடலுறவில் ஈடுபடும் போது அதனைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வது மிகவும் அவசியமானதாகும்.

உணவு, பானங்கள், உரையாடல் அல்லது உடலுறவு என நாம் செய்யும் அனைத்திற்கும் நம் உடல் எதிர்வினையாற்றுகிறது. அந்த வகையில் உடலுறவு உங்கள் பாலியல் ஆரோக்கியத்தின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பாலியல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை அவற்றில் உள்ள பிரச்சினைகள், எளிதில் புறக்கணிக்கப்படலாம், ஆனால் அவை அவசியம் கவனிக்கப்பட வேண்டியவை. உங்கள் பாலியல் ஆரோக்கியத்தில் பிரச்சினை இருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பிறப்புறுப்புக்கு அருகில் கட்டிகள் இருப்பது
ஆண்களின் விதைப்பையைச் சுற்றியுள்ள பகுதியில் ஏதேனும் அசாதாரண வளர்ச்சி அல்லது கட்டி உருவாகிறதா என்பதைச் சரிபார்க்க வேண்டியது அவசியம். பிறப்புறுப்பைச் சுற்றியுள்ள பகுதி மிகவும் உணர்திறன் வாய்ந்ததாக இருப்பதாலும், முடி வளர்ந்ததன் காரணமாக சில நேரங்களில் கட்டிகள் ஏற்படலாம், இதனால் அது புறக்கணிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது,ஆனால் இது பிறப்புறுப்பு மருக்கள் அல்லது தொற்றுநோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.

அசாதாரண வெளியேற்றம்
உங்கள் ஆணுறுப்பு அல்லது மலக்குடல் உங்கள் உடலில் இருந்து அசாதாரணமான வெளியேற்றத்தை ஏற்படுத்துவதை நீங்கள் கண்டால், அது உங்கள் பாலியல் ஆரோக்கியத்தில் ஏதோவொரு பிரச்சனை இருக்கலாம் என்பதற்கான அறிகுறியாகும். பச்சை அல்லது மஞ்சள் வெளியேற்றம் கோனோரியாவைக் குறிக்கலாம், அதே சமயம் வெள்ளை நிற வெளியேற்றம் ட்ரைக்கோமோனியாசிஸைக் குறிக்கலாம் மற்றும் வெள்ளை நிற வெளியேற்றம் மணமற்றதாகவும் அடர்த்தியாகவும் இருந்தால், உங்களுக்கு ஈஸ்ட் தொற்று இருப்பதாக அர்த்தம்.

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்
நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்வை உணர்வது, நீங்கள் பாலியல் ஆரோக்கிய பிரச்சனையை அனுபவிக்கப் போவதற்கான மற்றொரு அறிகுறியாகும். பொதுவாக இது சிறுநீர்பாதை நோய்த் தொற்றைக் குறிக்கும், இது கவலைப்பட வேண்டிய முக்கிய விஷயம் அல்ல, இருப்பினும், இதனை அலட்சியமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இது கிளமிடியா, கோனோரியா போன்ற ஒரு STD இருப்பதையும் குறிக்கலாம்.

கண் எரிச்சல் மற்றும் தொற்று
பாலியல் தொற்று நோய்கள் பற்றி அதிகம் அறியப்படாத உண்மை என்னவென்றால், இது உடலுறவு மட்டுமன்றி வாய்வழி உடலுறவு மூலமாகவும் பரவுகிறது மற்றும் விந்து அல்லது யோனி திரவம் கண்ணுக்குள் நுழைந்து தொற்றுநோயை ஏற்படுத்தும் போது அதுவும் பாலியல் தொற்றுநோயை ஏற்படுத்தும். எனவே உங்களுக்கு இந்த அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவரை பார்ப்பது நல்லது மற்றும் அடுத்தமுறை ஆணுறை அணிவது நல்லது.

ஆணுறுப்பின் அருகில் வலி
உடலில் எந்த இடத்திலும் வலி ஏற்பட்டால், அது ஆரோக்கிய பிரச்சினையின் அறிகுறியாகும், மேலும் அதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். குறிப்பாக இது பிறப்புறுப்பு அல்லது அடிவயிற்றுக்கு அருகில் நடக்கும் போது, ஏதோ ஆபத்து இருப்பதாக அர்த்தம். உதாரணமாக, விந்தணுக்களின் வீக்கம், இரத்தப்போக்கு அல்லது உடலுறவின் போது வலி போன்றவை உங்கள் உடல் ஒரு பாலியல் தொற்றுநோய் அல்லது வேறொரு தொற்றுநோயை அனுபவிக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகளாகும்.



Click it and Unblock the Notifications