For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு மனசோர்வு என்பதே இல்லையாம்... உங்களுக்கு எல்லாமே வெற்றிதான்...!

மனச்சோர்வு ஒரு மோசமான விஷயமாக இருக்கலாம். உங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து உங்களை விலக்குவது முதல் உங்கள் மன அமைதியை அழிப்பது வரை, இது நீண்ட காலத்திற்கு மிகவும் ஆபத்தானது.

|

மனச்சோர்வு ஒரு மோசமான விஷயமாக இருக்கலாம். உங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து உங்களை விலக்குவது முதல் உங்கள் மன அமைதியை அழிப்பது வரை, இது நீண்ட காலத்திற்கு மிகவும் ஆபத்தானது. இது உங்கள் உடல் மற்றும் மிக முக்கியமாக உங்கள் மன ஆரோக்கியத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும், உடனடியாக அதனை சரிசெய்யா விட்டால் அது மிக ஆபத்தானதாக மாறக்கூடும்.

Signs You Are Healing From Depression

மனச்சோர்வின் அறிகுறிகளைக் கண்டறிந்து தற்காலிக சோகத்திலிருந்து விலகுவது முக்கியம் மட்டுமல்லாமல், உங்கள் முன்னேற்றத்தை அவ்வப்போது கண்காணிப்பதும் முக்கியம். இது உங்களை உற்சாகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், வெற்றியின் உணர்வையும் கொடுக்கும், மேலும் வாழ்க்கையில் உங்களை நன்றாகப் பயணிக்க வைக்கும். நீங்கள் மனசோர்வில் இருந்தால், நீங்கள் நேர்மறையான திசையில் முன்னேறியிருக்கிறீர்களா என்பதை அறிய விரும்பினால், அதையே குறிக்கும் சில அறிகுறிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோபத்தின் குறைவு

கோபத்தின் குறைவு

மனச்சோர்வு திடீர் மனநிலை மாற்றங்களைத் தூண்டும், உணர்ச்சிகளின் தீவிர வெடிப்பு முதல் கட்டுப்பாடற்ற கோபம் மற்றும் மூர்க்கத்தனம் வரை நொடிகளில் தோன்றும். மனச்சோர்வு மனநிலை மாற்றங்களால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு பகுத்தறிவுடன் சிந்திக்கும் திறன் இருக்காது, எனவே அவர்களின் செயல்களை நியாயப்படுத்த முடியவில்லை. இருப்பினும், நீங்கள் குணமடையத் தொடங்கியதும், நீங்கள் கோபத்தை மிகக் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருப்பீர்கள்.

குறைவான எரிச்சல்

குறைவான எரிச்சல்

எளிதில் எரிச்சல் அல்லது விரக்தி அடைவது மனச்சோர்வின் மற்றொரு அறிகுறியாகும். இருப்பினும், நீங்கள் அதிலிருந்து மீண்டு வருகையில், நீங்கள் மிகவும் நேர்மறையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வாய்ப்புள்ளது. உங்கள் முந்தைய குணத்தைப் போலல்லாமல், நீங்கள் மக்களின் முரண்பாடான கருத்துக்களுக்குத் செவி கொடுப்பீர்கள், மேலும் உங்கள் எரிச்சலை வெளிப்படுத்துவதை விட உரையாடலுக்குத் தயாராக இருப்பீர்கள்.

வேடிக்கையான செயல்களில் ஆர்வம் வளர்வது

வேடிக்கையான செயல்களில் ஆர்வம் வளர்வது

ஒருமுறை நீங்கள் நேர்மறையான மனநிலையுடன் பழகிவிட்டால், நீங்கள் வெவ்வேறு செயல்பாடுகளில் ஆர்வங்களை வளர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். உங்கள் பொழுதுபோக்குகள் அல்லது கலை திறமைகளை கவனித்துக்கொள்வது அல்லது உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் பயணம் மேற்கொண்டாலும், நீங்கள் வேடிக்கையான நடவடிக்கைகள் மற்றும் சாகசங்களுக்கு தயாராக இருப்பீர்கள்.

MOST READ: நீண்ட ஆயுளோட வாழ ஆசையா? அப்ப காலை உணவை இப்படி சாப்பிடுங்க போதும்...!

