Just In
- 2 hrs ago
இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாம்...இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணுமாம்!
- 4 hrs ago
ஈரோடு சிக்கன் சிந்தாமணி
- 9 hrs ago
வார ராசிபலன் (26.06.2022-02.07.2022) - இந்த வாரம் நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது....
- 10 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது....
Don't Miss
- Movies
இதுவரை நான் நடிக்காத கேரக்டர்.. அட்லி படம் குறித்து மெய்சிலிர்த்த ஷாருக்கான்!
- News
அடேங்கப்பா! அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.50 கோடி வழங்கும் பாஜக - மகா. காங்கிரஸ் தலைவர் புகார்
- Finance
FASTag-ல் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்தி பணத்தைத் திருட முடியுமா?
- Technology
ஆப்பிள் இலவசமாக AirPods வழங்கும் Back to School ஆஃபர்.. என்ன செய்தால் 'இது' இலவசமாக கிடைக்கும்?
- Sports
ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு.. இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன்.. பிசிசிஐ பரிசீலினை
- Automobiles
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
உங்க காலில் இந்த அறிகுறிகள் இருந்தா...அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கணைய புற்றுநோயோட அறிகுறியாம்!
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, புற்றுநோயானது உலகளவில் மக்கள் இறப்புக்கான முக்கிய காரணமாகும். 2020 இல் கிட்டத்தட்ட 10 மில்லியன் மக்களின் இறப்புகளுக்கு காரணமாக புற்றுநோய் உள்ளதாக ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. இது நமக்கு மிகவும் அச்சம் தரக்கூடிய செய்தி. புற்றுநோய் பல்வேறு உறுப்புகள் அல்லது திசுக்களுக்கு கட்டுப்பாடில்லாமல் பரவக்கூடிய அசாதாரண உயிரணுக்களின் வளர்ச்சியுடன் தொடர்புடைய ஒரு நாள்பட்ட நோயாகும். இருப்பினும், புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்த முடியும். எனவே, ஒருவர் வழக்கமான உடல் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் புற்றுநோயைக் குறிக்கும் அறிகுறிகளைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்.
புற்றுநோயானது மற்ற உடல்நல சிக்கல்களின் வாய்ப்புகளை அதிகரிக்கலாம். இது உடலின் பல்வேறு பகுதிகளில் வலியைத் தூண்டும். உங்கள் காலிலும் குறிப்பிட்ட அறிகுறிகளை காட்டலாம். இக்கட்டுரையில் கணைய புற்றுநோய் உங்கள் காலில் எந்த மாதிரியான அறிகுறிகளை ஏற்படுத்தும் என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

காலில் இரத்தம் உறைதல்
கணைய புற்றுநோய் என்பது கணையத்தில் புற்றுநோய் செல்களை உருவாக்கு நிலையாகும். இது வயிற்றின் கீழ் பகுதியில் உள்ள ஒரு உறுப்பு. இது செரிமானத்திற்கு நல்ல நொதிகளை வெளியிடுகிறது மற்றும் இரத்த சர்க்கரையை நிர்வகிக்க உதவும் ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி (ஏசிஎஸ்) படி, சில புற்றுநோய்கள் உங்கள் இரத்த உறைவு அபாயத்தை அதிகரிக்கலாம். பொதுவாக கணையப் புற்றுநோயானது நோயாளியின் இரத்தத்தை தடிமனாக்கி, அதை மிகை-உறுப்பு நிலையாக மாற்றும் போக்கைக் கொண்டுள்ளது. இதனால்தான் சில சமயங்களில் கணையப் புற்றுநோயின் முதல் அறிகுறியாக காலில் ரத்தம் உறைவதை கூறுகிறார்கள். இந்த நிலை ஆழமான நரம்பு இரத்த உறைவு என்றும் அழைக்கப்படுகிறது.

ஆழமான நரம்பு இரத்த உறைவு (டிவிடி) அறிகுறிகள்
த்ரோம்பஸ் என்றும் அழைக்கப்படும் ஒரு இரத்த உறைவு, உடலில் உள்ள ஆழமான நரம்புகளில் ஒன்று. குறிப்பாக கால்களில் உருவாகும்போது ஆழமான நரம்பு த்ரோம்போசிஸ் ஏற்படுகிறது.
ஒரு காலில் வீக்கம் மற்றும் வலி, அரிதாக இரண்டு கால்களிலும் ஏற்படலாம்
பாதிக்கப்பட்ட பகுதியைச் சுற்றி சிவப்பான தோல் நிலை
வீங்கிய நரம்புகள்
காலில் கடினமான வலி
குறிப்பிட்ட, மிகவும் தீவிரமான நிகழ்வுகளில், உறைவு ஒரு துண்டு உடைந்து நுரையீரலுக்குச் சென்று, மார்பு வலி மற்றும் மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். இது நுரையீரல் தக்கையடைப்பு அல்லது பிஇ என்றும் அழைக்கப்படுகிறது.

கணைய புற்றுநோயுடன் தொடர்புடைய பிற அறிகுறிகள்
உடலில் இரத்த உறைவு உருவாவதைத் தவிர, கணைய புற்றுநோயானது மற்ற அறிகுறிகளைத் தோற்றுவிக்கும். கண்கள் மற்றும் தோலின் மஞ்சள் நிறமான மஞ்சள் காமாலை, கணைய புற்றுநோயுடன் மிகவும் பொதுவானது என்று புற்றுநோய் சங்கம் கூறுகிறது. இது கருமையான சிறுநீர், வெளிர் நிறத்தில் க்ரீஸ் மலம் மற்றும் தோல் அரிப்பு போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும்.

நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்
ஒருவர் குமட்டல் மற்றும் வாந்தி போன்ற உணர்வையும் அனுபவிக்கலாம். மற்றவர்கள் எதிர்பாராத எடை இழப்பு மற்றும் மோசமான பசியால் பாதிக்கப்படுகின்றனர். அரிதானது என்றாலும், கணையப் புற்றுநோயானது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்து, நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும். இதன் அறிகுறிகள் தாகம் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஆகியவை அடங்கும்.

சிகிச்சை விருப்பங்கள்
உங்களுக்கு கட்டி எங்கு உள்ளது? அது எவ்வளவு காலம் முன்னேறியுள்ளது? மற்றும் நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்? என்பதைப் பொறுத்து, உங்கள் சிகிச்சைத் திட்டம் உங்கள் மருத்துவரால் தீர்மானிக்கப்படும். சிகிச்சை விருப்பங்களில் சில அடங்கும். பெரும்பாலான புற்றுநோய்கள் ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்பட்டால், அதை சரி செய்யலாம்.

கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை
கதிர்வீச்சு சிகிச்சையானது புற்றுநோய் செல்களைக் கொல்ல உயர் கற்றை ஆற்றலைப் பயன்படுத்துகிறது.
கீமோதெரபி புற்றுநோய் செல்களை அகற்ற உதவும் மருந்துகளைப் பயன்படுத்துகிறது. இம்யூனோதெரபி என்பது புற்றுநோயை எதிர்த்துப் போராட உடலுக்கு உதவும் ஒரு சிகிச்சையாகும். இலக்கு சிகிச்சை ஒரு குறிப்பிட்ட மரபணு அல்லது புரதத்தைத் தாக்குகிறது. இது புற்றுநோயை வளர உதவுகிறது. புற்றுநோய் நிலையை பொறுத்து, அவற்றிற்கான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.