For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலையில எழுந்ததும் பல் துலக்கணுமா? இல்ல சாப்பிடத்துக்கு அப்புறம் பல் துலக்கணுமா? எது நல்லது தெரியுமா?

பல் அறிவியல் துறையில் சில நிபுணர்களின் கூற்றுப்படி, உங்கள் காலை உணவை உட்கொண்ட பிறகு பல் துலக்குவது உங்கள் பல் பற்சிப்பி மற்றும் ஒட்டுமொத்த வாய்வழி ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

|

நல்ல பல் துலக்குதல் பழக்கம் உங்கள் பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. உங்கள் புன்னகையின் பிரகாசத்தை பராமரிக்கவும் உதவுகிறது. உங்கள் பற்கள் வலுவாகவும், குழிவுகளிலிருந்து விடுபடவும், குறைந்தது 2 நிமிடங்களுக்கு தினமும் இரண்டு முறை பல் துலக்க பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் நீங்கள் எப்போது சரியாக பல் துலக்க வேண்டும் என்று தெளிவாக கோடிட்டுக் காட்டப்படவில்லை. காலை சுவாசப் பிரச்சினையைச் சமாளிக்கும் நம்மில் பெரும்பாலோர், படுக்கையில் இருந்து எழுந்தவுடன் வாயில் துர்நாற்றம் வீசுவதற்காக உடனடியாக வாஷ்ரூமுக்கு விரைகிறோம்.

Should you brush your teeth after breakfast or before it?

குழந்தை பருவத்திலிருந்தே நமக்கு கற்பிக்கப்பட்ட ஒரு பொதுவான பழக்கம் காலையில் எழுந்தவுடன் பல் துலக்குதல். ஆனால், இதை மாற்றி செய்பவர்களும் இருக்கின்றனர். அவர்கள் காலை உணவை சாப்பிட்ட பிறகு பற்களை சுத்தம் செய்வது அவர்களின் வாயை சுத்தப்படுத்தி மூச்சை புதுப்பிக்கும் என்று நம்புகிறார்கள். இந்த விஷயத்தில் ஒரு நிபுணர்களின் கருத்துக்கள் மிகவும் வேறுபட்டவை. சிலர் காலை உணவுக்கு முன் பல் துலக்குவதை ஆதரிக்கிறார்கள். மற்றவர்கள் அதை பின்னர் செய்ய பரிந்துரைக்கின்றனர். இரண்டின் நன்மை தீமைகளை பற்றி இக்கட்டுரையில் நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பல் துலக்க சரியான நேரம்

பல் துலக்க சரியான நேரம்

பல் அறிவியல் துறையில் சில நிபுணர்களின் கூற்றுப்படி, உங்கள் காலை உணவை உட்கொண்ட பிறகு பல் துலக்குவது உங்கள் பல் பற்சிப்பி மற்றும் ஒட்டுமொத்த வாய்வழி ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சில ஆய்வுகளின்படி, நீங்கள் இரவில் தூங்கும்போது, பிளேக் ஏற்படுத்தும் பாக்டீரியா உங்கள் வாயில் வேகமாகப் பெருகும், இது காலையில் உங்களுக்கு வாய் துர்நாற்றத்தை உண்டாக்குகிறது.

MOST READ: உங்க உடலில் இயற்கையாகவே ஆக்சிஜன் அளவு அதிகரிக்க நீங்க 'இத' செஞ்சா போதுமாம்...!

பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது

பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது

காலையில் ஃவுளூரைடு பற்பசையுடன் பற்களைக் கழுவுவது பிளேக் மற்றும் துர்நாற்றத்திலிருந்து விடுபட உதவுகிறது. மேலும், இது ஒரு தடையை உருவாக்குவதன் மூலம் உங்கள் பற்சிப்பினை அமிலத்திற்கு எதிராக பாதுகாக்கிறது. காலையில் துலக்குவது உங்கள் உமிழ்நீர் உற்பத்தியைத் தொடங்குகிறது. இது உணவு சாப்பிடும்போது வாயில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது.

காலை உணவுக்குப் பிறகு பல் துலக்குவதற்கான விதிகள்

காலை உணவுக்குப் பிறகு பல் துலக்குவதற்கான விதிகள்

சில பல் வல்லுநர்கள் முதல் உணவுக்குப் பிறகு பற்களை சுத்தம் செய்வதை பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் காலை உணவில் இருந்து உணவுத் துகள்களை உங்கள் வாயில் நீண்ட நேரம் விட்டுவிடுவது பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். உங்கள் காலை உணவை உட்கொண்ட பிறகு பற்களை சுத்தம் செய்ய நீங்கள் தேர்வுசெய்தால், அமில உணவுகளை உட்கொண்ட பிறகு குறைந்தது 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.

அமில உணவுகள்

அமில உணவுகள்

ரொட்டி, உலர்ந்த பழம், சிட்ரஸ் பழம், காபி அனைத்தும் அமிலத்தன்மை கொண்டவை. அவற்றை உட்கொண்டபின் பற்களை சுத்தம் செய்யும் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் பற்கள் மற்றும் பற்சிப்பி ஆகியவற்றைப் பாதுகாக்க சிறிது நேரம் காத்திருப்பது அவசியம்.

MOST READ: கொரோனாவிலிருந்து உங்கள பாதுகாக்க இஞ்சி, பூண்டுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து டீ போட்டு குடிங்க..!

பல் துலக்குவதற்கான சரியான வழி

பல் துலக்குவதற்கான சரியான வழி

நீங்கள் சரியாக செய்யாவிட்டால் இரண்டு முறை பல் துலக்குவது உதவியாக இருக்காது. உங்கள் பற்களை சுத்தம் செய்வதற்கான சரியான வழி பற்றி இங்கே காணலாம்.

படி 1: உங்கள் பிரஷை நனைத்து, அதில் ஒரு சிறிய அளவு ஃவுளூரைடு பற்பசையைச் சேர்க்கவும்.

படி 2: மெதுவாக, உங்கள் பற்களின் ஒவ்வொரு மூலையிலும் பிரஷை நகர்த்தவும். 2 நிமிடங்கள் செய்து அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம்.

சரியான வழி

சரியான வழி

படி 3: எஞ்சியிருக்கும் பற்பசையைத் துப்பி, வாயில் தண்ணீரில் ஊற்றி கொப்பளிக்க வேண்டும்.

படி 4: பாக்டீரியாவை சுத்தம் செய்ய அல்லது நாக்கு ஸ்கிராப்பரைப் பயன்படுத்த உங்கள் நாக்கைத் துலக்குங்கள்.

படி 5: நன்றாக துலக்கிவிட்ட, பின்னர் மவுத்வாஷைப் பயன்படுத்தவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Should you brush your teeth after breakfast or before it?

Here we are talking about the Should you brush your teeth after breakfast or before it.
Story first published: Wednesday, May 12, 2021, 16:36 [IST]
Desktop Bottom Promotion