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனான தொடர்பு அதிகரிப்பு

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனான தொடர்பு அதிகரிப்பு

மனச்சோர்வு தீவிர தனிமை மற்றும் அந்நியப்படுத்தலுக்கு வழிவகுக்கும். ஒருவர் தனது சொந்த நிழலின் கம்பெனியுடன் மிகவும் வசதியாக வாழ்வதை உணர்கிறார். இருப்பினும், நீங்கள் மீண்டும் பாதையில் செல்லவும், மனச்சோர்வை எதிர்த்துப் போராடவும் முடிவு செய்திருந்தால், நீங்கள் மக்களுடன் பழகுவதைக் காண்பீர்கள். சமூகக் கூட்டங்கள் மற்றும் வீட்டு விருந்துகளின் அதிக நிகழ்வுகள் இருக்கும், மேலும் உங்கள் அன்புக்குரியவர்களின் முன்னிலையில் நீங்கள் ஆறுதலையும் அரவணைப்பையும் உணர்வீர்கள்.

மீண்டும் வேலைக்குத் திரும்புவது

மீண்டும் வேலைக்குத் திரும்புவது

மனச்சோர்விலிருந்து மீள்வது என்பது இயல்பு நிலைக்குச் செல்வது மற்றும் உங்கள் அன்றாட நடவடிக்கைகளுக்குச் செல்வது என்பதாகும், இதில் உங்கள் வேலையும் நிச்சயம் அடங்கும். உங்கள் மன இடையூறுகளை நீங்கள் சமாளிக்க ஆரம்பித்தவுடன், வேலைக்குச் செல்வதிலிருந்தும், உங்கள் வாழ்க்கையின் பொறுப்பை ஏற்றுக்கொள்வதிலிருந்தும் உங்களைத் தடுக்க எதுவும் இல்லை.

தனிப்பட்ட ஆரோக்கியத்தை பராமரிப்பது

தனிப்பட்ட ஆரோக்கியத்தை பராமரிப்பது

மனச்சோர்வு நம்மை நிறைய விஷயங்களை இழக்க வைக்கும். தனிப்பட்ட சுகாதாரம் அவற்றில் ஒன்று. இது நம்பிக்கையற்ற தன்மை மற்றும் இருத்தலியல் நெருக்கடியைத் தூண்டும் போது, உங்களையும் உங்கள் சுற்றியுள்ளவர்களையும் கவனித்துக்கொள்வதை நிறுத்த விரும்பலாம். ஆனால் உங்கள் சுய மதிப்பை நீங்கள் உணர்ந்தவுடன், உங்களையும் உங்கள் ஆரோக்கியத்தையும் சுகாதாரத்தையும் கவனிக்கத் தொடங்குவீர்கள்.

MOST READ: ஒரே வாரத்தில் 7 கிலோ வரை எடையை குறைக்க இந்த ஈஸியான டயட் போதுமாம் தெரியுமா?

உங்களுக்கான உணவைத் தயாரித்தல்

உங்களுக்கான உணவைத் தயாரித்தல்

சோகம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு ஆகியவை உங்கள் மன மற்றும் உடல் செயல்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இது உங்களை சோம்பேறியாக மாற்றி, உங்கள் வாழ்க்கை முறை தேர்வுகளில் மாற்றத்தைக் கொண்டு வரக்கூடும். நீங்கள் மனச்சோர்வடைந்தால், சமைப்பதைத் தவிர்ப்பதற்காக, வெளியில் இருந்து உணவை ஆர்டர் செய்யவோ அல்லது மீதமுள்ள உணவை சாப்பிடவோ அதிக வாய்ப்புள்ளது. இது உங்கள் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கிறது. ஆனால் நீங்கள் குணமடைய மற்றும் மீள ஆரம்பித்தவுடன், நீங்கள் திடீர் மாற்றத்தைக் காண்பீர்கள், மேலும் உங்கள் சொந்த உணவைத் தயாரிப்பது மற்றும் ஆரோக்கியமாக சாப்பிடுவது குறித்து அதிக ஆர்வத்துடன் இருப்பீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Signs You Are Healing From Depression

Here is the list of signs which say you are healing from depression.
Story first published: Thursday, February 11, 2021, 15:13 [IST]
Desktop Bottom Promotion