For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பால் குடிப்பதை உடனே நிறுத்த வேண்டும் என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்!

|

பால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பதை எவ்வித சந்தேகமும் இல்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பால் மிகவும் முக்கியமான பானம். என்ன தான் பால் எலும்புகள் மற்றும் பற்களுக்கு நல்லது என்றாலும், அந்த பாலைக் குடிப்பதால் பல வழிகளில் பிரச்சனைகள் ஏற்படலாம்.

பாலில் எவ்வளவு நன்மைகள் நிறைந்துள்ளதோ, அதே அளவில் மறைமுகமாக பிரச்சனைகளும் நிறைந்துள்ளன. அதற்காக பால் குடிப்பதை நிறுத்த வேண்டும் என்பதில்லை. பாலில் உள்ள நன்மைகளை எப்படி நாம் அறிந்திருக்கிறோமோ, அதேப் போல் அதனால் சந்திக்கும் பிரச்சனைகளையும் நாம் அறிந்திருக்க வேண்டும். கீழே எந்த மாதிரியான சூழ்நிலையில் ஒருவர் பால் குடிப்பதை நிறுத்த வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்த தெரிந்து கொள்ளுங்கள்.

MOST READ: நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கணுமா? இந்த ஆசனங்களை தினமும் செய்யுங்க போதும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெரும்பாலான நேரங்களில் சோர்வாக உணர்வது

பெரும்பாலான நேரங்களில் சோர்வாக உணர்வது

பாலில் ஓபியேட் மூலக்கூறுகள் உள்ளன. இது தான் ஒருவரைத் தூங்க வைக்கிறது. விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால், இது உண்மையில் ஒருவரைத் தூங்க வைப்பதில்லை. பால் ஜீரணிக்க கடினமாக இருப்பதால், அதை உடைக்க ஆற்றலை உருவாக்க முயற்சிப்பதன் மூலம், உடல் சோர்வடைகிறது. இதனால் ஒருவரது தூக்க சுழற்சி சீர்குலைக்கிறது. எனவே நீங்கள் நல்ல ஆழமான தூக்கத்தைப் பெற விரும்பினால், ட்ரிப்டோஃபேன் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளான ப்ராக்கோலி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, வாழைப்பழம் அல்லது ஆப்பிள் போன்றவற்றை சாப்பிட முயற்சிக்கலாம்.

பருக்கள் அதிகமாக வருவது

பருக்கள் அதிகமாக வருவது

பல ஆய்வுகள் கொழுப்பு நீக்கப்பட்ட பால் டீனேஜ் வயதினர் மற்றும் இளைஞர்களிடையே முகப்பருவின் தீவிரத்தை அதிகரிக்கிறது என்பதைக் காட்டுகிறது. கொழுப்பு நீக்கப்பட்ட அல்லது குறைந்த கொழுப்புள்ள பால் இன்சுலின் மற்றும் ஐ.ஜி.எஃப் -1 போன்ற ஹார்மோன்களில் செல்வாக்கு செலுத்துவதால், இது உங்கள் சரும ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கிறது. எனவே அதிக பருக்களைக் கொண்டவர்கள் பால் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

செரிமானம் சீராக இல்லாமல் இருப்பது

செரிமானம் சீராக இல்லாமல் இருப்பது

உலக மக்கட்தொகையில் 65-70% லாக்டோஸ் சகிப்புத்தன்மையால் பாதிக்கப்படுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. தாய்ப்பாலில் கூட லாக்டோஸ் அதிக அளவில் இருந்தாலும், பசுவின் பால் ஜீரணிக்க மிகவும் கடினமாக உள்ளது. எனவே வயிற்று உப்புசம், குமட்டல், வாய்வு, வயிற்றுப்போக்கு ஆகிய பிரச்சனைகளை வழக்கமாக கொண்டிருப்பவர்கள், பால் குடிப்பதை விட்டுவிடுவது நல்லது.

தசை மற்றும் மூட்டு வலிகள்

தசை மற்றும் மூட்டு வலிகள்

பால் அதிக அமிலத்தன்மை கொண்டதாக இருப்பதால், இது வீக்கத்தை ஏற்படுத்தி, மூட்டுக்களையும் தசைகளும் காயப்படுத்துகிறது என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. எனவே நீங்கள் உடற்பயிற்சி செய்து, உங்கள் உடல் வலி மற்றும் தசைகளில் ஏற்பட்ட காயங்களில் இருந்து விரைவில் மீள வேண்டுமானால், பால் குடிப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

மந்தமாக இருப்பது

மந்தமாக இருப்பது

மந்தமாக இருப்பது என்பது நோயல்ல. ஆனால் அது ஒரு அறிகுறி. இது நினைவாற்றல் பிரச்சனை, கவனம் செலுத்த முடியாமை மற்றும் மன தெளிவின்மை ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. வேறு பல காரணங்களால் இது ஏற்படுவதாக இருந்தாலும், பாலில் அதிகளவில் கேசீன் இருப்பதால், அதிகமாக பால் குடிப்பது மந்த நிலையைத் தூண்டிவிடலாம். பல ஆய்வுகளும் பால் குடிப்பதைக் குறைத்துக் கொள்வது மனச்சோர்வை எதிர்த்துப் போராட உதவும் என்று கூறுகிறது.

அலர்ஜி மற்றும் பிற சரும பிரச்சனைகள்

அலர்ஜி மற்றும் பிற சரும பிரச்சனைகள்

மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற லாக்டோஸ் சகிப்புத்தன்மைக்கான அறிகுறியும், பால் அலர்ஜிக்கான அறிகுறியும் ஒரே மாதிரியாக இருப்பதால், பலர் குழப்பமடையக்கூடும். 5% குழந்தைகளுக்கு பால் அலர்ஜி இருக்கும் போது, இளம்பருவத்திலும் இது உருவாகலாம். எக்ஸிமா போன்ற தோல் அழற்சி கூட பால் அலர்ஜியால் ஏற்படலாம். எனவே உங்களுக்கு அலர்ஜி பிரச்சனைகள் இருந்தால், பால் பொருட்களை உங்கள் உணவில் இருந்து நீக்கி பாருங்கள்.

உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை

உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை

இரத்த ஓட்டத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பது உணவில் இருந்து நேரடியாக வருகிறது. யு.எஸ்.டி.ஏ படி, 100 கிராம் பசும்பாலில் 10 கிராம் கொழுப்பு உள்ளது. எனவே ஒருவர் அதிகளவு பால் குடித்தால், அது உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

எலும்பு முறிவு அல்லது எளிதில் எலும்பு உடைவது

எலும்பு முறிவு அல்லது எளிதில் எலும்பு உடைவது

எலும்புகளின் வளர்ச்சி மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் மிகவும் முக்கியமான அடிப்படைச்சத்து. குறிப்பாக குழந்தைப் பருவத்தில் இச்சத்து மிகவும் இன்றியமையாதது. ஆனால் அனைத்து பால் பொருட்களும் அல்லது விலங்கு புரோட்டீன்களும் அமிலத்தன்மை கொண்டவை. இது கால்சியம் உட்கொள்ளலைக் குறைக்கும். ஒரு நாளைக்கு 3 டம்ளருக்கும் அதிகமான பால் குடிக்கும் பெண்களுக்கு எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

உடல்நலக் குறைவு ஏற்பட்டால் விரைவில் குணமாகாமல் இருப்பது

உடல்நலக் குறைவு ஏற்பட்டால் விரைவில் குணமாகாமல் இருப்பது

இந்த விஷயத்தில் பாலை மட்டும் குறை கூறக்கூடாது. ஏனெனில் மாடுகளுக்கு கொடுக்கப்படும் ஆன்டிபயாடிக்குகள் மறைமுகமாக நமது ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் என்று ஒரு ஆய்வு காட்டுகிறது. ஒரு புறம் விலங்குகளின் ஆரோக்கியத்திற்கு மருந்து இன்றியமையாதது. ஆனால் மறுபுறம் இது ஆன்டிமைக்ரோபியல் எதிர்ப்பு பாக்டீரியாக்களின் வளர்ச்சியை உண்டாக்குகிறது. மனித உடலுக்கு புரோபயோடிக்குகள் நன்மை விளைவிப்பவையாக இருக்கும் போது, இந்த ஆன்டிமைக்ரோபியல் எதிர்ப்பு பாக்டீரியா அப்படியே நேர்மாறானவை. எனவே ஒரு நோயில் இருந்து விரைவில் மீள வேண்டுமானால், பால் குடிப்பதை சற்று குறைத்துக் கொள்வது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Signs You Need to Stop Drinking Milk in Tamil

Here we listed some signs you need to stop drinking milk. Read on...